Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிடில் க்ளாஸ் இளைஞர்களின் எட்டா கனியாக மாறிவரும் கேடிஎம், ஹஸ்க்வர்னா பைக்குகள்!! விலை மீண்டும் உயர்வு
கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலைகள் மீண்டும் ஒரு முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆஸ்திரேயாவை சேர்ந்த கேடிஎம் பிராண்டை இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சொந்தமாக கொண்டுள்ளது. இதனால் பஜாஜின் சாகான் தொழிற்சாலையில்தான் இதன் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஹஸ்க்வர்னாவும் பஜாஜ் ஆட்டோ க்ரூப்பில் ஒரு அங்கமாக வகித்து வருகிறது. கடந்த ஆண்டில் இந்திய சந்தையில் நுழைந்த இந்த மோட்டார்சைக்கிள் பிராண்டில் இருந்து ஸ்வார்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 என்ற இரு 250சிசி பைக்குகள் மட்டும்தான் தற்சமயம் விற்பனையில் உள்ளன.

இவை இரண்டின் விலையும் முன்பு ரூ.1,86,750 மற்றும் ரூ.1,87,136 என இருந்தது. ஆனால் தற்போது இவை இரண்டும் முறையே ரூ.2,818 மற்றும் ரூ.2,816 அதிகரிக்கப்பட்டு ரூ.1,89,568 மற்றும் ரூ.1,89,952 ஆக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இந்த ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வந்துவிட்டது.

கேடிஎம் பிராண்டில் இருந்து தற்சமயம் 125 ட்யூக், ஆர்சி125, 200 ட்யூக், ஆர்சி200, 250 ட்யூக், 250 அட்வென்ச்சர், ஆர்சி390, 390 ட்யூக், 390 அட்வென்ச்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனையில் உள்ளன. இவை அனைத்தின் விலையும் ரூ.1,400-ல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.4,500 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.

குறைந்தப்பட்சமாக கேடிஎம் பிராண்டின் ஆரம்ப நிலை 125சிசி பைக்குகளின் விலைகள் ரூ.1,400- ரூ.1,500 அளவிலும், அதிகப்பட்சமாக 390 அட்வென்ச்சரின் விலை ரூ.4,485 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை கீழேயுள்ள அட்டவணையில் பார்க்கலாம்.
KTM Prices | |||
Model | New Price | Old Price | Difference |
125 Duke | Rs1,51,507 | Rs1,50,010 | Rs1,497 |
200 Duke | Rs1,81,536 | Rs1,78,960 | Rs2,576 |
250 Duke | Rs2,17,402 | Rs2,14,210 | Rs3,192 |
390 Duke | Rs2,70,554 | Rs2,66,620 | Rs3,934 |
RC 125 | Rs1,62,566 | Rs1,61,100 | Rs1,466 |
RC 200 | Rs2,04,096 | Rs2,01,075 | Rs3,021 |
RC 390 | Rs2,60,723 | Rs2,56,920 | Rs3,803 |
250 Adventure | Rs2,51,923 | Rs2,48,256 | Rs3,667 |
390 Adventure | Rs3,10,365 | Rs3,05,880 | Rs4,485 |
Husqvarna Price | |||
Model | New Price | Old Price | Difference |
Svartpilen 250 | Rs1,89,568 | Rs1,86,750 | Rs2,818 |
Vitpilen 250 | Rs1,89,952 | Rs1,87,136 | Rs2,816 |

கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளின் விலைகள் சமீபத்தில்தான் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி உயர்த்தப்பட்டது. ஆனால் அடுத்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் இவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.