Just In
- 3 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 4 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 5 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 6 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- Sports
இன்னா அடி... விராட் -படிக்கல் அதிரடி... சிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்... சிறப்பான வெற்றி!
- News
ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க.. புதிய வழிகளை யோசியுங்கள்.. பதுக்கினால் கடும் நடவடிக்கை.. மோடி பேச்சு
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடிய இளைஞர்... எந்த இடத்துல ஆடினாருனு தெரிஞ்சா நம்ம இளைய தளபதியே மெர்சலாய்டுவார்!!
வாத்தி கமிங் பாடலுக்கு வேற்று மாநில இளைஞர் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் எங்கு டான்ஸ் ஆடினார் என்பதுகுறித்த தகவலைக் கீழே காணாலம்.

இணையத்தில் பல விதமான விநோத வீடியோக்கள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், தற்போது டிராஃபிக் சிக்னலில் ஓர் இளைஞர் செய்த விநோத செயல்குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியிருக்கின்றது.

இந்த ஒற்றை வீடியோ 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனைப் படைத்திருக்கின்றது. டிராஃபிக் சிக்னலில் அனைத்து வாகனங்களும் நின்றிருக்கின்ற வேலையில், கேடிஎம் பைக்கில் சிக்னலுக்காக காத்தவாறு அமர்ந்துக் கொண்டிருந்த இளைஞர், திடீரென பைக்கைவிட்டு இறங்கி வந்து இளைய தளபதி விஜய்-இன் நடிப்பில் வெளிவந்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கமிங் பாடலின் இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடுகின்றார்.

இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. "டிராஃபிக் சிக்னலில் காத்திருக்க நேர்ந்தால் இவ்வாறு செய்யுங்கள்" எனவும் அந்நபர் பதிவிட்டிருக்கின்றார். வீடியோவில் இடம்பெற்றிருக்கும் வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு பார்க்கையில், இச்சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறியிருப்பது உறுதியாக தெரிய வந்திருக்கின்றது.

இதுபோன்ற டிராஃபிக் சிக்னலில் நிற்கும்போது டான்ஸ் ஆடி வீடியோ வெயிடுவது முதல் முறையல்ல. முன்னதாகவும் இதுபோன்று ஓர் வீடியோவை அவர் வெளியிட்டிருக்கின்றார். பொதுவாக, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஃபேமஸாவதற்காக ஸ்டண்ட் போன்ற விதிமீறல் செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதுண்டு.

ஆனால், இந்த நபர் சற்று மாறுதலாக விதியை மீறாத வண்ணம் நடனமாடி வீடியோ எடுத்திருக்கின்றார். இந்த செயலுக்காக போலீஸார் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களா?, என தெரியவில்லை. இருப்பினும், இவ்வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது.
குறிப்பாக, லைக்ஸ்களையும், பார்வைகளர்களையும் மிக அதிகளவில் குவித்து வருகின்றது. அதிக பார்வையாளர்களைப் பெற்ற இசையாக 'மாஸ்டர்' திரைப்படத்தின் 'வாத்திங் கமிங்' பாடல் இருக்கின்றது. இந்த பாட்டிற்கு பலர் டப் கொடுத்து வீடியோ எடுத்து அவர்களது சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.
இந்த நிலையிலேயே, ஒற்றை தோல் பகுதியை மட்டுமே குலுங்க செய்யும் விஜயின் ஸ்டெப்பிற்கு கேடிஎம் பைக் உரிமையாளர் நடுரோட்டில், அதுவும், சிக்னலில் நின்றுக் கொண்டிருந்தபோது டான்ஸ் ஆடியிருக்கின்றார். இந்த வீடியோவால் பலரை தற்போது அவர் கவர்ந்திழுத்திருக்கின்றார்.