புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் பைக்கின் டீசர் வெளியீடு!! அறிமுகம் இந்த அக்டோபர் மாதத்திற்குள்!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள அதன் புதிய பல்சர் பைக் தொடர்பான டீசர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. அதனை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் பைக்கின் டீசர் வெளியீடு!! அறிமுகம் இந்த அக்டோபர் மாதத்திற்குள்!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் பல்சர் வரிசை மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்த தயாராகி வருகிறது. இதன்படி அடுத்ததாக பஜாஜ் பல்சர் 250 மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் பைக்கின் டீசர் வெளியீடு!! அறிமுகம் இந்த அக்டோபர் மாதத்திற்குள்!

தற்போது வரையில் இது எந்த மாதிரியான பல்சர் பைக் என்பதை பஜாஜ் நிறுவனம் அறிவிக்கவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவிலும் புதிய பல்சர் பைக் என்று மட்டுமே பஜாஜ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதே தவிர்த்து எந்த மாதிரியான பல்சர் பைக் என்பதை குறிப்பிடவில்லை.

இந்த புதிய பல்சர் மோட்டார்சைக்கிள் சந்தையில் வருகிற அக்டோபர் 28ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதை இந்த டீசர் வீடியோவில் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த புதிய தலைமுறை பல்சர் பைக் நாக்டு & பகுதி-மறைக்கப்பட்டது என்கிற இரு விதமான வெர்சன்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். இந்த டீசர் வீடியோவில் காட்டப்பட்டிருப்பது பகுதி-மறைப்பு வெர்சனாகும்.

புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் பைக்கின் டீசர் வெளியீடு!! அறிமுகம் இந்த அக்டோபர் மாதத்திற்குள்!

இது பல்சர் 250எஃப் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. பல்சர் 220 மற்றும் 220எஃப் பைக்குகளை போல. சிறப்பம்சங்களாக இந்த பகுதி-ஸ்போர்ட்ஸ் பைக்கில் க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள், முன்பக்க ஹெட்லைட் கௌலில் பொருத்தப்பட்ட பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், திருத்தப்பட்ட எல்இடி டெயில்லேம்ப் மற்றும் இரட்டை-குழாய் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் பைக்கின் டீசர் வெளியீடு!! அறிமுகம் இந்த அக்டோபர் மாதத்திற்குள்!

இந்த டீசரில் காட்டப்பட்டுள்ள பல்சர் 250எஃப் பைக்கிலும் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் பொருத்தப்படலாம். அத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் இந்த புதிய 250சிசி பல்சர் பைக்கில் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்படலாம்.

புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் பைக்கின் டீசர் வெளியீடு!! அறிமுகம் இந்த அக்டோபர் மாதத்திற்குள்!

இந்த அக்டோபர் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் பைக்கில் வழங்கப்பட உள்ள 250சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் காற்று/ஆயில்-கூல்டு யூனிட்டை கொண்டிருக்கலாம். இந்த 250சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 24 பிஎச்பி மற்றும் 20 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் பைக்கின் டீசர் வெளியீடு!! அறிமுகம் இந்த அக்டோபர் மாதத்திற்குள்!

250சிசி என அளவில் சற்று பெரிய என்ஜினான இதனுடன் ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இவற்றுடன் வெவ்வேறான வால்வு செயல்பாடு அமைப்பையும் இந்த புதிய 250சிசி பைக்கில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வழங்கலாம்.

புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் பைக்கின் டீசர் வெளியீடு!! அறிமுகம் இந்த அக்டோபர் மாதத்திற்குள்!

சுருக்கமாக VVA என அழைக்கப்படும் இந்த வால்வு செயல்பாட்டு தொழிற்நுட்பமானது என்ஜின் அமைப்பில் பொருத்தப்படுகிறது. தற்சமயம் பிரபலமான யமஹா ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகளிலும் VVA வழங்கப்படுகிறது. ஆனால் பஜாஜ் நிறுவனம் வடிவமைப்பதால், இந்த தொழிற்நுட்பத்தை பல்துறையை சேர்ந்ததாகவும், செலவு குறைந்ததாகவும் எதிர்பார்க்கிறோம்.

புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் பைக்கின் டீசர் வெளியீடு!! அறிமுகம் இந்த அக்டோபர் மாதத்திற்குள்!

என்ஜினின் வேகத்தை பொறுத்து வெவ்வேறான நேரத்தில் வால்வுகளை செயல்பட அனுமதிக்கும் இந்த சிஸ்டத்தின் மூலம் குறைந்த ஆக்ஸலரேட்டர் முறுக்கலின்போதும், அதிகப்பட்ச முறுக்கலின்போதும் உறுமும் சத்தத்தை பெறலாம். பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரிக்கும் தொழிற்நுட்ப வசதி எலக்ட்ரிக் ஊக்கி மற்றும் முதன்மை திருகி மூலமாக செயல்படும் வகையில் எளிமையானதாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் பைக்கின் டீசர் வெளியீடு!! அறிமுகம் இந்த அக்டோபர் மாதத்திற்குள்!

இந்த தொழிற்நுட்பத்தின் செயல்பாடுகளை இன்னும் விரிவாக ஏற்கனவே நமது செய்திதளத்தில் கூறியிருந்தோம். விரைவில் விற்பனைக்கு வரவுள்ள பல்சர் 250 பைக் கடந்த சில மாதங்களாக தீவிரமாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வந்தது. அப்போது கிடைக்கப்பெற்ற ஸ்பை படங்களையும் நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் செய்திதளத்தில் பார்த்திருந்தோம்.

புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் பைக்கின் டீசர் வெளியீடு!! அறிமுகம் இந்த அக்டோபர் மாதத்திற்குள்!

இந்த ஸ்பை படங்களின் மூலம், விற்பனையில் உள்ள பல்சர் 220எஃப் பைக்கை போன்று புதிய 250எஃப் பைக்கும் சற்று குறைவான பேனல்களால் அலங்கரிக்கப்பட்டதாகவே இருக்கும் என்பதை அறிய முடிந்தது. இதனால் 220எஃப் பைக்கின் விற்பனை இந்திய சந்தையில் நிறுத்தி கொள்ளப்படுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் பல்சர் 220எஃப் மோட்டார்சைக்கிளிற்கு தற்சமயம் நல்லப்படியாகவே வரவேற்பு கிடைத்து வருகிறது.

புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் பைக்கின் டீசர் வெளியீடு!! அறிமுகம் இந்த அக்டோபர் மாதத்திற்குள்!

இனி வருங்காலத்தில் வெளிவரவுள்ள பஜாஜ் பல்சர் பைக்குகளில் காற்று-கூல்டு என்ஜின்கள் தான் புதிய விவிஏ தொழிற்நுட்பத்துடன் வழங்கப்பட உள்ளதாம். பல்சர் பைக்குகளின் என்ஜின் அமைப்பில் கொண்டுவரப்படும் இந்த புதிய ட்ரெண்ட் ஆனது புதிய பல்சர் 250 பைக்கில் இருந்து துவங்கவுள்ளது.

Most Read Articles

English summary
New-gen Bajaj Pulsar officially teased ahead of launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X