கேடிஎம் பைக்குகளில் எது அதிகம் விற்பனையாகுகிறது தெரியுமா? பைக்கை வாங்கும்முன் இதை தெரிஞ்சிக்கோங்க...

இளம் தலைமுறையினரின் அமோக வரவேற்பில் இருக்கும் கேடிஎம் நிறுவனம் கடந்த 2021 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்த மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் பைக்குகளில் எது அதிகம் விற்பனையாகுகிறது தெரியுமா? பைக்கை வாங்கும்முன் இதை தெரிஞ்சிக்கோங்க...

கேடிஎம் இந்தியா நிறுவனம் மோட்டார்சைக்கிள்களின் விற்பனையிலும் அவற்றின் ஏற்றுமதியிலும் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. என்ன... முந்தைய 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போதுதான் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி கிட்டத்தட்ட 15 சதவீதம் அளவில் குறைந்துள்ளது.

கேடிஎம் பைக்குகளில் எது அதிகம் விற்பனையாகுகிறது தெரியுமா? பைக்கை வாங்கும்முன் இதை தெரிஞ்சிக்கோங்க...

மொத்தமாக இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் 6,777 கேடிஎம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2020 ஜனவரியை காட்டிலும் 33.80 சதவீதமும், 2020 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 21.31 சதவீதமும் அதிகமாகும்.

கேடிஎம் பைக்குகளில் எது அதிகம் விற்பனையாகுகிறது தெரியுமா? பைக்கை வாங்கும்முன் இதை தெரிஞ்சிக்கோங்க...

ஏனெனில் அந்த மாதங்களில் முறையே 5,065 மற்றும் 5.595 கேடிஎம் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதில் 200சிசி கேடிஎம் பைக்குகளின் பங்கு தான் அதிகமாகும். ஏனென்றால் இந்த மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 2,979 பைக்குகள் 200சிசி ட்யூக் மற்றும் ஆர்சி பைக்குகளாகும்.

கேடிஎம் பைக்குகளில் எது அதிகம் விற்பனையாகுகிறது தெரியுமா? பைக்கை வாங்கும்முன் இதை தெரிஞ்சிக்கோங்க...

மிடில்-கிளாஸ் இளைஞர்களின் பிரதான தேர்வு கேடிஎம் 125சிசி பைக்குகளை காட்டிலும் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என 200சிசி பைக்குகளின் பக்கம் தான் உள்ளது. கேடிஎம் 200சிசி பைக்குகளின் எண்ணிக்கை 2020 ஜனவரியை காட்டிலும் சுமார் 98.47 சதவீதம் அதிகரித்துள்ளது.

கேடிஎம் பைக்குகளில் எது அதிகம் விற்பனையாகுகிறது தெரியுமா? பைக்கை வாங்கும்முன் இதை தெரிஞ்சிக்கோங்க...

அதேபோல் 2,979 என்ற எண்ணிக்கை 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 56.62 சதவீதம் அதிகமாகும். கேடிஎம் 125சிசி பைக்குகளின் விற்பனையில் பெரிய அளவில் மாற்றமில்லை. ஆனால் 722 யூனிட்கள் கடந்த ஜனவரியில் விற்பனை செய்யப்பட்டுள்ள கேடிஎம் 390சிசி பைக்குகளின் விற்பனை முந்தைய 2020 டிசம்பரை காட்டிலும் சுமார் 83.25 சதவீதமும், 2021 ஜனவரியை காட்டிலும் 5.87 சதவீதமும் அதிகமாகும்.

கேடிஎம் பைக்குகளில் எது அதிகம் விற்பனையாகுகிறது தெரியுமா? பைக்கை வாங்கும்முன் இதை தெரிஞ்சிக்கோங்க...

KTM

Domestic

Jan-21 Jan-20 Growth (%) Dec-20 Growth (%)
200 2,979 1,501 98.47 1,902 56.62
125 2,516 2,176 15.63 2,525 -0.36
390 722 682 5.87 394 83.25
250 560 706 -20.68 774 -27.65
Total 6,777 5,065 33.80 2,176 21.13

390சிசி-யில் 390 ட்யூக், ஆர்சி390 மற்றும் 390 அட்வென்ச்சர் என்ற மூன்று மாடல்களை கேடிஎம் நிறுவனம் தற்சமயம் விற்பனை செய்து வருகிறது. கேடிஎம் 250சிசி பைக்குகளின் விற்பனை இந்தியாவில் வருடத்துடன் வருடம் ஒப்பிடுகையிலும், மாதத்துடன் மாதம் ஒப்பிடுகையில் கணிசமான அளவு குறைந்துள்ளது.

கேடிஎம் பைக்குகளில் எது அதிகம் விற்பனையாகுகிறது தெரியுமா? பைக்கை வாங்கும்முன் இதை தெரிஞ்சிக்கோங்க...

வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியை பொறுத்தவரையில், கேடிஎம் பைக்குகள் அனைத்தும் இந்தியாவில் பஜாஜ் ஆட்டோவின் புனே சாகான் தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இங்கிருந்துதான் மும்பை துறைமுகம் வாயிலாக அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

KTM

Exports

Jan-21 Jan-20 Growth (%) Dec-20 Growth (%)
390 3,354 3,476 -3.51 3,185 5.31
250 1,376 321 328.66 800 72.00
200 1,234 710 73.80 2,889 -57.29
125 850 1,764 -51.81 1,137 -25.24
Total 6,814 6,271 8.66 8,011 -14.94
கேடிஎம் பைக்குகளில் எது அதிகம் விற்பனையாகுகிறது தெரியுமா? பைக்கை வாங்கும்முன் இதை தெரிஞ்சிக்கோங்க...

இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு மொத்தம் 6,814 கேடிஎம் பைக்குகள் கடந்த மாதத்தில் வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் 8.66 சதவீதம் அதிகம் தான் என்றாலும், முந்தைய 2020 டிசம்பரை மாதத்தை காட்டிலும் 14.94 சதவீதம் குறைவாகும்.

கேடிஎம் பைக்குகளில் எது அதிகம் விற்பனையாகுகிறது தெரியுமா? பைக்கை வாங்கும்முன் இதை தெரிஞ்சிக்கோங்க...

வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியில் கேடிஎம் 250சிசி பைக்குகளின் எண்ணிக்கை தான் நம்மை ஆச்சிரியப்படுத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளது. 2020 ஜனவரியிலும், 2020 டிசம்பரிலும் முறையே 321 மற்றும் 800 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்த கேடிஎம் 250சிசி பைக்குகள் கடந்த மாதத்தில் 1,376 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM India Sales, Exports Jan 2021. Read In Tamil.
Story first published: Sunday, February 21, 2021, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X