வீட்டிலேயே ரெடி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வீடியோ பாத்து நீங்களும் கத்துக்கோங்க! ஈசியா செய்திடலாம்!

இளைஞர் ஒருவர் வீட்டிலேயே வைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம் வாங்க.

வீட்டிலேயே ரெடி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இந்த வீடியோ பாத்து நீங்களும் கத்துக்கோங்க! ஈசியா செய்திடலாம்!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், வீட்டிலேயே வைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராக மின் வாகன பயன்பாட்டை திணிக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வரும்நிலையில் தனக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே இளைஞரே உருவாக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிலேயே ரெடி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இந்த வீடியோ பாத்து நீங்களும் கத்துக்கோங்க! ஈசியா செய்திடலாம்!

வாகனங்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் ராகேஷ் பாபு. இவரே வீட்டிலேயே வைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியவர் ஆவார். இவர் இதுபோன்று வீட்டிலேயே வைத்து வாகனங்களை உருவாக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் அவர் வாகனத்தை உருவாக்கியிருக்கின்றார்.

வீட்டிலேயே ரெடி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இந்த வீடியோ பாத்து நீங்களும் கத்துக்கோங்க! ஈசியா செய்திடலாம்!

முன்னர் இருவர் மட்டும் செல்லக்கூடிய வகையிலான ஃபோக்ஸ்வேகன் பீட்டில் ஸ்டைலிலான வாகனத்தை அவர் வடிவமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்தே தற்போது தனக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தானே அவர் உருவாக்கியிருக்கின்றார்.

வீட்டிலேயே ரெடி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இந்த வீடியோ பாத்து நீங்களும் கத்துக்கோங்க! ஈசியா செய்திடலாம்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, விண்டேஜ் ரக ஸ்கூட்டர் விஜய் சூப்பர் இருசக்கர வாகனத்தின் டிசைன் தாத்பரியத்தில் அவர் உருவாக்கியிருக்கின்றார். இதற்கான பேனல் மற்றும் பாகங்கள் சிலவற்றை அவர் வடிவமைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி வாகனத்திற்கான வண்ண பூச்சு வேலையையும் அவரே செய்திருக்கின்றார்.

வீட்டிலேயே ரெடி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இந்த வீடியோ பாத்து நீங்களும் கத்துக்கோங்க! ஈசியா செய்திடலாம்!

ஆகையால், பல வேலைகளில் கற்று தேர்ந்த நபராக ராகேஷ் பாபு இருக்கின்றார். இந்த திறனைக் கொண்டே புதிதாக விஜய் சூப்பர் ஸ்கூட்டர் ஸ்டைலிலான மின்சார ஸ்கூட்டரை அவர் உருவாக்கியிருக்கின்றார். ஸ்கூட்டருக்கு வான் நீல நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டருக்கு பிரீமியம் தர தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்பாக, சாலையில் அந்த வாகனம் செல்லும்போது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஸ்கூட்டருக்கான ஃப்ரேம், மின் மோட்டார் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவை வேறொரு மின்சார வாகனத்தில் இருந்து பெறப்பட்டவை ஆகும். இதைக்கொண்டே ராகேஷ் பாபு தனது வீட்டிலேயே வைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளார்.

ஆனால், எந்த நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் என்பது பற்றிய தகவலை அவர் வெளியிடவில்லை. ஸ்கூட்டரில் மின்சார திறனுக்காக 48வோல்ட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்தால் எத்தனை கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்ற தகவலையும் அவர் வெளியிடவில்லை. மேலும், இதன் வேகம் குறித்த தகவலும் வெளியிடப்பவில்லை. அதிகபட்சம் இதன் டாப் ஸ்பீடு 25கிமீட்டருக்கும் குறைவாக இருக்கும் கணிக்கப்படுகின்றது.

விஜய் சூப்பர் ஓர் இரு ஸ்ட்ரோக் ஸ்கூட்டராகும். இது 1970 மற்றும் 80ஸ்களில் சிறந்த விற்பனையான ஸ்கூட்டரும்கூட. இந்த ஸ்கூட்டரைதான் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்றதற்காக ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் அரசு பரிசாக வழங்கியது. 1983ம் ஆண்டே இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது.

Most Read Articles

English summary
Kerala Youngster Made Electric Scooter From Scratch. Read In Tamil.
Story first published: Wednesday, July 7, 2021, 18:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X