என்னப்பா சொல்றீங்க இவ்ளோ விற்பனையாகியிருக்கா! Maruti Vitara Brezza விற்பனையில் கெத்து காட்டியிருக்கு!

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் விட்டாரா ப்ரெஸ்ஸா (Vitara Brezza) காம்பேக்ட் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியைச் சந்தித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

என்னப்பா சொல்றீங்க இவ்ளே விற்பனையாகியிருக்கா! Maruti Vitara Brezza விற்பனையில் கெத்து காட்டியிருக்கு! இந்தியர்கள் எல்லாரும் இந்த கார் பக்கம்தான் குவியிறாங்களோ!

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவை அலங்கரிக்கும் வகையில் ஏராளமான கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. ஆனால், அவற்றில் ஒரு சில மட்டுமே இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றன. அவற்றில் ஒன்றே மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் விட்டாரா ப்ரெஸ்ஸா (Vitara Brezza).

என்னப்பா சொல்றீங்க இவ்ளே விற்பனையாகியிருக்கா! Maruti Vitara Brezza விற்பனையில் கெத்து காட்டியிருக்கு! இந்தியர்கள் எல்லாரும் இந்த கார் பக்கம்தான் குவியிறாங்களோ!

இந்த கார் மாடல் காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் ஓர் தலைவனை போல் விளங்கும் வகையில் நாட்டில் விற்பனையைப் பெற்று வருகின்றது. உதாரணமாக, கடந்த மாத எஸ்யூவி கார் பிரிவில் மிக அதிகமான விற்பனையைப் பெற்ற நிறுவனத்திற்கு பெறுமை சேர்த்தது விட்டாரா ப்ரெஸ்ஸா. ஒட்டுமொத்தமாக 10,760 யூனிட்டுகள் விட்டாரா ப்ரெஸ்ஸா 2021 நவம்பரில் விற்பனையாகியிருக்கின்றன.

என்னப்பா சொல்றீங்க இவ்ளே விற்பனையாகியிருக்கா! Maruti Vitara Brezza விற்பனையில் கெத்து காட்டியிருக்கு! இந்தியர்கள் எல்லாரும் இந்த கார் பக்கம்தான் குவியிறாங்களோ!

இதுபோன்று தொடர்ச்சியாக இக்காருக்கு நல்ல விற்பனைக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இதன் விளைவாக விட்டாரா ப்ரெஸ்ஸாவிற்கு புதிய புகழ் நாட்டில் கிடைத்திருக்கின்றது. ஒட்டுமொத்தமாக விட்டாரா ப்ரெஸ்ஸா கார்கள் இதுவரை 7 லட்சம் யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மாதங்களில் மட்டும் 2 லட்சம் யூனிட்டுகள் விட்டாரா ப்ரெஸ்ஸாக்கள் விற்பனையாகியிருக்கின்றன.

என்னப்பா சொல்றீங்க இவ்ளே விற்பனையாகியிருக்கா! Maruti Vitara Brezza விற்பனையில் கெத்து காட்டியிருக்கு! இந்தியர்கள் எல்லாரும் இந்த கார் பக்கம்தான் குவியிறாங்களோ!

ஒட்டுமொத்தமாக இந்தியர்கள் அனைவரும் விட்டாரா ப்ரெஸ்ஸாவின் பக்கம் குவிந்திருப்பதை இந்த விற்பனை எண்ணிக்கைகள் நமக்கு தெரிவிக்கின்றன. இதற்கான காரணங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா காரில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகளை வழங்குகின்றது, மற்றும், இதை ஏன் பலர் தேர்வு செய்கின்றனர் ஆகிய காரணங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

என்னப்பா சொல்றீங்க இவ்ளே விற்பனையாகியிருக்கா! Maruti Vitara Brezza விற்பனையில் கெத்து காட்டியிருக்கு! இந்தியர்கள் எல்லாரும் இந்த கார் பக்கம்தான் குவியிறாங்களோ!

சிறந்த திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் எஞ்ஜின்

மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி காரில் புதிய 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த எஞ்ஜின் 105 பிஎஸ் மற்றும் 138 என்எம் டார்க் வரை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 18.76 கிமீ வரை மைலேஜ் வழங்கும். இது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும் விட்டாரா ப்ரெஸ்ஸா வெளிப்படுத்தும் மைலேஜ் திறன் ஆகும். இதன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வானது அதிகபட்சமாக 17.03 கிமீ வரை மைலேஜை வழங்கும்.

என்னப்பா சொல்றீங்க இவ்ளே விற்பனையாகியிருக்கா! Maruti Vitara Brezza விற்பனையில் கெத்து காட்டியிருக்கு! இந்தியர்கள் எல்லாரும் இந்த கார் பக்கம்தான் குவியிறாங்களோ!

