KTM RC 125 இந்தியாவில் அறிமுகம்! யமஹா ஆர்15 வி4 பைக்கிற்கு போட்டி வந்தாச்சு! புது பைக்கோட விலை எவ்வளவு?
கேடிஎம் (KTM) நிறுவனம், அதன் ஆர்சி 125 (RC 125) பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. யமஹா ஆர்15 வி4 பைக்கிற்கு போட்டியாக இப்பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம், இந்தியாவில் அதன் 2022 ஆர்சி 125 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இப்பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 1.82 லட்சம் என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

முந்தைய, அதாவது, 2021 வெர்ஷன் ஆர்சி 125-ஐக் காட்டிலும் இது ரூ. 2 ஆயிரம் அதிகம் விலை ஆகும். புதிய தலைமுறையில் சில குறிப்பிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆகையால், எனவேதான் 2022 கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் விலை சற்று அதிகமாக உள்ளது.

ஸ்டைலிங் மற்றும் சிறப்பம்சங்களை அதிகளவில் புதிய ஆர்சி 125 பைக் பெற்றிருக்கின்றது. இதன் உடல் கேடிஎம் ஆர்சி 8 பைக்கை தழுவி அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றது. குறைந்த ஷார்ப்பான தோற்றம், மிக சிறந்த ஏரோடைனமிக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், மறு சீரமைப்பு செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் பப்பிள் விஷர் மற்றும் ப்யூவல் டேங்க் ஆகியவை ஆர்சி125இல் இடம் பெற்றிருக்கின்றன.

மேலும், இரட்டை புரஜெக்டர் மின் விளக்கு புதிய ஆர்சி 125 இல் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதன் சப்-ஃப்ரேம்கூட மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பில்லியன் சீட் தட்டையானதாகவும், அதிக விசாலமானதாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மாற்றங்களால் பைக்கின் ஒட்டுமொத்த எடையும் தற்போது குறைந்திருக்கின்றது. 3.4 கிலோ வரை குறைக்கப்பட்டிருக்கின்றது.

இருப்பினும் பெரிய உருவத்துடன் 2022 ஆர்சி 125 காட்சியளிக்கின்றது. 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்யூவல் டேங்க் இப்பைக்கில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றது. 124 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜினில் பெரியளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

தொடர்ந்து, இதன் ரேடியேட்டர் அமைப்பில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மிக சிறந்த டார்க் வெளியேற்றத்தை வழங்கும் பொருட்டு பெரிய ஏர் பாக்ஸ் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிதாக எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டபிள்யூபி இன்வெர்டட் ஃபோர்க் முன் பக்கத்திலும், மோனோஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

இவை மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும். இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 320 மிமீ டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், 200 மிமீ டிஸ்க் பிரேக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன. பைக்கின் மிக சிறந்த மற்றும் கவர்ச்சியான தோற்றத்திற்காக 5 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

அடர் கல்வனோ மற்றும் செராமிக் வெள்ளை ஆகிய இரு விதமான நிற தேர்வுகளில் புதிய கேடிஎம் ஆர்சி 125 பைக் விற்பனைக்குக் கிடைக்கும். அறிமுகத்தை முன்னிட்டு இப்பைக்கிற்கான புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது. இதன் டெலிவரி பணிகள் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








