Just In
- just now
ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' இருக்கான்னு பார்த்து வாங்குங்க... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
- 21 min ago
புதிய பெயரை பெறுகிறது டாடாவின் பிரபல மின்சார கார்... பெயர் மட்டுமல்ல ரேஞ்ஜும் அதிகமாயிடுச்சு... அப்போ விலை?..
- 2 hrs ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 2 hrs ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
Don't Miss!
- Finance
1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜிஎம் நிறுவனம்.. என்ன காரணம்..?!
- News
மகன் மறைவுக்கு பிறகு மன அழுத்தத்திலேயே இருந்தார் விவேக்... அவரது மறைவு பேரிழப்பு - பிரேமலதா
- Lifestyle
ஓட்ஸ் சாப்பிடும்போது நாம் செய்யும் இந்த தவறுகள் நமக்கே ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்காம்...!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Movies
விவேக் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...தமிழக அரசு உத்தரவு
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரே நேரத்தில் 20 சூப்பர் பைக் உரிமைதாரர்களுக்கு செல்லாண்... லிஸ்ட்லையே இல்லாத காரணத்தை கூறிய போலீஸ்!!
ஒரே நேரத்தில் இருபது சூப்பர் பைக் உரிமையாளர்களுக்கு அபராத செல்லாண் வழங்கிய போலீஸார் லிஸ்ட்லையே இல்லாத ஓர் காரணத்தை கூறியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சில நேரங்களில் காவல்துறையில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் கார்பரேட் நிறுவன ஊழியர்களைப் போல் செயல்படுகின்றனர். வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடங்கி சாலையோர கடைகளுக்கு பெட்டி கேஸ் போடுவது வரை டார்கெட் வைத்து அவர்கள் செயல்படுவதை நம்மால் காண முடிகின்றது.

இதனை உறுதி செய்யும் வகையில் ஓர் சம்பவம் புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இந்தியாவில் அண்மைக் காலங்களாக சூப்பர் பைக் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சூப்பர் பைக்குகளைப் பயன்படுத்தும் இளைஞர்கள் குழுவாக கூடி வார இறுதி நாட்களை நெடுந்தூர பயணத்தின் வாயிலாக எஞ்ஜாய் செய்து வருகின்றனர். அந்தவகையில், 20க்கும் மேற்பட்ட சூப்பர் பைக் உரிமையாளர் வார இறுதி நாள் பயணத்தை மேற்கொள்ளும்போது மும்பை நகர போலீஸாரால் அபராத செல்லாணைப் பெற்றிருக்கின்றனர்.

இந்த அபராத செல்லாணை வழங்கியதற்காக போலீஸார் கூறியிருக்கும் காரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் சூப்பர் பைக்குகள் பயணிக்க அனுமதி இல்லை என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.

இதற்காக அபராதமாக ரூ. 1000 அவர்களிடத்தில் இருந்து வசூலிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு பைக்கரிடமும் இருந்து இவ்வாறு ரூ. 1000 என 20க்கும் மேற்பட்ட சூப்பர் பைக் உரிமையாளர்களைக் கொண்ட அக்குழுவிடம் போலீஸ் மிக கராராக அபராதத்தை வசூலித்திருக்கின்றது.

சூப்பர் பைக்குகள், பெங்களூரு-புனே நெடுஞ்சாலையில் பயணிக்கக் கூடாது என விதிக்கப்பட்டிருக்கும் தடை உத்தரவை காண்பிக்குமாறு சூப்பர் பைக் உரிமையாளர்கள் போலீஸிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், காவல்துறை தரப்பில் இருந்து எந்த பதிலும். இல்லை ஆதாரம் இல்லா வாய்வழி அறிவிப்பை மட்டுமே அவர்கள் கூறியிருக்கின்றனர்.

தொடர்ந்து, "சூப்பர் பைக்கர்களால் அருகில் இருக்கும் கிராமவாசிகள் அதிகம் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். சமீபத்தில்கூட சூப்பர் பைக் ஒன்று ஏற்படுத்திய விபத்தால் அப்பாவி கிராமவாசி ஒருவர் கொல்லப்பட்டதாக" காவல்துறை மூத்தி அதிகாரி ஒருவர் சூப்பர் பைக் குழுவிடும் கூறினார்.

இவ்வாறு சில முரண்பாடான கருத்துகளையே காவல்துறையினர் அபராதம் வழங்குவதற்கு காரணமாக கூறினர். தொடர்ந்து, சூப்பர் பைக்குகள் செல்ல வேறு ஏதேனும் பாதை இருக்கின்றதா? என கேட்கப்பட்டதற்கு, அதை நீங்கள் அரசாங்கத்திடம்தான் கேட்க வேண்டும் எனவும் அந்த காவல்துறை மூத்த அதிகாரி பதில் கூறினார்.

போலீஸாரின் இந்த முரண்பாடான செயல்பாடுகுறித்த வீடியோவை அமே டில்லூ எனும் தளம் வெளியிட்டுள்ளது. மிகவும் ஜாலியாக மேற்கொண்ட வார இறுதி பயணம் போலீஸாரின் நடவடிக்கையால் கசப்பான அனுபவமாக ரைடர்களுக்கு மாறியிருக்கின்றது.
Image Courtesy: Amey Tilloo
பொதுவாக, சூப்பர் பைக் ரைடர்கள் என்றாலே அதிக வேகத்தில் பயணிப்பவர்கள், குழுக்களிடையே ரேஸ் செய்துகொள்வார்கள் என்பதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவிய வண்ணம் இருக்கின்றன. இதுமாதிரியான எந்தவொரு காரணத்தையும் முன் வைக்காமல் சூப்பர் பைக்குகள் செல்லவே தடை விதிக்கப்பட்டுள்ளது என போலீஸார் புதுமையான காரணத்தை கூறியிருப்பது சூப்பர் பைக் பயனர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.