நம்பவே முடியல! 5நிமிஷத்துல விற்று தீர்ந்த கேடிஎம் ஆர்சி 8சி பைக்! ரொம்ப வெறித்தனமாக காத்திருந்திருப்பாங்க போல!

கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி 8சி பைக்கின் அனைத்து யூனிட்டுகளும் ஐந்து நிமிஷத்தில் விற்று தீர்ந்ததாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

நம்பவே முடியல! 5 நிமிஷத்துல விற்று தீர்ந்த கேடிஎம் ஆர்சி 8சி பைக்... ரொம்ப வெறித்தனமாக காத்திருந்திருப்பாங்க போல!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம், மிக சமீபத்தில் ஆர்சி 8சி இருசக்கர வாகனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனை மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக நிறுவனம் அறிவித்திருந்தது.

நம்பவே முடியல! 5 நிமிஷத்துல விற்று தீர்ந்த கேடிஎம் ஆர்சி 8சி பைக்... ரொம்ப வெறித்தனமாக காத்திருந்திருப்பாங்க போல!

இதற்காக வெறும் 100 யூனிட்டுகளை மட்டும் நிறுவனம் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இவையே விற்பனைக்குக் களமிறக்கிய வெறும் ஐந்து நிமிடத்திற்குள் விற்று தீர்ந்திருக்கின்றன. மிக துள்ளியமாக கூற வேண்டுமானால் 4 நிமிடங்கள் 32 செகண்டுகளுக்குள் அனைத்து 100 யூனிட் ஆர்சி 8சி பைக்குகளும் விற்றிருக்கின்றன.

நம்பவே முடியல! 5 நிமிஷத்துல விற்று தீர்ந்த கேடிஎம் ஆர்சி 8சி பைக்... ரொம்ப வெறித்தனமாக காத்திருந்திருப்பாங்க போல!

இந்த தகவல் ஒட்டுமொத்த இருசக்கர வாகன உலகையுமே அதிரை வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வாகனத்தை வாங்க கழுகுபோல் வெறித்தனமாக காத்திருப்பாங்களோ என்ற கருத்தை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

நம்பவே முடியல! 5 நிமிஷத்துல விற்று தீர்ந்த கேடிஎம் ஆர்சி 8சி பைக்... ரொம்ப வெறித்தனமாக காத்திருந்திருப்பாங்க போல!

கேடிஎம் நிறுவனத்தின் மோட்டோ 2 ரேஸ் பைக்கின் தொழில்நுட்பத்தையும், 890 ட்யூக் பைக்கின் எஞ்ஜினைத் தாங்கிய வாகனமாக ஆர்சி 8சி பைக் இருக்கின்றது. ஆகையால், ரேஸ் ட்ராக்குகளில் இயங்கும் வாகனத்தையே மிஞ்சும் ஓர் பைக்காக இருக்கின்றது.

நம்பவே முடியல! 5 நிமிஷத்துல விற்று தீர்ந்த கேடிஎம் ஆர்சி 8சி பைக்... ரொம்ப வெறித்தனமாக காத்திருந்திருப்பாங்க போல!

இதன் வெளிப்பாடாகவே அனைத்து யூனிட்டுகளும் விற்பனைக்கு ஒரு சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்திருக்கின்றன. இடம் பெற்றிருக்கும் எஞ்ஜினானது 889சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய பேரல்லல் ட்வின் எல்சி8சி எஞ்ஜினாகும்.

நம்பவே முடியல! 5 நிமிஷத்துல விற்று தீர்ந்த கேடிஎம் ஆர்சி 8சி பைக்... ரொம்ப வெறித்தனமாக காத்திருந்திருப்பாங்க போல!

இந்த எஞ்ஜின் 123பிஎச்பி மற்றும் 101 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இப்பைக்கின் ஃப்ரேமானது 25சிஆர்எம்ஓ4 ஸ்டீலைக் கொண்டு கேடிஎம் உருவாக்கியிருக்கின்றது. இது இலகு மற்றும் உறுதி ஆகிய இரண்டையும் வழங்கும்.

நம்பவே முடியல! 5 நிமிஷத்துல விற்று தீர்ந்த கேடிஎம் ஆர்சி 8சி பைக்... ரொம்ப வெறித்தனமாக காத்திருந்திருப்பாங்க போல!

தொடர்ந்து, ரேஸ் பைக்குகளில் பயன்படுத்தப்பட எக்சாஸ்டுகள் அக்ரோபோவிக் டைட்டானியம் மஃப்ளருடன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, தனித்துவமான ஏர் பாக்ஸ் மற்றும் ரேசிங் ஏர் ஃபில்டர்களும் இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன.

நம்பவே முடியல! 5 நிமிஷத்துல விற்று தீர்ந்த கேடிஎம் ஆர்சி 8சி பைக்... ரொம்ப வெறித்தனமாக காத்திருந்திருப்பாங்க போல!

மேலும், உயர் திறன் கொண்ட 43மிமீ அளவுள்ள டபிள்யூ அபெக்ஸ் ப்ரோ 7543 க்ளோஸ்ட் கேட்ரிட்ஜ் ஃபோர்க் மற்றும் டபிள்யூ அபெக்ஸ் ப்ரோ 7746 மோனோஷாக் உள்ளிட்டவை இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி பிரேக்கிங் வசதிக்காக 290 மிமீ மற்றும் 230 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நம்பவே முடியல! 5 நிமிஷத்துல விற்று தீர்ந்த கேடிஎம் ஆர்சி 8சி பைக்... ரொம்ப வெறித்தனமாக காத்திருந்திருப்பாங்க போல!

இந்த பிரேக்கிங் கருவியுடன் ஸ்டைல்மா காலிபர்கள் மற்றும் ப்ரெம்போ இரு பிஸ்டன் காலிபர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற எக்கசக்க சிறப்பம்சங்களுடனேயே கேடிஎம் ஆர்சி 8சி பைக் விற்பனைக்கு வந்தது. இந்த அம்சங்களைக் கொண்டிருந்த காரணத்தினாலேயே வாகன ஆர்வலர்கள் வெறித்தனமாக காத்திருந்து வாங்கியிருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM RC 8C Sports Bike Sold Out With In 5 Minutes. Read In Tamil.
Story first published: Monday, July 26, 2021, 18:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X