இந்த வேகத்தை விட்டு தாண்ட கூடாது... டூ-வீலர்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு... ஒன்றிய அரசு அதிரடி!

இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டை விதிக்கும் புதிய விதியை ஒன்றிய அமைச்சகம் அறிமுகம் செய்து வைத்துள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த புதிய விதியை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்த இன்னும் முக்கிய தகவல்களைக் கீழே காணலாம், வாங்க.

இந்த வேகத்தை விட்டு தாண்ட கூடாது... டூ-வீலர்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு... ஒன்றிய அரசு அதிரடி!

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அரசுகள் பல்வேறு புதிய விதிகளை நாட்டில் அமல்படுத்தி வருகின்றன. அதிலும், குறிப்பாக இருசக்கர வாகனம் விஷயத்தில் ஒன்றியம் மற்றும் மாநிலம் ஆகிய இரு அரசுகளுமே சற்று கூடுதலான தனி கவனத்தைச் செலுத்தி வருகின்றன.

இந்த வேகத்தை விட்டு தாண்ட கூடாது... டூ-வீலர்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு... ஒன்றிய அரசு அதிரடி!

இதை உறுதிப்படுத்தும் வகையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) இருசக்கர வாகனம் சார்ந்து ஓர் புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது. இருசக்கர வாகனத்தை 40 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் இயக்கக் கூடாது என்பதே புதிய விதியின் கட்டுப்பாடு ஆகும்.

இந்த வேகத்தை விட்டு தாண்ட கூடாது... டூ-வீலர்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு... ஒன்றிய அரசு அதிரடி!

இந்த விதி, இருசக்கர வாகனத்தின் பின் பக்கத்தில் நான்கு வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளைக் கொண்டு பயணிக்கும் டூ-வீலர்களுக்கு மட்டுமே பொருந்தும். இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் ஒன்றிய அரசு இந்த புதிய விதியை உருவாக்கியுள்ளது.

இந்த வேகத்தை விட்டு தாண்ட கூடாது... டூ-வீலர்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு... ஒன்றிய அரசு அதிரடி!

இதுமட்டுமின்றி பின்னால் அமரும் சிறுவர்களுக்கும் விபத்தில் இருந்து பாதுகாக்கக் கூடிய தலைக்கவசங்களை அணிவிக்க வேண்டும் என்பதையும் புதிய விதி வலியுறுத்துகின்றது. ஏற்கனவே, இருசக்கர வாகன ஓட்டி மற்றும் பின்னால் அமர்ந்து பயணிக்கும் பயணி ஆகிய இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த வேகத்தை விட்டு தாண்ட கூடாது... டூ-வீலர்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு... ஒன்றிய அரசு அதிரடி!

இந்த நிலையில், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சகம் புதிய விதியை அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து, சிறுவர்கள் அல்லது குழந்தைகள் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தங்களுடன் இணைக்கப்பட்ட (சேர்த்துக் கட்டப்பட்ட) நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் புதிய விதி கூறுகின்றது.

இந்த வேகத்தை விட்டு தாண்ட கூடாது... டூ-வீலர்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு... ஒன்றிய அரசு அதிரடி!

சிறுவர்கள் அல்லது குழந்தைகளை நம்முடன் இணைத்தவாறு அழைத்துச் செல்ல ஏதுவான ஆடைகள் மற்றும் பேக்-பேக்குகள் தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இப்புதிய விதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனை வெளியிட்ட கையோடு அமைச்சகம் புதிய விதி குறித்த கருத்துகளை வழங்கலாம் என தெரிவித்திருக்கின்றது.

இந்த வேகத்தை விட்டு தாண்ட கூடாது... டூ-வீலர்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு... ஒன்றிய அரசு அதிரடி!

அண்மையில், ஓர் மாநில அரசு இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது குடை பயன்படுத்தக் கூடாது என்ற புதிய விதியை வெளியிட்டிருந்தது. கேரள மாநில அரசே இந்த விநோத அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தற்போது மாநிலத்தில் மழைக் காலம் தொடங்கியிருப்பதால் பலர் தங்களின் முக்கிய தேவைகளில் ஒன்றாக குடையும் தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர்.

இந்த வேகத்தை விட்டு தாண்ட கூடாது... டூ-வீலர்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு... ஒன்றிய அரசு அதிரடி!

இதேபோல், இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களும் குடையை எடுத்துச் செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போதே குடைகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் போது காற்றின் வேகம் மற்றும் மழை ஆகியவற்றால் குடையைப் பயன்படுத்துவது சவாலானதாக மாறிவிடுகின்றது. இது பல நேரங்களில் விபத்திலேயேக் கொண்டு சேர்க்கின்றது.

இந்த வேகத்தை விட்டு தாண்ட கூடாது... டூ-வீலர்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு... ஒன்றிய அரசு அதிரடி!

இதைக் கருத்தில் கொண்டே கேரள அரசு இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கொடையைப் பயன்படுத்தக் கூடாது என கடும் எச்சரிக்கையை அண்மையில் வெளியிட்டது. பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் இதுமாதிரியான வித்தியாசமான அறிவிப்புகளை (விதிகளை) வெளியிட்டு வருகின்றன.

இந்த வேகத்தை விட்டு தாண்ட கூடாது... டூ-வீலர்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு... ஒன்றிய அரசு அதிரடி!

பிற வாகனங்களைக் காட்டிலும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது பாதுகாப்பு சற்று குறைவு ஆகும். எனவேதான், இருசக்கர வாகனங்கள் சார்ந்து பல்வேறு புதிய விதிகளை அரசுகள் வெளியிட்டு வருகின்றன. இருப்பினும், ஒரு சிலர் இவ்விதிகளை காற்றில் விட்ட வண்ணம் இருக்கின்றனர். அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்து வருகின்றது. அதேநேரத்தில் வாகனங்கள் சார்ந்து நடைபெறும் விதிமீறல்களைக் களையெடுக்கும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கை அது எடுத்து வருகின்றது. அந்தவகையில், இணையத்தில் வைரலாகும் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டும் கூட காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Morth proposed new speed limit for bikes with child pillion rider
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X