கியர்பாக்ஸ்

4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் பழையதாக இருக்கலாம். ஆனால், டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் பெறும் பெட்ரோல் எஞ்ஜின் இதுவாகும். டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் மிக சிறந்த நம்பகமான மற்றும் ஸ்மூத்தான இயக்கம் கொண்டதாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக, அதிக போக்குவரத்து நெரிசலில் மிக பொருமையாக பயணிக்க இது உதவியாக இருக்கும். கியர் ஷிஃப்டிங்கில் இது மிக பொறுமையாக செயல்பாட்டாலும், த்ரோட்டில் உள்ளீட்டில் மிக சிறப்பாக செயல்படுகின்றது.

என்னப்பா சொல்றீங்க இவ்ளே விற்பனையாகியிருக்கா! Maruti Vitara Brezza விற்பனையில் கெத்து காட்டியிருக்கு! இந்தியர்கள் எல்லாரும் இந்த கார் பக்கம்தான் குவியிறாங்களோ!

இட வசதி:

மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸாவிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க கார் அதிக இட வசதியைக் கொண்டிருப்பதும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. குறிப்பாக இதன் பின்னிருக்கைகள் மிகவும் சொகுசான வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. மிக சிறந்த லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் உள்ளிட்டவற்றை இது வழங்கும். ஆகையால் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக இது காட்சியளிக்கின்றது.

என்னப்பா சொல்றீங்க இவ்ளே விற்பனையாகியிருக்கா! Maruti Vitara Brezza விற்பனையில் கெத்து காட்டியிருக்கு! இந்தியர்கள் எல்லாரும் இந்த கார் பக்கம்தான் குவியிறாங்களோ!

செலவு செய்யும் பணத்திற்கு உகந்த கார்

விட்டாரா ப்ரெஸ்ஸா, காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவின் குறைந்த விலை கார் அல்ல. ஆனாலும், செலவும் செய்யும் பணத்திற்கு உகந்த கார் மாடலாக இது இருக்கின்றது. ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார்கள் விட்டாரா ப்ரெஸ்ஸாவைக் காட்டிலும் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

என்னப்பா சொல்றீங்க இவ்ளே விற்பனையாகியிருக்கா! Maruti Vitara Brezza விற்பனையில் கெத்து காட்டியிருக்கு! இந்தியர்கள் எல்லாரும் இந்த கார் பக்கம்தான் குவியிறாங்களோ!

இருப்பினும், இந்திய சந்தையில் விட்டாரா ப்ரெஸ்ஸாவின் இடத்தை எந்த போட்டியாளர்களும் பிடிக்கவில்லை. நம்பகம், குறைந்த பராமரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இந்த கார் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

என்னப்பா சொல்றீங்க இவ்ளே விற்பனையாகியிருக்கா! Maruti Vitara Brezza விற்பனையில் கெத்து காட்டியிருக்கு! இந்தியர்கள் எல்லாரும் இந்த கார் பக்கம்தான் குவியிறாங்களோ!

சிறப்பம்சங்கள்

விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி காரில் சிறப்பம்சங்களும் ஏராளம். இக்காரில் 7 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), பன்முக தகவல்களை வழங்கும் திரை, அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், சாவியில்லா நுழைவு, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி, தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமிரா மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

என்னப்பா சொல்றீங்க இவ்ளே விற்பனையாகியிருக்கா! Maruti Vitara Brezza விற்பனையில் கெத்து காட்டியிருக்கு! இந்தியர்கள் எல்லாரும் இந்த கார் பக்கம்தான் குவியிறாங்களோ!

இதுமட்டுமின்றி, எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி பகல்நேர மின் விளக்கு, எல்இடி டெயில் லேம்ப், தானியங்கி ஹெட்லேம்ப், மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள், கூல்டு குளோவ் பாக்ஸ், எல்இடி பனி மின் விளக்கு, முன் பக்க இருக்கைக்கும் ஆர்ம் ரெஸ்ட், மின்சாரத்தால் கட்டுப்படுத்தக் கூடிய குரோம் பூச்சுக் கொண்ட ரியர் வியூ கண்ணாடிகள் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

என்னப்பா சொல்றீங்க இவ்ளே விற்பனையாகியிருக்கா! Maruti Vitara Brezza விற்பனையில் கெத்து காட்டியிருக்கு! இந்தியர்கள் எல்லாரும் இந்த கார் பக்கம்தான் குவியிறாங்களோ!

நிறுவனத்தின் சர்வீஸ் நெட்வொர்க் அதிகம்

மாருதி சுசுகி நிறுவனம் மிகப் பெரிய சர்வீஸ் நெட்வொர்க்குடன் நாட்டில் செயல்பட்டு வருகின்றது. இதன் விளைவாகவே நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்து வருகின்றது. அதுமட்டுமின்றி ஓர் பிரீமியம் தர பைக்கை பராமரிப்பதற்கு இணையான செலவு மட்டுமே மாருதி கார்களை பராமரிக்க ஏற்படுகின்றது. இதுபோன்ற பல காரணங்களினாலேயே விட்டாரா ப்ரெஸ்ஸாவிற்கு நல்ல வரவேற்பு இந்தியாவில் கிடைக்க காரணமாக இருக்கின்றன.

Most Read Articles

English summary
Maruti suzuki vitara brezza sales passed 7 lakh units in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X