2022 கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.6.24 லட்சம்

இந்தியா கவாஸாகி மோட்டார்ஸ் நிறுவனம் 2022 கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கிளை ரூ.6.24 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கவாஸாகி பைக்கை பற்றிய விரிவான விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.6.24 லட்சம்

இந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கவுள்ள இந்த கவாஸாகி பைக் மிக முக்கிய அப்கிரேடாக புதிய ‘கேண்டி லைம் க்ரீன் டைப் 3' என்கிற நிறத்தேர்வை பெற்று வந்துள்ளது. இந்த பெயிண்ட்டில் கருப்பு & பச்சை நிறங்கள் அடங்கியுள்ளன.

2022 கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.6.24 லட்சம்

பைக்கின் சேசிஸ் மேட் பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் பச்சை நிற தொடுதல்களை பெட்ரோல் டேங்க், ஹெட்லேம்ப் கௌல், சக்கர ரிம்கள் மற்றும் பைக்கின் பின்பக்கத்திலும் பார்க்க முடிகிறது. இவை தவிர்த்து மோட்டார்சைக்கிளின் மற்ற பாகங்கள் அனைத்தும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

2022 கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.6.24 லட்சம்

இந்த புதிய லைம் க்ரீன் நிறத்தில் புதிய கவாஸாகி இசட்650 பைக் டெலிவிரி கொடுக்கும் பணிகள் அடுத்த செப்டம்பரில் இருந்து துவங்கவுள்ளன. புதிய பெயிண்ட் தேர்வினால் இசட்650 பைக்கின் விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்நுட்ப அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.

2022 கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.6.24 லட்சம்

ஜப்பானை சேர்ந்த கவாஸாகி மோட்டார்சைக்கிள் பிராண்டில் இருந்து சமீபத்தில், கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி தான் அப்டேட் செய்யப்பட்ட நிஞ்சா 650 என்ற ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள் களமிறக்கப்பட்டது. இதன் விலை ரூ.6.61 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய அப்கிரேடாக இதற்கு புதியதாக இரு நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

2022 கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.6.24 லட்சம்

இந்த ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளை தொடர்ந்து தற்போது அதன் நாக்டு வெர்சனான இசட்650 கிட்டத்தட்ட அதே விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் 2022 கவாஸாகி இசட்650 பைக்கின் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை.

2022 கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.6.24 லட்சம்

இதனால் வழக்கமான 649சிசி, இணையான-இரட்டை என்ஜின் தான் புதிய இசட்650 மாடலிலும் தொடரப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-இல் 67 பிஎச்பி மற்றும் 6,700 ஆர்பிஎம்-இல் 64 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

2022 கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.6.24 லட்சம்

டிரான்ஸ்மிஷன் அமைப்பாக இந்த கவாஸாகி மோட்டார்சைக்கிள், ஸ்லிப்பர் உதவி க்ளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸை பெறுகிறது. சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் 125மிமீ ட்ராவல் உடன் 41மிமீ-இல் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.

பின்பக்கத்தில் 130மிமீ ட்ராவல் உடன் ப்ரீலோடு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யக்கூடிய மோனோஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க முன்சக்கரத்தில் இரட்டை-பிஸ்டன் காலிபர் உடன் 300மிமீ-இல் இரட்டை பெடல் டிஸ்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

2022 கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.6.24 லட்சம்

மறுபக்கம் பின்சக்கரத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் உடன் 220மிமீ பெடல் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸாஸ்ட் குழாய் பைக்கிற்கு அடிப்பகுதியில் கொண்டுவரப்பட்டுள்ளது. இருக்கை அமைப்பு பிளவுப்பட்ட வடிவில் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க் 15 லிட்டர் கொள்ளளவில் உள்ளது.

2022 கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.6.24 லட்சம்

இவற்றுடன் கவாஸாகி இசட்650 பைக்கில் வழக்கமாக வழங்கப்படும் தொழிற்நுட்ப அம்சங்களை தான் 2022 இசட்650 மோட்டார்சைக்கிளும் பெற்றுள்ளது. இந்த வகையில் 4.3 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆனது அப்படியே தொடரப்பட்டுள்ளது.

2022 கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.6.24 லட்சம்

ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி கொண்ட இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை ப்ளூடூத் வாயிலாக, கவாஸாகியின் ‘ரிடியோலாஜி' செயலி மூலம் ஓட்டுனர் தனது ஸ்மார்ட்போன் உடன் இணைத்து கொள்ளலாம். இதனால் பயண வரலாறு, ஓடோ மற்றும் பயண குறிப்புகளை ரைடர் தனது மொபைல் போனின் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.

2022 கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.6.24 லட்சம்

கூர்மையான லைன்களுடன் மிகவும் நேர்த்தியாக தோற்றமளிக்கும் புதிய கவாஸாகி இசட்650 பைக்கானது கவாஸாகியின் சுகோமி டிசைன் சித்தாந்தத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் தனது மோட்டார்சைக்கிள்கள் கவனத்தை பெற இந்த சிந்தாந்தம் உதவியாக இருக்கும் என கவாஸாகி நிறுவனம் நம்பிக்கையாக உள்ளது.

2022 கவாஸாகி இசட்650 மோட்டார்சைக்கில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.6.24 லட்சம்

இந்தியாவில் கவாஸாகி இசட்650 பைக்கிற்கு போட்டியாக ட்ரையம்ப் ட்ரைடெண்ட் 660 மற்றும் ஹோண்டா சிபி650ஆர் பைக்குகள் தற்சமயம் விற்பனையில் உள்ளன. 2022 இசட்650 பைக்கின் விலை மாற்றப்பட்டது போன்று சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிஞ்சா 650 பைக்கின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2022 Kawasaki Z650 Launched In India; Priced At ₹ 6.24 Lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X