அதிரடி காட்டும் கோமகி! ஒரே நேரத்தில் 3மின்சார டூ-வீலர்கள் இந்தியாவில் அறிமுகம்! இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா?

ஆரம்பநிலை மின்வாகன உற்பத்தி நிறுவனமான கோமகி மூன்று புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அதிரடி காட்டும் கோமகி! ஒரே நேரத்தில் 3 மின்சார டூ வீலர்கள் இந்தியாவில் அறிமுகம்... இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா?

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்வாகன உற்பத்தி நிறுவனமான கோமகி, அதன் அதிவேக மூன்று மின்சார இருசக்கர வாகனங்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ஒன்று மோட்டார்சைக்கிள் ஆகும். பிற இரண்டுமே ஸ்கூட்டர்கள் ஆகும்.

அதிரடி காட்டும் கோமகி! ஒரே நேரத்தில் 3 மின்சார டூ வீலர்கள் இந்தியாவில் அறிமுகம்... இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா?

இந்நிறுவனம் ஓர் ஆரம்பநிலை மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். எனவேதான் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் நாட்டின் ஒரு சில முக்கியமான நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த நிலையிலேயே டிஎன்95, எஸ்இ மற்றும் எம்5 ஆகிய மூன்று மின்சார இருசக்கர வாகனங்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிரடி காட்டும் கோமகி! ஒரே நேரத்தில் 3 மின்சார டூ வீலர்கள் இந்தியாவில் அறிமுகம்... இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா?

இதில், டிஎன்95 மாடலுக்கு ரூ. 98 ஆயிரம் என்ற விலையையும், எஸ்இ மாடலுக்கு 96 என்ற விலையையும் நிறுவனம் நிர்ணயித்திருக்கின்றது. இதேபோன்று, எம்5 என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் மின்சார மோட்டார்சைக்கிளுக்கு ரூ. 99 ஆயிரம் என்ற விலையை அது நிர்ணயித்திருக்கின்றது.

அதிரடி காட்டும் கோமகி! ஒரே நேரத்தில் 3 மின்சார டூ வீலர்கள் இந்தியாவில் அறிமுகம்... இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா?

மேற்கூறிய அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பு மட்டுமே ஆகும். தற்போது அறிமுகமாகியிருக்கும் வாகனங்களில் டிஎன்95 என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கும் மின்சார ஸ்கூட்டர் குடும்பத்தினருக்கான வாகனம் என்று கூறப்படுகின்றது. சிறிய ஸ்டோரேஜ் பாக்ஸ் இந்த வாகனத்தில் காணப்படுகின்றது.

அதிரடி காட்டும் கோமகி! ஒரே நேரத்தில் 3 மின்சார டூ வீலர்கள் இந்தியாவில் அறிமுகம்... இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா?

மார்க்கெட் மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்தும்வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. எனவேதான் இதனை குடும்பத்தினருக்கு மின்சார இருசக்கர வாகனம் என கோமகி கூறுகின்றது. ஸ்டோரேஜ் பாக்ஸ் மட்டுமின்றி வாகனத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு வளையம் போன்று ஸ்டீல் கம்பி நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது.

அதிரடி காட்டும் கோமகி! ஒரே நேரத்தில் 3 மின்சார டூ வீலர்கள் இந்தியாவில் அறிமுகம்... இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா?

இந்த ஸ்கூட்டர் 100-150 வரையிலான ரேஞ்ஜ் திறனில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் இடம் பெற்றிருக்கும் பேட்டரியை வேண்டுமெனில் தனியாக கழட்டி சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த வசதி கொண்ட லித்தியம் அயன் பேட்டரியே ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதிரடி காட்டும் கோமகி! ஒரே நேரத்தில் 3 மின்சார டூ வீலர்கள் இந்தியாவில் அறிமுகம்... இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா?

இதுமட்டுமின்றி முழு டிஜிட்டல் திறன் கொண்ட வண்ண திரை, பார்க் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பம் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மின்சார ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்றன.

அதிரடி காட்டும் கோமகி! ஒரே நேரத்தில் 3 மின்சார டூ வீலர்கள் இந்தியாவில் அறிமுகம்... இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா?

இதேபோன்று பல்வேறு சிறப்பு வசதிகளைப் பெற்ற மாடலாகவே எஸ்இ எனும் பெயரில் அறிமுகமாகியிருக்கும் மின்சார ஸ்கூட்டர் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வசதிகளுடன் கோமகி உருவாக்கியிருக்கின்றது. இதில் சிறப்பு வசதிகளாக பார்க்கிங் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், செல்ஃப் டையக்னாஸிஸ் மற்றும் வண்ண திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

அதிரடி காட்டும் கோமகி! ஒரே நேரத்தில் 3 மின்சார டூ வீலர்கள் இந்தியாவில் அறிமுகம்... இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா?

சிறப்பம்சத்தில் டிஎன்95 மின்சார ஸ்கூட்டருடன் எஸ்இ மாடல் மின்சார ஸ்கூட்டர் ஒத்து போகும் வகையில் இருக்கின்றது. ஆனால், இதன் ரேஞ்ஜ் விகிதம் சற்று குறைவாக இருக்கின்றது. எஸ்இ மின்சார ஸ்கூட்டர் 100-120 எனும் ரேஞ்ஜ் திறனிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அதிரடி காட்டும் கோமகி! ஒரே நேரத்தில் 3 மின்சார டூ வீலர்கள் இந்தியாவில் அறிமுகம்... இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா?

எம்5 மின்சார பைக்; இந்த பைக்கிலும் பிரித்தெடுக்கக் கூடிய பேட்டரியையே கோமகி நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 முதல் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. இப்பைக்கினை இரு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க கோமகி திட்டமிட்டிருக்கின்றது.

அதிரடி காட்டும் கோமகி! ஒரே நேரத்தில் 3 மின்சார டூ வீலர்கள் இந்தியாவில் அறிமுகம்... இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா?

கோல்டு மற்றும் சில்வர் நிற தேர்வுகளில் இந்த மின்சார விற்பனைக்குக் கிடைக்கும். இப்பைக் பற்றிய முழுமையான தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த சுவாரஷ்ய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, அதிகாரப்பூர்வ ரேஞ்ஜ் மற்றும் வேகம் உள்ளிட்டவைப் பற்றிய தகவல்கள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Komaki Launches 3 High Speed Electric two wheelers In India: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Wednesday, January 20, 2021, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X