டபுள்-சைலன்ஸருடன் எந்த பைக்கை வாங்கலாம்? சுஸுகி ஜிக்ஸெர் To டோமினார் 400

மோட்டார்சைக்கிளில் பயணம் செய்ய யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். சிலருக்கு மோட்டார்சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்கள் மட்டும் மிகவும் பிடித்துபோய் இருக்கலாம். உதாரணத்திற்கு சைலன்சர். இதனால் அத்தகையவர்கள் தங்களது பிடித்தமான பைக்கை வேறொரு பைக்குடன் ஒப்பிட்டு பார்க்கும்போதும் அந்த குறிப்பிட்ட பாகங்களை தான் இரண்டும் மாடல்களிலும் ஒப்பீடு செய்து பார்ப்பர்.

டபுள்-சைலன்ஸருடன் எந்த பைக்கை வாங்கலாம்? சுஸுகி ஜிக்ஸெர் To டோமினார் 400

இந்த வகையில் நாம் இந்திய செய்தியில் இரு எக்ஸாஸ்ட் குழாய்களுடன் (சைலன்ஸர்கள்) விற்பனை செய்யப்படும் சில மோட்டார்சைக்கிள்களை பற்றி பார்க்கலாம். இந்த செய்தி தொகுப்பின் மூலமாக எந்த மாடலை தேர்வு செய்வது என்ற குழப்பம் இருந்தால், அதனை தீர்த்து கொள்ளலாம்.

டபுள்-சைலன்ஸருடன் எந்த பைக்கை வாங்கலாம்? சுஸுகி ஜிக்ஸெர் To டோமினார் 400

சுஸுகி ஜிக்ஸெர் 150/ 250

இந்திய சந்தையில் இளம் தலைமுறையினரின் பிரதான தேர்வுகளுள் ஒன்றாக விளங்கும் ஜிக்ஸெர் பைக்குகளில் (ஜிக்ஸெர் 150/ 250) சுஸுகி நிறுவனம் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பை வழங்குகிறது. ஆனால் இவை இரண்டிலும் இரட்டை-எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பானது ஒரே பக்கமாக வழங்கப்படுகிறது.

டபுள்-சைலன்ஸருடன் எந்த பைக்கை வாங்கலாம்? சுஸுகி ஜிக்ஸெர் To டோமினார் 400

அதேநேரம் இவை நறுக்கப்பட்டதுபோல் அளவில் சிறியவைகளாக வழங்கப்படுகின்றன. பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பினும், எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து வெளிவரும் சத்தம் தான் சில வாடிக்கையாளர்களை பெரிதாக கவரவில்லை. எனவே மற்ற இரட்டை-எக்ஸாஸ்ட் மோட்டார்சைக்கிள்களையும் பார்த்துவிட்டு இந்த சுஸுகி பைக்குகளை தேர்வு செய்யலாமா என்பதை யோசியுங்கள்.

டபுள்-சைலன்ஸருடன் எந்த பைக்கை வாங்கலாம்? சுஸுகி ஜிக்ஸெர் To டோமினார் 400

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி

இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை-குழல் எக்ஸாஸ்ட் மோட்டார்சைக்கிளாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மாடல் விளங்குகிறது. 2016இல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிவிஎஸ் அப்பாச்சி பைக் தற்சமயம் இந்திய சந்தையில் தரமான 200சிசி மோட்டார்சைக்கிளுள் ஒன்றாக விளங்குகிறது. இதன் இரட்டை-குழல் எக்ஸாஸ்ட் அமைப்பினுள் இரு கேட்டலிடிக் கன்வெர்டர்கள் வழங்கப்படுகின்றன.

டபுள்-சைலன்ஸருடன் எந்த பைக்கை வாங்கலாம்? சுஸுகி ஜிக்ஸெர் To டோமினார் 400

இந்த கன்வெர்டர்கள் தான் இந்த 200சிசி டிவிஎஸ் பைக்கை தற்போதைய புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக மாற்றியுள்ளன. அதுமட்டுமில்லாமல் எக்ஸாஸ்ட் அமைப்பின் வடிவத்தையும் புதுமையானதாக டிவிஎஸ் வழங்குகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த அளவிற்கு ஸ்டைலிஷான எக்ஸாஸ்ட் குழாய் மற்ற 250சிசி, 400சிசி பைக்குகளில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

டபுள்-சைலன்ஸருடன் எந்த பைக்கை வாங்கலாம்? சுஸுகி ஜிக்ஸெர் To டோமினார் 400

ஜாவா/ ஜாவா 42

இந்த லிஸ்ட்டில் நாம் பார்க்கப்போகும், இருபக்கத்திலும் எக்ஸாஸ்ட் குழாய்களை கொண்ட முதல் பைக்குகள் ஜாவா & ஜாவா 42 ஆகும். கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்த ஜாவா பைக்குகளின் தோற்றத்தை கடந்த 2020ஆம் ஆண்டில் தற்கால மாடர்னில் அப்டேட் செய்திருந்தது. இந்த அப்டேட்களின்படி முதன்முதலாக தயாரிக்க துவங்கப்பட்டதில் இருந்து க்ரோம் நிறத்தில் வழங்கப்பட்டு வந்த இவற்றின் எக்ஸாஸ்ட் குழாய்கள் முதன்முறையாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டன.

