2021 கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளீர்களா? உங்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்... டெலிவிரிகள் ஆரம்பமானது!!

2021 கவாஸாகி நிஞ்சா 300 பைக்குகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கவாஸாகியின் டிவிட்டர் பதிவை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளீர்களா? உங்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்... டெலிவிரிகள் ஆரம்பமானது!!

2021 கவாஸாகி நிஞ்சா 300 பைக் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த பைக்கிற்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கின்றன.

2021 கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளீர்களா? உங்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்... டெலிவிரிகள் ஆரம்பமானது!!

இந்த நிலையில் தான் தற்போது புதிய நிஞ்சா 300 பைக்கின் டெலிவிரிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதனை கவாஸாகி இந்தியா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2021 கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளீர்களா? உங்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்... டெலிவிரிகள் ஆரம்பமானது!!

2021 நிஞ்சா 300 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3.18 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறையில் இருந்து புதிய தலைமுறை நிஞ்சா 300 பைக்கின் தோற்றத்திலும் ஸ்டைலிலும் பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

2021 கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளீர்களா? உங்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்... டெலிவிரிகள் ஆரம்பமானது!!

ஏனெனில் பைக்கில் மிக முக்கியமான அப்கிரேட் என்ஜின் அமைப்பில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது. நிஞ்சா 300 பைக்கின் 296சிசி, இணையான-இரட்டை, லிக்யுடு-கூல்டு, 8-வால்வு என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

2021 கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளீர்களா? உங்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்... டெலிவிரிகள் ஆரம்பமானது!!

அதிகப்பட்சமாக 11,000 ஆர்பிஎம்-இல் 38.4 பிஎச்பி மற்றும் 10,000 ஆர்பிஎம்-இல் 26.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பிஎஸ்6 என்ஜின் உடன் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன், ஸ்லிப் & உதவி க்ளட்ச் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

2021 கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளீர்களா? உங்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்... டெலிவிரிகள் ஆரம்பமானது!!

வழக்கமான டைமண்ட் வகையை சேர்ந்த இரும்பு ஃப்ரேமில் தயாரிக்கப்பட்டு வருகின்ற 2021 நிஞ்சா 300 பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 37மிமீ-இல் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் சக்கரத்தில் 5 விதங்களாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.

2021 கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளீர்களா? உங்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்... டெலிவிரிகள் ஆரம்பமானது!!

இவற்றுடன் எண்டூரன்ஸ் நிறுவனத்தின் ப்ரேக்குகளும் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் உடன் முந்தைய தலைமுறையில் இருந்து அப்படியே தொடரப்பட்டுள்ளன. செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலில் எந்த மாற்றமும் இல்லை.

2021 கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளீர்களா? உங்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்... டெலிவிரிகள் ஆரம்பமானது!!

புதிய நிஞ்சா 300 பைக்கில் 17 இன்ச்சில் சக்கரங்கள் எம்.ஆர்.எஃப் நைலோக்ரிப் ஜாப்பர் டயர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியதுதான், பைக்கின் ஸ்டைலில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் புதிய நிறத்தேர்வுகளும், புதிய டிகால்களும் புதிய நிஞ்சா 300 பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன.

2021 கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை புக் செய்துள்ளீர்களா? உங்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்... டெலிவிரிகள் ஆரம்பமானது!!

இதற்கெல்லாம் சேர்த்து, 2021 நிஞ்சா 300 பைக்கின் விலை கிட்டத்தட்ட ரூ.20,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பமானாலும், முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுப்பது கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் சில மாநிலங்களில் தாமதமாகலாம்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2021 Kawasaki Ninja 300 Deliveries Begin In India.
Story first published: Friday, May 14, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X