Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரபல நடிகர் வாங்கிய அட்டகாசமான பைக்... பைக்கிற்கே இத்தனை லாட்சங்களை வாரி இறைச்சிருக்காரே!!
விலையுயர்ந்த புதிய பைக்கை பிரபல நடிகர் ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக்கின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

ட்ரையஃம்ப் நிறுவனத்தின் புதுமுக அறிமுகமாக ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர் பைக் இருக்கின்றது. இப்பைக்கை மிக சமீபத்திலேயே ட்ரையஃம்ப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது ஓர் ரோட்ஸ்டெர் ரக இருசக்கர வாகனம் ஆகும். தனது பிற புகழ்வாய்ந்த மாடல்கள் சிலவற்றைத் தழுவி இப்பைக்கை ட்ரையஃம்ப் உருவாக்கியிருந்தாலும் இதன் ஸ்டைல் மற்றும் தோற்றம் தனித்துவமானதாக காட்சியளிக்கின்றது.

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் சந்தையில் விற்பனையில் இருக்கும் பிற இருசக்கர வாகனங்களைக் காட்டிலும் மிக கவர்ச்சியான பைக்காக இது இருக்கின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஓர் பைக்கை பிரபல நடிகர் ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாள திரையுலகைச் சேர்ந்த ஜோஜு ஜார்ஜ் என்பவரே இப்பைக்கை வாங்கியவர் ஆவார்.

ஸ்டண்ட் மற்றும் கெஸ்ட் ரோல்களில் ஜோஜூ ஜார்ஜ் நடித்து வருகின்றார். ஆகையால், மலையாள திரையுலகின் பிரபலமான ஓர் நபராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவரே தனது போக்குவரத்திற்காக புதிய ட்ரையஃம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர் பைக்கை வாங்கியிருக்கின்றார். இதன் விலை ரூ. 8.84 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

Pic Source: modz_own_kerala / Instagram
இப்பைக்கில் 765 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு, 3 சிலிண்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.இது அதிகபட்சமாக 118 பிஎஸ் பவரையும், 79 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இயங்குகின்றது. இந்த எஞ்ஜின் ட்ரிம் ஷிஃப்ட் அசிஸ்ட் திறன் கொண்டது என்பது கூடுதல் சிறப்பு தகவல்.

இந்த மோட்டார்சைக்கிளில் நாம் கவனிக்க வேண்டிய மற்றுமொரு சிறப்பு அம்சமாக பைக்கின் எல்இடி மின் விளக்குகள் இருக்கின்றன. தும்பியின் கூட்டுக் கண்களை பிரதிபலிக்கும் ஸ்டைலில் இதன் ஹெட்லைட் இருக்கின்றது. இதனுடன் எல்இடி பகல்நேர மின் விளக்கு, புதிய ஃப்ளை ஸ்க்ரீன் அமைப்பு உள்ளிட்டவையும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுபோன்ற சிறப்பு அம்சங்கள் மற்றும் கூறுகளின் காரணமாகவே மிகவும் தனித்துவமான தோற்றத்தில் ட்ரையஃம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர் பைக் காட்சியளிக்கின்றது. இந்த தனித்துவமே இப்பைக்கை ஜோஜூ ஜார்ஜ் வாங்க காரணமாக அமைந்திருக்கின்றது.

ஜோஜூ ஜார்ஜ் 1995ம் ஆண்டில் இருந்தே மலையாள திரையுலகில் பங்காற்றி வருகின்றார். இவரின் முதல் மழவில்கூடாரம் ஆகும். மிக சமீபத்தில், துரமுகம், மாலிக், சுருளி, எஸ்ஜி250 மற்றும் பீஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.