6 வருஷத்தில் 1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை! Maruti தயாரிப்புக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு!

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பிரபல கார் மாடல் ஒன்று ஆறு வருடங்களில் ஒரு மில்லியன் விற்பனை என்ற வரலாற்று சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

6 வருஷத்தில் 1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை! Maruti தயாரிப்புக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு... நம்பவே முடியல!

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இந்தளவு மாருதி கார் விற்பனையாகுமா என்ற ஆச்சரியத்தை அந்நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான பலினோ (Baleno) நமக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. இக்கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை மிக சிறந்த விற்பனையாகும் ஹேட்ச்பேக் காராக இருந்து வருகின்றது.

6 வருஷத்தில் 1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை! Maruti தயாரிப்புக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு... நம்பவே முடியல!

இதன் விளைவாக பலினோ இந்தியாவில் ஒரு மில்லியன் யூனிட் வரை விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் இக்காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்து ஆறு ஆண்டுகளே ஆகின்ற நிலையில் இத்தகைய பிரம்மிக்க வைக்கும் விற்பனை எண்ணிக்கையை பலினோ பெற்றிருக்கின்றது. ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் யூனிட்டுகள் ஆகும். இத்தகைய உச்சபட்ச எண்ணிக்கையிலேயே மாருதி சுசுகி பலினோ நம் நாட்டில் விற்பனையாகி இருக்கின்றது.

6 வருஷத்தில் 1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை! Maruti தயாரிப்புக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு... நம்பவே முடியல!

அதிலும், குறிப்பாக மே 2020 தொடங்கி அக்டோபர் 2021 ஆகிய மாதங்களுக்கு இடைப்பட்ட நாட்களில் மட்டும் 2.5 லட்சம் யூனிட்டுகள் பலினோ கார்கள் இந்தியாவில் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல மவுசு ஏற்பட்டிருப்பதை இந்த விற்பனை நமக்கு தெரியப்படுத்துகின்றது.

6 வருஷத்தில் 1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை! Maruti தயாரிப்புக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு... நம்பவே முடியல!

மாருதி சுசுகி பலினோ ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார் மாடலாகும். ஆகையால், தேவைக்கேற்ப இட வசதி மற்றும் சொகுசு அம்சங்கள் இந்த காரில் மிக தாரளமாக கிடைக்கும். குறிப்பாக, காரின் பின் பக்கத்தில் இருக்கும் இருக்கைகள் ஓர் அறைக்குள் இருப்பதைப் போல மிக சிறந்த லெக் ரூம் வசதியை அதன் பயணிகளுக்கு வழங்குகின்றது. பின் இருக்கையில் மூன்று பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

6 வருஷத்தில் 1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை! Maruti தயாரிப்புக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு... நம்பவே முடியல!

ஆனால், நெடுந்தூர பயணங்களின்போது மூன்று பேரால் அமர்ந்து பயணிப்பது சற்றே கஷ்டமானதாக இருக்கும். அதேநேரத்தில், இருவர் மட்டும் பயணிக்கும்போது மிக உல்லாசமான பயண அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும். பலினோ வீல் பேஸ் 2,520 மிமீட்டரையும், பூட் ஸ்பேஸையும் 339 லிட்டரையும் கொண்டிருக்கின்றது.

6 வருஷத்தில் 1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை! Maruti தயாரிப்புக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு... நம்பவே முடியல!

இந்த பூட் ஸ்பேஸை கூடுதலாக்கிக் கொள்ள முடியும். 60:40 என இருக்கையை மடித்து வைத்துக் கொள்வதனால் இதன் பூட் ஸ்பேஸை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். நகர்புற பயணங்களுக்கு மிக உகந்த வாகனமாக பலினோ இருக்கின்றது. இதற்கு இக்கார் கொண்டிருக்கும் உருவ அளவும் ஓர் முக்கிய காரணமாகும்.

6 வருஷத்தில் 1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை! Maruti தயாரிப்புக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு... நம்பவே முடியல!

பலினோ காரில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள்:

பலினோ காரில் 7 இன்ச் அளவுள்ள ஸ்மார்ட் ப்ளே தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி உடன்), சாவியில்லா நுழைவு, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், பன்முக தகவல்களை வழங்கும் திரை, தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், எல்இடி மின் விளக்குகள் உள்ளிட்டவை இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

6 வருஷத்தில் 1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை! Maruti தயாரிப்புக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு... நம்பவே முடியல!

எரிபொருள் சிக்கனம்:

மாருதி சுசுகி நிறுவனம் பலினோ காரில் இரு விதமான பெட்ரோல் எஞ்ஜினை தேர்வை வழங்குகின்றன. இரண்டும் 1.2 லிட்டர் மற்றும் 4 சிலிண்டர் மோட்டாராகும். இதில் விவிடி தொழில்நுட்பத்துடன் கிடைக்கும் எஞ்ஜின் 83 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

6 வருஷத்தில் 1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை! Maruti தயாரிப்புக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு... நம்பவே முடியல!

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த எஞ்ஜினில் வழங்கப்படுகின்றன. இந்த எஞ்ஜின் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.56 கிமீ முதல் 21.01 கிமீ வரை மைலேஜ் வழங்கும். இது அராய் வெளியிட்ட மைலேஜ் விபரம் ஆகும்.

6 வருஷத்தில் 1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை! Maruti தயாரிப்புக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு... நம்பவே முடியல!

மைல்டு ஹைபிரிட் வசதியுடன் கிடைக்கும் மற்றொரு பெட்ரோல் எஞ்ஜின் 90 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த எஞ்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது. இது 23.78 கிமீ வரை மைலேஜை வழங்கும். இதுவும் அராய் வெளியிட்ட தகவல் ஆகும். தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் எந்தவொரு பிரீமியம் ஹேட்ச்பேக் காரிலும் இந்த மைல்டு ஹைபிரிட் வசதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Maruti baleno hatchbacks sold one million with in 6 years
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X