சுசுகி ஹயபுசா பைக்கில் வலம் வந்த போக்குவரத்து காவலர்... இதோட விலைய கேட்டீங்கனா மயக்கமே போட்ருவீங்க!!

போக்குவரத்து காவலர் ஒருவர் சுசுகி ஹயபுசா பைக்கில் வலம் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

சுசுகி ஹயபுசா பைக்கில் வலம் வந்த போக்குவரத்து காவலர்... இதோட விலைய கேட்டீங்கனா மயக்கமே போட்ருவீங்க!!

சூப்பர் வாகனங்கள் எனப்படும் அதி-திறன் வாய்ந்த கார், பைக்குகளை விரும்பாத நபர்களைக் காண்பது மிக மிக அரிது. பலரின் கனவு வாகனங்களில் ஒன்றாக சூப்பர் வாகனங்கள் இருக்கின்றன. குறிப்பாக, இளைஞர்கள் பலருடைய கனவாக சூப்பர் பைக்குகள் இருக்கின்றன. இவற்றின் விலை சற்று மிக அதிகம் என்பதனால் சாலைகளில் மிக குறைவாகவே இழை தென்படுகின்றன.

சுசுகி ஹயபுசா பைக்கில் வலம் வந்த போக்குவரத்து காவலர்... இதோட விலைய கேட்டீங்கனா மயக்கமே போட்ருவீங்க!!

இருப்பினும், இளைஞர்கள் பலர் இந்த வாகனத்தை எப்படியாவது வாங்கியே ஆக வேண்டும் என்ற கனவில் இருந்து வருகின்றனர். ஏன், ஒரு சிலர் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சூப்பர் பைக்குகளை ஓட்டியாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.

சுசுகி ஹயபுசா பைக்கில் வலம் வந்த போக்குவரத்து காவலர்... இதோட விலைய கேட்டீங்கனா மயக்கமே போட்ருவீங்க!!

இந்த எண்ணம் நம்மைப் போன்ற சாதாரணமான இளைஞர்களுக்கு மட்டுமில்லைங்க சில காவல் அதிகாரிகளுக்கும் இருக்கிறது. இதனை உறுதி செய்யும் வகையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஓர் சம்பவம் அரங்கேறியிருக்கின்று. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் காண இருக்கின்றோம்.

சுசுகி ஹயபுசா பைக்கில் வலம் வந்த போக்குவரத்து காவலர்... இதோட விலைய கேட்டீங்கனா மயக்கமே போட்ருவீங்க!!

உலகின் மிகவும் புகழ்வாய்ந்த சூப்பர் பைக் மாடல்களில் சுசுகி ஹயபுசாவும் ஒன்று. இப்பைக் இந்தியாவில் ரூ. 13.7 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது ஆரம்பநிலை மாடலின் விலை மட்டுமே ஆகும். இத்தகைய அதிகபட்ச விலையை இப்பைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் ஹயபுசா பைக்கை சாலையில் பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கின்றது.

சுசுகி ஹயபுசா பைக்கில் வலம் வந்த போக்குவரத்து காவலர்... இதோட விலைய கேட்டீங்கனா மயக்கமே போட்ருவீங்க!!

இத்தகைய பைக்கை சாலையில் பார்த்த போக்குவரத்து காவலர் ஒருவரே அதன் உரிமையாளரிடத்தில் அனுமதி பெற்று ஒரு ரவுண்டு சென்று வந்திருக்கின்றார். இதுகுறித்த வீடியோவை சிஎஸ்12 வ்ளாக் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது. காவலர்கள் இதுபோன்ற சூப்பர் பைக்குகளை ஓட்டி பார்ப்பது முதல் முறையல்ல.

சுசுகி ஹயபுசா பைக்கில் வலம் வந்த போக்குவரத்து காவலர்... இதோட விலைய கேட்டீங்கனா மயக்கமே போட்ருவீங்க!!

முன்னதாக, தெலங்கானா மாநிலத்தில்கூட இதுபோன்றதொரு சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவத்தில் டுகாட்டி பைக்கை போலீஸார் இயக்கினர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிரீமியம் வசதிகள் கொண்ட சூப்பர் பைக்காகும்.

Image Courtesy: CS 12 VLOGS

இந்த நிலையிலேயே மும்பை நகரத்தில் சுசுகி ஹயபுசா பைக்கைப் போலீஸார் ஒருவர் இயக்குவது போன்ற காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. வீடியோவில், போலீஸார் மிகவும் பொறுமையாக பைக்கை ஓட்டி வந்து நிறுத்தும் காட்சிகள் அடங்கியிருக்கின்றன.

இந்த சம்பவத்தை வைத்து பார்க்கையில் போலீஸார்களுக்கும் சூப்பர் பைக்குகள் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகின்றது. சுசுகி ஹயபுசா பைக்கில் 1,340சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 190 பிஎஸ் மற்றும் 150 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 299 கிமீ ஆகும். இத்தகைய சூப்பர் பைக்கையே போலீஸார் மிகவும் குறைந்த வேகத்தில் ஓட்டி பார்த்திருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Traffic Police Enjoys Ride With Suzuki Hayabusa SuperBike Video. Read In Tamil.
Story first published: Tuesday, March 16, 2021, 12:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X