கேடிஎம் பிராண்டில் அட்வென்ச்சர் பைக் வாங்க ஆசையா? 250 அட்வென்ச்சர் பைக்கிற்கு சிறப்பு விலை அறிவிப்பு!!

கேடிஎம் நிறுவனம் அதன் 250 அட்வென்ச்சர் பைக்கிற்கு சிறப்பு விலையாக ரூ.2.30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் பிராண்டில் அட்வென்ச்சர் பைக் வாங்க ஆசையா? 250 அட்வென்ச்சர் பைக்கிற்கு சிறப்பு விலை அறிவிப்பு!!

உலகளவில் மிக வேகமாக வளர்ந்துவரும் ப்ரீமியம் மோட்டார்சைக்கிள் பிராண்டாக விளங்கும் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கேடிஎம்-இல் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அட்வென்ச்சர் பைக்குகளுள் 250 அட்வென்ச்சரும் ஒன்று.

கேடிஎம் பிராண்டில் அட்வென்ச்சர் பைக் வாங்க ஆசையா? 250 அட்வென்ச்சர் பைக்கிற்கு சிறப்பு விலை அறிவிப்பு!!

இதற்கு தான் தற்போது ரூ.2.30 லட்சத்தில் சிறப்பு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. கேடிஎம் அட்வென்ச்சர் பைக் பிரியர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த சிறப்பு விலையினால் 250 அட்வென்ச்சரின் எக்ஸ்-ஷோரூம் விலை முன்பை காட்டிலும் ரூ.25,000 குறைந்துள்ளது.

கேடிஎம் பிராண்டில் அட்வென்ச்சர் பைக் வாங்க ஆசையா? 250 அட்வென்ச்சர் பைக்கிற்கு சிறப்பு விலை அறிவிப்பு!!

முன்பு இந்த கேடிஎம் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.54 லட்சமாக இருந்தது. இந்த பிரத்யேக விலையில் 250 அட்வென்ச்சர் பைக் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் கிடைக்கும். இந்தியாவில் அட்வென்ச்சர் பைக் கலாச்சாரம் மெதுவாக அதிகரித்து வருகிறது.

கேடிஎம் பிராண்டில் அட்வென்ச்சர் பைக் வாங்க ஆசையா? 250 அட்வென்ச்சர் பைக்கிற்கு சிறப்பு விலை அறிவிப்பு!!

இதற்கு இந்த விலை குறைப்பு வலுச்சேர்ப்பதாக உள்ளது. 250 அட்வென்ச்சரில் 248சிசி, 4-வால்வு, ஒற்றை-சிலிண்டர் லிக்யுடு கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 30 பிஎஸ் மற்றும் 24 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

கேடிஎம் பிராண்டில் அட்வென்ச்சர் பைக் வாங்க ஆசையா? 250 அட்வென்ச்சர் பைக்கிற்கு சிறப்பு விலை அறிவிப்பு!!

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் பவர் உதவி ஸ்லிப்பர் க்ளட்ச் இணைக்கப்படுகிறது. இந்த கேடிஎம் அட்வென்ச்சர் பைக்கில் அபெக்ஸ் சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்படுகிறது.

கேடிஎம் பிராண்டில் அட்வென்ச்சர் பைக் வாங்க ஆசையா? 250 அட்வென்ச்சர் பைக்கிற்கு சிறப்பு விலை அறிவிப்பு!!

ட்யுல்-சேனல் ஏபிஎஸ் சிஸ்டம், ஆஃப்-ரோடு மோடுகளை ஸ்டேரிங் சக்கரத்தில் உள்ள பொத்தான்கள் மூலமாக தேர்வு செய்யலாம். இந்த அட்வென்ச்சர் பைக்கை எலக்ட்ரானிக் ஆரஞ்ச் மற்றும் மேட் ப்ளாக் மெட்டாலிக் நிறத்தேர்வுகளில் வாங்கலாம்.

கேடிஎம் பிராண்டில் அட்வென்ச்சர் பைக் வாங்க ஆசையா? 250 அட்வென்ச்சர் பைக்கிற்கு சிறப்பு விலை அறிவிப்பு!!

கேடிஎம்-இன் 250 அட்வென்ச்சர் உலகின் எந்தவொரு பாதையிலும் இயங்க தேவையான அனைத்து அம்சங்களையும் பெற்ற சுறுசுறுப்பான மோட்டார்சைக்கிளாகும். இதற்கிடையில் சமீபத்தில் கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் ஒன்று புனேவில் உள்ள பஜாஜ் தொழிற்சாலையில் காட்சித்தந்தது.

கேடிஎம் பிராண்டில் அட்வென்ச்சர் பைக் வாங்க ஆசையா? 250 அட்வென்ச்சர் பைக்கிற்கு சிறப்பு விலை அறிவிப்பு!!

790 அட்வென்ச்சர் 2019 இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற இந்தியன் பைக் வாரத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து விரைவில் இந்த பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா எதிரொலியால் தள்ளிப்போனது.

கேடிஎம் பிராண்டில் அட்வென்ச்சர் பைக் வாங்க ஆசையா? 250 அட்வென்ச்சர் பைக்கிற்கு சிறப்பு விலை அறிவிப்பு!!

Image Courtsey: IamaBiker/Facebook

தற்போது தொழிற்சாலையில் காட்சி தந்துள்ளதால் விரைவில் 790 அட்வென்ச்சரின் அறிமுகத்தை இந்திய சந்தையில் பார்க்கலாம். இருப்பினும் கேடிஎம் நிறுவனம் சார்பில் இதுகுறித்து இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM, the world’s No. 1 and India’s fastest growing premium motorcycle brand, announced an aggressive special price of INR 2,30,000/- for its 250 Adventure, giving riding enthusiasts a fresh impetus to ride into the KTM’s world of Adventure Biking. The KTM 250 Adventure now costs almost INR 25,000 less than its previously listed price. The special promotional price, applicable from 14th July till 31st August, is expected to encourage a faster upgrade to the Adventure segment for biking enthusiasts.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X