ஹெல்மெட், இன்சூரன்ஸ் வரிசையில் இணைந்த கண்ணாடி! இது இல்லனா வாரண்டி க்ளைம் பண்ண முடியாது!

ஹெல்மெட், இன்சூரன்ஸ் போல இனி இருசக்கர வாகனங்களில் கண்ணாடி இருப்பதும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே பார்க்கலாம், வாங்க.

ஹெல்மெட், இன்சூரன்ஸ் வரிசையில் இணைந்த கண்ணாடி! இது இல்லனா வாரண்டி க்ளைம் பண்ண முடியாது!

இந்தியாவில் அரங்கேறும் பெரும்பாலான விபத்து சம்பவங்கள் இருசக்கர வாகனங்களை சார்ந்தே நடைபெறுவதாக ஓர் அறிவிக்கப்படாத குற்றச்சாட்டு நாடு முழுவதும் உலா வந்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு இருசக்கர வாகன ஓட்டிகளின் ஒழுக்கமற்ற இயக்குதலே முக்கிய காரணமாகும்.

ஹெல்மெட், இன்சூரன்ஸ் வரிசையில் இணைந்த கண்ணாடி! இது இல்லனா வாரண்டி க்ளைம் பண்ண முடியாது!

ஆமாங்க, ஒரு சிலரை தவிரத்து பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் வாகன போக்குவரத்து விதிகள் என்றால் என்ன என்று கேட்குமளவிற்கு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வற்றவர்களாக இருக்கின்றனர். சிக்னலை மீறுவது, ஒரு வழி (நோ என்ட்ரீ) பாதையில் நுழைவது, பாதுகாப்பு கவசம் அணியாமல் பயணிப்பது போன்ற பல்வேறு விதிமீறல்களை அவர்கள் செய்கின்றனர்.

ஹெல்மெட், இன்சூரன்ஸ் வரிசையில் இணைந்த கண்ணாடி! இது இல்லனா வாரண்டி க்ளைம் பண்ண முடியாது!

இதன் விளைவாகவே அதிக விபத்துகள் அரங்கேறுகின்றன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் போக்குவரத்து விதிகளை மீறும் இருசக்கர வாகன ஓட்டிகளினாலேயே அதிகளவில் விபத்து சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் ஓர் புதிய உத்தரவு இருசக்கர வாகனங்கள் சார்ந்து வெளியிடப்பட்டுள்ளது.

ஹெல்மெட், இன்சூரன்ஸ் வரிசையில் இணைந்த கண்ணாடி! இது இல்லனா வாரண்டி க்ளைம் பண்ண முடியாது!

அதாவது, இருசக்கர வாகனங்களில் கட்டாயம் கண்ணாடி இருக்க வேண்டும் என்ற உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கண்ணாடிகளை அகற்றுவோர்க்கு வாரண்டியை ரத்து செய்யவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வளைவுகள் மற்றும் திருப்பத்தின்போது உதவும் வகையில் அனைத்து வாகனங்களிலும் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன.

ஹெல்மெட், இன்சூரன்ஸ் வரிசையில் இணைந்த கண்ணாடி! இது இல்லனா வாரண்டி க்ளைம் பண்ண முடியாது!

ஆனால், இதனை ஸ்டைலுக்காக ஒரு சிலர் நீக்கிவிடுகின்றனர். இதன் விளைவாக திருப்பங்கள் மற்றும் வளைவுகளில் கண்ணாடி இல்லா இருசக்கர வாகன ஓட்டிகள் திரும்பி பார்த்து வாகனங்களை திருப்பும் நிலை நிலவுகின்றது. இந்த மாதிரியான நேரங்களிலேயே அதிக விபத்துகள் அரங்கேறுவதாகக் கூறப்படுகின்றது.

ஹெல்மெட், இன்சூரன்ஸ் வரிசையில் இணைந்த கண்ணாடி! இது இல்லனா வாரண்டி க்ளைம் பண்ண முடியாது!

இத்தகைய நிலையை போக்க வேண்டும் என திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கண்ணாடிகள் அகற்றப்பட்ட இருசக்கர வாகனங்களினாலேயே அதிக விபத்துகள் அரங்கேறுவதாக குற்றாச்சாட்டி இருந்தார்.

ஹெல்மெட், இன்சூரன்ஸ் வரிசையில் இணைந்த கண்ணாடி! இது இல்லனா வாரண்டி க்ளைம் பண்ண முடியாது!

கண்ணாடி இல்லாத இருசக்கர வாகன ஓட்டிகள் நினைத்த இடத்தில், நினைத்த பக்கத்தில் திரும்புவதே விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்றும், ஆகையால், கண்ணாடிகளை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, கண்ணாடி இல்லாமல் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 500 வரை அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன் வைத்திருந்தார்.

ஹெல்மெட், இன்சூரன்ஸ் வரிசையில் இணைந்த கண்ணாடி! இது இல்லனா வாரண்டி க்ளைம் பண்ண முடியாது!

இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

ஹெல்மெட், இன்சூரன்ஸ் வரிசையில் இணைந்த கண்ணாடி! இது இல்லனா வாரண்டி க்ளைம் பண்ண முடியாது!

தொடர்ந்து, டூ-வீலர்களில் இருக்கும் கண்ணாடிகளை அகற்றினால் அந்த வாகனத்தின் உத்தரவாதம் ரத்து செய்யப்படும் என தனது வாடிக்கையாளர்களை வாகன உற்பத்தியாளர்கள் எச்சரிக்க அறிவுறுத்துமாறு போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தேவைப்பட்டால் இதற்காக புதிய வாரண்டி விதிகளை உருவாக்கிக்கொள்ளவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஹெல்மெட், இன்சூரன்ஸ் வரிசையில் இணைந்த கண்ணாடி! இது இல்லனா வாரண்டி க்ளைம் பண்ண முடியாது!

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இருசக்கர வாகன ஓட்டிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, வீணாக ஸ்டைல் என கூறிக் கொண்டு கண்ணாடிகளை அகற்றிவிட்டு சுற்றி திரியும் இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை இந்த உத்தரவு ஏற்படுத்தியுள்ளது.

ஹெல்மெட், இன்சூரன்ஸ் வரிசையில் இணைந்த கண்ணாடி! இது இல்லனா வாரண்டி க்ளைம் பண்ண முடியாது!

ஹெல்மெட் அணிவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாஸ்க் அணிவது ஆகியவற்றின் வரிசையில் தற்போது வாகனங்களில் கண்ணாடி இருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மிக விரைவில் போலீஸார் அதிக கண்டிப்புடன் இந்த விஷயத்தில் செயல்பட இருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Madras HC Says Mirrors Must Be Fitted On Two-Wheelers. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X