2022 இசட்900 மோட்டார்சைக்கிளை வெளியிட்டது கவாஸாகி!! இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பிருக்கா?

2022 இசட்900 ஸ்ட்ரீட்ஃபைட்டர் மோட்டார்சைக்கிள் பற்றிய விபரங்களை கவாஸாகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 இசட்900 மோட்டார்சைக்கிளை வெளியிட்டது கவாஸாகி!! இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பிருக்கா?

அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கவாஸாகி மோட்டார்சைக்கிளின் விலை 9,099 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.6.62 லட்சமாகும்.

2022 இசட்900 மோட்டார்சைக்கிளை வெளியிட்டது கவாஸாகி!! இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பிருக்கா?

அப்டேட்டாக 2022 கவாஸாகி இசட்900 பைக் இரு புதிய நிறத்தேர்வுகளை பெற்றுள்ளது. மெட்டாலிக் ஸ்பார்க் ப்ளாக் உடன் பேர்ல் ரோபோட்டிக் வெள்ளை மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் ப்ளாக் உடன் மெட்டாலிக் மேட் ட்விலைட் என்பன இந்த இரு நிறங்களாகும்.

2022 இசட்900 மோட்டார்சைக்கிளை வெளியிட்டது கவாஸாகி!! இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பிருக்கா?

இந்த புதிய நிறத்தேர்வுகளை தவிர்த்து பைக்கின் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் வழக்கமான 948சிசி, இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் தான் புதிய இசட்900 பைக்கிலும் தொடரப்பட்டுள்ளது.

2022 இசட்900 மோட்டார்சைக்கிளை வெளியிட்டது கவாஸாகி!! இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பிருக்கா?

அதிகப்பட்சமாக 123 பிஎச்பி மற்றும் 96.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 41மிமீ-இல் தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

2022 இசட்900 மோட்டார்சைக்கிளை வெளியிட்டது கவாஸாகி!! இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பிருக்கா?

இந்த சஸ்பென்ஷன் பாகங்கள் ரீபாண்ட் டேம்பிங் ஆகக்கூடியவைகளாக மட்டும் இல்லாமல் ஸ்ப்ரிங் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதியுடனும் உள்ளன. ப்ரேக்கிங்கிற்கு முன் சக்கரத்தில் 300மிமீ-இல் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 250மிமீ-இல் ரோட்டாரும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ப்ரேக்குகள் ஏபிஎஸ் உடன் செயல்படும்.

2022 இசட்900 மோட்டார்சைக்கிளை வெளியிட்டது கவாஸாகி!! இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பிருக்கா?

இரு சக்கரத்திலும் டன்லுப் ஸ்போர்ட்ஸ் மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் இந்த 2022 மோட்டார்சைக்கிளில் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், இரு பவர் மோட்கள் மற்றும் நான்கு ரைடிங் மோட்களை கவாஸாகி நிறுவனம் வழங்கியுள்ளது.

2022 இசட்900 மோட்டார்சைக்கிளை வெளியிட்டது கவாஸாகி!! இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பிருக்கா?

மற்றப்படி இசட்900 மாடலின் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் எந்த மாற்றமும் இல்லை. 4.3 இன்ச் வண்ண திரையுடன் உள்ள இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை ப்ளூடூத் மூலமாக ஸ்மார்ட்போனின் ‘ரிடியோலாஜி' செயலி உடன் இணைக்க முடியும்.

2022 இசட்900 மோட்டார்சைக்கிளை வெளியிட்டது கவாஸாகி!! இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பிருக்கா?

தற்சமயம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2022 கவாஸாகி இசட்900 பைக் இந்திய சந்தையிலும் நடப்பு ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்தியாவில் சமீபத்தில் கவாஸாகி அறிமுகப்படுத்திய 2021 நிஞ்சா 300 பைக்கின் டெலிவிரி பணிகள் கடந்த மாதத்தில் தான் துவங்கப்பட்டன.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 9, 2021, 22:28 [IST]
English summary
India-bound 2022 Kawasaki Z900 breaks cover in new colours.
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+