தரமான சம்பவம்! ஜப்பானுக்கே நாமதான் ஏற்றுமதி... இது நம்ம சென்னை தயாரிப்பு மோட்டார்சைக்கிள்!

சென்னை தயாரிப்பு ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் ஜப்பான் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

தரமான சம்பவம்! ஜப்பானுக்கே நாமதான் ஏற்றுமதி... இது நம்ம சென்னை தயாரிப்பு மோட்டார்சைக்கிள்!

இந்தியாவில் கடந்த காலங்களில் வீர நடைப் போட்டு கொண்டிருந்த மிக பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன. அவற்றில் பல நாட்டை விட்டு வெளியேற ஜப்பான் நாட்டின் இருசக்கர வாகனங்களின் இந்திய வருகையும் ஓர் காரணமாக இருக்கின்றது. பிஎஸ்ஏ மற்றும் யெஸ்டி போன்ற நிறுவனங்களின் வெளியேற்றத்திற்குகூட ஜப்பானிய இருசக்கர வாகனங்களின் வருகையே காரணம் என கூறப்படுகின்றது.

தரமான சம்பவம்! ஜப்பானுக்கே நாமதான் ஏற்றுமதி... இது நம்ம சென்னை தயாரிப்பு மோட்டார்சைக்கிள்!

அந்தளவிற்கு ஜப்பான் நாட்டு நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள் அதிக தொழில்நுட்பம் மற்றும் கவர்ச்சியான தோற்றத்துடன் விற்பனைக்கு வந்தன. இந்த மாதிரியான சூழ்நிலையில் ஜப்பான் நாட்டில், அந்நாட்டு தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நமது சென்னை தயாரிப்பு இருசக்கர வாகனம் ஒன்று அந்நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தரமான சம்பவம்! ஜப்பானுக்கே நாமதான் ஏற்றுமதி... இது நம்ம சென்னை தயாரிப்பு மோட்டார்சைக்கிள்!

ஆமாங்க, நம்ம ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்பைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கின்றோம். நிறுவனத்தின் ஹிமாலயன் அட்வென்சர் ரக மோட்டார்சைக்கிள் ஜப்பானில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, புதிய யூரோ 5 மாசு உமிழ்வு தரத்திற்கு உகந்த வாகனமாக ஜப்பானில் அறிமுகமாகியிருக்கின்றது.

தரமான சம்பவம்! ஜப்பானுக்கே நாமதான் ஏற்றுமதி... இது நம்ம சென்னை தயாரிப்பு மோட்டார்சைக்கிள்!

ட்ரிப்பர் நேவிகேஷன், ஸ்விட்சபிள் ஏபிஎஸ் மற்றும் மூன்று புதிய நிற தேர்வுகள் ஆகிய வசதிகளுடன் ஹிமாலயன் அட்வென்சர் பைக் அந்நாட்டில் விற்பனைக்கு சென்றிருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பைக்கிற்கு இந்திய சந்தையில் தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. இந்தியாவில் மட்டுமில்லைங்க இது உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

தரமான சம்பவம்! ஜப்பானுக்கே நாமதான் ஏற்றுமதி... இது நம்ம சென்னை தயாரிப்பு மோட்டார்சைக்கிள்!

அந்தவகையில், இப்பைக் விற்பனைக்குக் கிடைத்து வரும் அனைத்து சந்தைகளிலும் நல்ல வரவேற்பையேப் பெற்று வருகின்றது. இதற்கு பைக்கின் மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் அதிகளவு அட்வென்சர் பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்கள் ஆகியவையே மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

தரமான சம்பவம்! ஜப்பானுக்கே நாமதான் ஏற்றுமதி... இது நம்ம சென்னை தயாரிப்பு மோட்டார்சைக்கிள்!

ராயல் என்பீல்டு நிறுவனம் ஜப்பானில் நடப்பாண்டு தொடக்கத்தில் அதன் முதன்மையான விற்பனையகத்தைத் திறந்ததன் வாயிலாக முதல் முறையாக அந்நாட்டில் கால் தடம் பதித்தது. இந்த நடவடிக்கை ஆசிய-பசிபிக் பிராந்தியங்களில் தனது இருப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய படியாக நிறுவனத்திற்கு அமைந்திருக்கின்றது.

தரமான சம்பவம்! ஜப்பானுக்கே நாமதான் ஏற்றுமதி... இது நம்ம சென்னை தயாரிப்பு மோட்டார்சைக்கிள்!

கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 ஆகிய மோட்டார்சைக்கிளைத் தொடர்ந்து தற்போது ஹிமாலயன் அட்வென்சர் ரக பைக்கும் களமிறக்கப்பட்டிருக்கின்றது. 2021 ஹிமாலயன் இந்திய சந்தையில் மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

தரமான சம்பவம்! ஜப்பானுக்கே நாமதான் ஏற்றுமதி... இது நம்ம சென்னை தயாரிப்பு மோட்டார்சைக்கிள்!

பைன் கிரீன், மிராஜ் சில்வர் மற்றும் கிரானைட் பிளாக் என மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இத்துடன், மிக முக்கிய மாற்றமாக ட்ரிப்பர் நேவிகேஷன், நிகழ் நேர நேவிகேஷன் பற்றிய தகவல் மற்றும் கூகுள் மேப் வசதி உள்ளிட்டவற்றுடன் அது விற்பனைக்கு வந்தது.

தரமான சம்பவம்! ஜப்பானுக்கே நாமதான் ஏற்றுமதி... இது நம்ம சென்னை தயாரிப்பு மோட்டார்சைக்கிள்!

ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில் 411 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு சிங்கிள் ஓவர் ஹெட் கேம் (எஸ்ஓஎச்சி) எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் 24.3 பிச்பி பவரை 6,500 ஆர்பிஎம்மிலும், 32 என்எம் டார்க்கை 4,500 ஆரபிஎம்மிலும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இது இயங்கும்.

தரமான சம்பவம்! ஜப்பானுக்கே நாமதான் ஏற்றுமதி... இது நம்ம சென்னை தயாரிப்பு மோட்டார்சைக்கிள்!

பைக்கில் சிறந்த சஸ்பென்ஷனுக்காக 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், மோனோஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிஸ்க் பிரேக்குகள் இரு வீல்களிலும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, இரட்டை சேனல் ஏபிஎஸ் தொழில்நுட்பமும் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Made in chennai royal enfield himalayan adv launched in japan
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X