டபுள்-சைலன்ஸருடன் எந்த பைக்கை வாங்கலாம்? சுஸுகி ஜிக்ஸெர் To டோமினார் 400

குறைந்த என்ஜின் வேகத்திலும், அல்லது அதனை காட்டிலும் சற்று கூடுதல் என்ஜின் வேகத்திலும் இந்த ஜாவா பைக்குகள் சிறப்பானவைகளாக உள்ளன. ஆனால் அதிவேகத்தில் செல்லும்போது அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்கிற கருத்து பரவலாக உள்ளது. ஏனெனில் இவற்றில் DOHC என்ஜின் பொருத்தப்படுகிறது.

டபுள்-சைலன்ஸருடன் எந்த பைக்கை வாங்கலாம்? சுஸுகி ஜிக்ஸெர் To டோமினார் 400

பஜாஜ் பல்சர் 250

மிக சமீபத்தில் புத்தம் புதிய பல்சர் பைக்குகளாக என்250 & எஃப்250-ஐ பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தையில் பல்சர் பைக்குகளின் 20ஆம் வருட நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இவற்றிலும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கை போன்று இரட்டை-குழல் எக்ஸாஸ்ட் அமைப்பு ஒரு பக்கமாக வழங்கப்பட்டுள்ளது.

டபுள்-சைலன்ஸருடன் எந்த பைக்கை வாங்கலாம்? சுஸுகி ஜிக்ஸெர் To டோமினார் 400

இருப்பினும் அதேநேரம் அப்பாச்சி மாடலில் வழங்கப்பட்டிருக்கும் நீளத்திற்கு இவை இல்லை. ஜிக்ஸெர் பைக்குகள் கொண்டிருப்பதை போன்று நறுக்கப்பட்ட வடிவில் எக்ஸாஸ்ட் குழாய்களை இந்த புதிய பல்சர் பைக்குகள் கொண்டுள்ளன. இதன் எக்ஸாஸ்ட் சத்தம் குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தோம். அதில் நீண்ட நேரம் கழித்து என்ஜினை ஸ்டார்ட் செய்ததால் சற்று இரைச்சலை கேட்க முடிகிறது.

டபுள்-சைலன்ஸருடன் எந்த பைக்கை வாங்கலாம்? சுஸுகி ஜிக்ஸெர் To டோமினார் 400

ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650

ராயல் என்பீல்டு நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தான் அப்டேட் செய்யப்பட்ட 650 இரட்டை பைக்குகளை (இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650) அறிமுகம் செய்திருந்தது. இரு பக்கங்களிலும் எக்ஸாஸ்ட் குழாய்களுடன் ஜாவா பைக்குகளுக்கு அடுத்து மலிவான விலையில் கிடைக்கக்கூடியவைகளாக இவை விளங்குகின்றன.

டபுள்-சைலன்ஸருடன் எந்த பைக்கை வாங்கலாம்? சுஸுகி ஜிக்ஸெர் To டோமினார் 400

ராயல் என்பீல்டு 650 இரட்டை பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.50 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. ராயல் என்பீல்டு பைக்குகளின் எக்ஸாஸ்ட் சத்தத்தை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என்றே நினைக்கிறேன். அதிலும் இவை ராயல் என்பீல்டின் முதன்மையான மோட்டார்சைக்கிள்கள், சொல்லவா வேண்டும்.

டபுள்-சைலன்ஸருடன் எந்த பைக்கை வாங்கலாம்? சுஸுகி ஜிக்ஸெர் To டோமினார் 400

பஜாஜ் டோமினார் 400

ஒரே பக்கத்தில் இரட்டை-குழல் எக்ஸாஸ்ட் அமைப்பை கொண்ட ஸ்டைலிஷான மோட்டார்சைக்கிள்களுள் டோமினார் 400 ஒன்றாகும். இதன் எக்ஸாஸ்ட் சத்தம் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கை காட்டிலும் உறுமக்கூடியதாக (400சிசி ஆயிற்றே) உள்ளது. இந்த பைக்கில் 100kmph வேகத்தை எட்டுவதும் எளிமையானதாக உள்ளது.

டபுள்-சைலன்ஸருடன் எந்த பைக்கை வாங்கலாம்? சுஸுகி ஜிக்ஸெர் To டோமினார் 400

சவுகரியமான இருக்கை அமைப்புடன் நன்கு அகலமானதாக வடிவமைக்கப்படுகின்ற இந்த டோமினார் மாடலில் தொலைத்தூர பயணங்களை தாராளமாக எந்தவொரு சிரமுமின்றி மேற்கொள்ளலாம். இதன் எக்ஸாஸ்ட் குழாய் ஆனது பைக்கின் பருமனான தோற்றத்திற்கு ஏற்ப அகலமானதாக, அதேநேரம் நறுக்கப்பட்ட வடிவில் வழங்கப்படுகிறது.

Most Read Articles

English summary
4 Motorcycles in India with Double Barrel Exhaust.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X