வெறும் 180 கிலோ எடையில் 1290சிசி கேடிஎம் சூப்பர் ட்யூக் பைக்!! இன்று முதல் விற்பனையை துவங்கியது!

கடந்த மார்ச் மாதத்தில் கேடிஎம் 1290 சூப்பர் ட்யுக் ஆர்ஆர் பைக்கின் முக்கியமான சில அம்சங்கள் தெரியவந்து இருந்தன. இந்த நிலையில் தற்போது இந்த பைக்கை பற்றிய விபரங்களை கேடிஎம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 180 கிலோ எடையில் 1290சிசி கேடிஎம் சூப்பர் ட்யூக் பைக்!! இன்று முதல் விற்பனையை துவங்கியது!

இன்று முதல் சர்வதேச சந்தைகளில் விற்பனையை துவங்கவுள்ள 2021 கேடிஎம் 1290 சூப்பர் ட்யுக் ஆர்ஆர் பைக்கில் 1,301சிசி எல்சி8 75-கோண வி-இரட்டை என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

வெறும் 180 கிலோ எடையில் 1290சிசி கேடிஎம் சூப்பர் ட்யூக் பைக்!! இன்று முதல் விற்பனையை துவங்கியது!

அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 182 பிஎஸ் மற்றும் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக்கின் மொத்த எடை 180 கிலோ ஆகும். இந்த வகையில் பார்த்தோமேயானால், ஆற்றல் & எடை 1:1 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.

வெறும் 180 கிலோ எடையில் 1290சிசி கேடிஎம் சூப்பர் ட்யூக் பைக்!! இன்று முதல் விற்பனையை துவங்கியது!

இதன் என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆனது பை-டைக்ரஷ்னல் விரைவு ஷிஃப்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறந்த த்ரோட்டில் செயல்பாட்டிற்காக இந்த சூப்பர் ட்யுக் பைக்கில் கேடிஎம் நிறுவனம் புதிய விரைவு ஷிஃப்டரை இணைத்துள்ளது.

வெறும் 180 கிலோ எடையில் 1290சிசி கேடிஎம் சூப்பர் ட்யூக் பைக்!! இன்று முதல் விற்பனையை துவங்கியது!

இது 65-டிகிரியில் ஓப்பனிங் கோணத்தை (கேடிஎம் 1290 சூப்பர் ட்யுக் ஆர் பைக்கை காட்டிலும் 7-டிகிரி குறைவு) கொண்டுள்ளது. பைக்கின் பெரும்பான்மையான பாகங்களின் தயாரிப்பில் கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டுள்ளதால் பைக்கின் எடை குறைவாக வந்துள்ளது.

வெறும் 180 கிலோ எடையில் 1290சிசி கேடிஎம் சூப்பர் ட்யூக் பைக்!! இன்று முதல் விற்பனையை துவங்கியது!

இந்த கார்பன் ஃபைபர் பாகங்களில் முன்பக்க & பின்பக்க ஃபெண்டர், கார்பன் அடிப்பக்க ட்ரே உடன் புதிய துணை ஃப்ரேம், பின்பக்க கௌல் மற்றும் முன்பக்க ப்ரேக்கை குளிர்விப்பான் உள்ளிட்டவை அடங்குகின்றன.

வெறும் 180 கிலோ எடையில் 1290சிசி கேடிஎம் சூப்பர் ட்யூக் பைக்!! இன்று முதல் விற்பனையை துவங்கியது!

அதேநேரம் டைட்டானியத்தால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள அக்ராபோவிக் எக்ஸாஸ்ட் சிஸ்டம் மற்றும் அதன் கார்பன் ஃபைபர் மூடியும் பைக்கின் எடையை குறைக்க உதவியுள்ளன. எடை குறைவான லித்தியம்- இரும்பு பேட்டரி பைக்கின் எடையில் கிட்டத்தட்ட 2.5 கிலோ வரையில் குறைத்துள்ளது.

வெறும் 180 கிலோ எடையில் 1290சிசி கேடிஎம் சூப்பர் ட்யூக் பைக்!! இன்று முதல் விற்பனையை துவங்கியது!

ரீடிசைனிலான துணை ஃப்ரேம் புதிய டெயில் பகுதி மற்றும் டெயில்லைட்டிற்கு வழிவகை செய்துள்ளது. இந்த கேடிஎம் ட்யூக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் மழை, ஸ்ட்ரீட், செயல்திறன் மற்றும் ட்ராக் என ஐந்து விதமான ரைடிங் மோட்களை பெறலாம்.

வெறும் 180 கிலோ எடையில் 1290சிசி கேடிஎம் சூப்பர் ட்யூக் பைக்!! இன்று முதல் விற்பனையை துவங்கியது!

ஸ்விட்ச் செய்யக்கூடிய ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், மோட்டார் ஸ்லிப் ஒழுங்குமுறை, சூப்பர்மோட்டோ ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல், டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் சிஸ்டம் மற்றும் சாவியில்லா இயக்கம் போன்றவை இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளதாக கேடிஎம் நிறுவனம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

வெறும் 180 கிலோ எடையில் 1290சிசி கேடிஎம் சூப்பர் ட்யூக் பைக்!! இன்று முதல் விற்பனையை துவங்கியது!

ஆனால் கேடிஎம் மை ரைடு அப்ளிகேஷன் மூலம் பைக்கை ஸ்மார்ட்போன் உடன் இணைக்கும் வசதி வழங்கப்பட்டிருக்கும். பைக்கில் வழங்கப்பட்டுள்ள 5-இன்ச் கோண-அட்ஜெஸ்டபிள் டிஎஃப்டி திரை மூலம் மொபைல் போனின் அழைப்புகள் மற்றும் இசையை பெறுவது மட்டுமில்லாமல் டர்ன் பை டர்ன் நாவிகேஷனையும் பெற முடியும்.

வெறும் 180 கிலோ எடையில் 1290சிசி கேடிஎம் சூப்பர் ட்யூக் பைக்!! இன்று முதல் விற்பனையை துவங்கியது!

2021 கேடிஎம் 1290 சூப்பர் ட்யுக் ஆர்ஆர் பைக்கின் விலை 21,499 கிரேட் பிரிட்டன் பவுண்ட் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.22 லட்சமாகும். இந்திய சந்தையில் கேடிஎம் நிறுவனம் 1000சிசி பைக்குகளை அறிமுகப்படுத்துவதில்லை என்பதால், இந்த பைக்கின் இந்திய வருகை மிகவும் மங்கலாகவே உள்ளது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 1290 SUPER DUKE RR Officially Unveiled. Read Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X