Swift காரவிட மிக மிக அதிக விலை! இந்தியாவில் Moto Guzzi V85 TT பைக் அறிமுகம்! விலைய மட்டும் கேட்காதீங்க!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் Suzuki Swift காரைக்காட்டிலும் மிக மிக அதிக விலையில் ஓர் பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அதன் விலை மற்றும் பிற முக்கிய விபரங்களைக் காட்டிலும்.

Swift காரவிட மிக மிக அதிக விலை! இந்தியாவில் Moto Guzzi V85 TT பைக் அறிமுகம்! விலைய மட்டும் கேட்காதீங்க!

இத்தாலியின், மாண்டெல்லோ டெல் லேரியோ (Mandello del Lario)-வை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் Moto Guzzi (மோட்டோ குஸ்ஸி). இந்நிறுவனம் பியாஜியோ நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகின்றது. ஆம், இதுவே மோட்டோ குஸ்ஸி-இன் தாய் நிறுவனம் ஆகும்.

Swift காரவிட மிக மிக அதிக விலை! இந்தியாவில் Moto Guzzi V85 TT பைக் அறிமுகம்! விலைய மட்டும் கேட்காதீங்க!

இந்த நிறுவனமே தனது உலக புகழ்பெற்ற பைக் மாடல் ஒன்றை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. V85 TT எனும் மாடலையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு மிக அதிகபட்சமாக ரூ. 15.40 லட்சம் என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. தற்போது இந்திய சந்தையில் ரூ. 5.81 லட்சம் தொடங்கி ரூ. 8.42 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Swift காரவிட மிக மிக அதிக விலை! இந்தியாவில் Moto Guzzi V85 TT பைக் அறிமுகம்! விலைய மட்டும் கேட்காதீங்க!

இதைக் காட்டிலும் மிக அதிக விலைக் கொண்ட பைக்காக V85 TT விற்பனைக்கு வந்திருக்கின்றது. இரு விதமான நிற தேர்வுகளில் இக்கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அந்தவகையில், Giallo Mojave (மஞ்சள் மற்றும் வெள்ளை) மற்றும் Rosso Uluru (சிவப்பு மற்றும் வெள்ளை) ஆகிய நிற தேர்வுகளிலேயே மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.

Swift காரவிட மிக மிக அதிக விலை! இந்தியாவில் Moto Guzzi V85 TT பைக் அறிமுகம்! விலைய மட்டும் கேட்காதீங்க!

இத்துடன், பொதுவான நிறமாக பைக்கின் ஃப்ரேம்களுக்கு சிவப்பு நிறத்தை மோட்டோ குஸ்ஸி பயன்படுத்தியிருக்கின்றது. அதாவது, Giallo Mojave மற்றும் Rosso Uluru ஆகிய இரு நிற தேர்வு பைக் மாடல்களிலும் சிவப்பு நிறத்தாலான ஃப்ரேம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Swift காரவிட மிக மிக அதிக விலை! இந்தியாவில் Moto Guzzi V85 TT பைக் அறிமுகம்! விலைய மட்டும் கேட்காதீங்க!

தொடர்ந்து, இரு தையல் போடப்பட்ட பார்டர்கள் கொண்ட இருக்கை கவர். அதில், மோட்டோ குஸ்ஸி-இன் எம்பளம் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பைக்கின் கூடுதல் கவர்ச்சிக்காக கருப்பு நிற ரிம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி புதுப்பிக்கப்பட்ட எலெக்ட்ரானிக் எஞ்ஜின் கன்ட்ரோல் சிஸ்டம், ride-by-wire த்ரோட்டில் மற்றும் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் வண்ண திரை உள்ளிட்ட சிறப்பு தொழில்நுட்பங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

Swift காரவிட மிக மிக அதிக விலை! இந்தியாவில் Moto Guzzi V85 TT பைக் அறிமுகம்! விலைய மட்டும் கேட்காதீங்க!

இதுமாதிரியான பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே மோட்டோ குஸ்ஸி வி85 டிடி பைக்கின் விலை பல மடங்கு உயர்ந்து காணப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க இந்த பைக் இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகள் மற்றும் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Swift காரவிட மிக மிக அதிக விலை! இந்தியாவில் Moto Guzzi V85 TT பைக் அறிமுகம்! விலைய மட்டும் கேட்காதீங்க!

அந்தவகையில், முழு எல்இடி இரட்டை முகப்பு மின் விளக்கு, மேன்டெல்லோ ஈகில் டிஆர்எல், க்ரூஸ் கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல், ஏபிஎஸ், ஹேண்ட் குவார்ட், அலுமினியம் ஆயில் சம்ப் குவார்ட் மற்றும் ஃபோர்க் ஸ்டான்சியன் குவார்ட்கள் உள்ளிட்டவை இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

Swift காரவிட மிக மிக அதிக விலை! இந்தியாவில் Moto Guzzi V85 TT பைக் அறிமுகம்! விலைய மட்டும் கேட்காதீங்க!

இந்த பைக்கில் இரட்டைத் தலை கொண்ட 853 சிசி, ஏர் கூல்டு, 90 டிகிரி எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகபட்சமாக 75 பிஎச்பி மற்றும் 82 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் தேர்வில் இயங்கும். இத்துடன் ஐந்து விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Swift காரவிட மிக மிக அதிக விலை! இந்தியாவில் Moto Guzzi V85 TT பைக் அறிமுகம்! விலைய மட்டும் கேட்காதீங்க!

சாலை, மழை, ஆஃப்-ரோடு, ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் (தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்) இந்த மோட்களே பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இப்பைக்கின் ஒட்டுமொத்த எடை 230 கிலோவாகும். இதில், 23 லிட்டர் ப்யூவல் டேங்க், அட்ஜஸ்டபிள் 41 மிமீ அளவுள்ள யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்தில் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் பின்பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Swift காரவிட மிக மிக அதிக விலை! இந்தியாவில் Moto Guzzi V85 TT பைக் அறிமுகம்! விலைய மட்டும் கேட்காதீங்க!

கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த ரிம்கள் 17 இன்சிலானது ஆகும். இது பின் பக்க வீலில் இடம் பெற்றிருக்கும் ரிம்மின் அளவாகும். முன் பக்கத்தில் 19 இன்சிலான ரிம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த வீல்களில் 110/80 (முன் பக்கம்) மற்றும் 50/70 (பின் பக்கம்) ஆகிய அளவுள்ள அனைத்து வகையான சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Swift காரவிட மிக மிக அதிக விலை! இந்தியாவில் Moto Guzzi V85 TT பைக் அறிமுகம்! விலைய மட்டும் கேட்காதீங்க!

இவ்விரு டயர்களுமே ட்யூப் அல்லாதவை ஆகும். இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் திறனுக்காக 320 மிமீ அளவுள்ள டிஸ்க் முன் பக்க வீலிலும், 260 மிமீ அளவுள்ள டிஸ்க் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் முன் பக்கத்தில் உள்ள டிஸ்க்குடன் சேர்த்து 4 பிஸ்டன் ப்ரெம்போ ரேடியல் காலிபர்களும், பின் பக்கத்தில் இருக்கும் டிஸ்க்குடன் சேர்த்து 2 பிஸ்டன் காலிபர்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் இரட்டை சேனல் ஏபிஎஸ்-ம் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Moto guzzi launches v85 tt in india at rs 15 40 lakhs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X