ஹை-ஸ்பீடில் போகும்... அதிநவீன வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

கோமகி நிறுவனத்தின் வெனிஸ் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹை-ஸ்பீடில் போகும்... அதிநவீன வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

டெல்லியை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம் கோமகி (Komaki). புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கோமகி நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வெனிஸ் (Venice) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஹை-ஸ்பீடில் போகும்... அதிநவீன வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பொதுவாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறைவான வேகத்தில் பயணம் செய்வதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் கோமகி நிறுவனம் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள வெனிஸ் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். எனவே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வாடிக்கையாளர்களுக்கு வேகம் ஒரு பிரச்னையாக இருக்காது.

ஹை-ஸ்பீடில் போகும்... அதிநவீன வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

புதிய வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 10 வண்ணங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், ரிப்பேர் ஸ்விட்ச் மற்றும் மொபைல் கனெக்டிவிட்டி உள்பட பல்வேறு வசதிகள், கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹை-ஸ்பீடில் போகும்... அதிநவீன வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடவசதி நன்றாக இருக்கும் எனவும் கோமகி நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன் கூடுதல் ஸ்டோரேஜ் பாக்ஸ் வசதியும் வழங்கப்பட்டிருக்கும். இதுகுறித்து கோமகி எலெக்ட்ரிக் டிவிஷனின் இயக்குனர் கன்ஜன் மல்ஹோத்ரா கூறுகையில், ''தனித்துவமான டிசைன் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் கலவை, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஹை-ஸ்பீடில் போகும்... அதிநவீன வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

மொத்தம் 10 அட்டகாசமான வண்ணங்களில் கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பகுதியில் நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ரிப்பேர் ஸ்விட்ச் உள்பட பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்படும்.

ஹை-ஸ்பீடில் போகும்... அதிநவீன வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு பொருத்தமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இது இருக்கும்'' என்றார். ஆனால் வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற தேதியை கோமகி நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. அனேகமாக நடப்பு ஆண்டு இறுதிக்குள் வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹை-ஸ்பீடில் போகும்... அதிநவீன வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதற்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பேட்டரி மற்றும் மோட்டார் உள்பட தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த தகவல்களையும் கோமகி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனவே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்? என்பதை கணிப்பதும் கடினமானது.

ஹை-ஸ்பீடில் போகும்... அதிநவீன வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

எனினும் 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் கொஞ்ச காலம் பொருத்திருந்தால் இந்த கோமகி வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த முழுமையான தகவல்கள் அனைத்தும் நமக்கு கிடைத்து விடும்.

ஹை-ஸ்பீடில் போகும்... அதிநவீன வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எஸ்1 என ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் நமது எதிர்காலம் என்பதால், வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

ஹை-ஸ்பீடில் போகும்... அதிநவீன வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பெட்ரோல், டீசல் விலையும் வாடிக்கையாளர்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்த்தி வருகிறது. அத்துடன் அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டைதான் ஊக்குவித்து கொண்டுள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசுபாடு ஆகிய 2 மிக முக்கியமான பிரச்னைகளுக்கு முடிவு கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

ஹை-ஸ்பீடில் போகும்... அதிநவீன வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் கார்களும் தற்போது வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி, டாடா டிகோர் எலெக்ட்ரிக், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்கள் இந்தியாவில் பிரபலமாக இருக்கின்றன. இதில் குறிப்பாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
Komaki venice electric scooter to launch soon in india check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X