புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக் உற்பத்தி துவங்கியது... விரைவில் இந்தியா வருகிறது!

அதிக சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக்கின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் வர இருக்கும் இந்த பைக்கின் பல முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக் உற்பத்தி துவங்கியது... விரைவில் இந்தியா வருகிறது!

டுகாட்டி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் சூப்பர் பைக் மாடல்களில் ஒன்று மான்ஸ்ட்டர் பைக். கடுமையான சந்தைப் போட்டியை தரும் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள், பிஎம்டபிள்யூ எஃப்900ஆர், கவாஸாகி இசட்900 மற்றும் யமஹா எம்டி-09 ஆகிய பைக் மாடல்களுடன் நேரடி போட்டி போடுகிறது. இந்த சந்தைப் போட்டியையும் விஞ்சி, உலக அளவில் இதுவரை 3.50 லட்சம் டுகாட்டி மானஸ்ட்டர் பைக்குகள் விற்பனையாகி இருக்கின்றன.

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக் உற்பத்தி துவங்கியது... விரைவில் இந்தியா வருகிறது!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த பைக் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பைக்கின் உற்பத்தி துவங்கப்பட்டு இருப்பதாக டுகாட்டி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக் உற்பத்தி துவங்கியது... விரைவில் இந்தியா வருகிறது!

இதையடுத்து, இந்த பைக் இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, இந்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் இந்த பைக் பண்டிகை கால வரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக் உற்பத்தி துவங்கியது... விரைவில் இந்தியா வருகிறது!

டுகாட்டி ஹைப்பர்மோட்டார்டு 950, மல்டிஸ்ட்ரேடா 950 மற்றும் சூப்பர்ஸ்போர்ட் 950 ஆகிய பைக்குகளில் பயன்படுத்தப்படும் அதே 937சிசி எல்-ட்வின் டெஸ்டாஸ்ரேட்டா எஞ்சின்தான் புதிய மான்ஸ்ட்டர் பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக் உற்பத்தி துவங்கியது... விரைவில் இந்தியா வருகிறது!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 112 பிஎஸ் பவரையும், 93 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டுகாட்டி நிறுவனத்தின் குயிக் ஷிஃப்ட் வசதியுடன் இந்த பைக் வர இருக்கிறது.

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக் உற்பத்தி துவங்கியது... விரைவில் இந்தியா வருகிறது!

புதிய டுகாட்டி மாஸ்ட்டர் பைக் முந்தைய மாடலைவிட இலகு எடை கொண்டதாக மாறி இருக்கிறது. புதிய சப் பிரேம், சக்கரங்கள், ஸ்விங் ஆற்ம் மற்றும் பிரேம் ஆகியவை இலகு பாகங்களுடன் மாற்றம் கண்டுள்ளது. இநத் பைக் 2.6 கிலோ எடை குறைந்து 166 கிலோ ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக் உற்பத்தி துவங்கியது... விரைவில் இந்தியா வருகிறது!

மான்ஸ்ட்டர் பைக்குகளுக்குரிய பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் இந்த பைக் புதிய பொலிவு பெற்றுள்ளது. வட்ட வடிவிலான ஹெட்லைட், காளை முஷ்டியை நினைவூட்டும் வகையிலான பெட்ரோல் டேங்க் ஆகியவை தனித்துவமான தோற்றத்தை கொடுத்து இருக்கிறது. இந்த பைக்கின் இருக்கை உயரத்தை 775 மிமீ முதல் 820 மிமீ ஆக கூட்டி குறைக்க முடியும்.

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக் உற்பத்தி துவங்கியது... விரைவில் இந்தியா வருகிறது!

இந்த புதிய மாடலில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் டூரிங் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 4.3 அங்குல டிஎஃப்டி கலர் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. டுகாட்டியின் மல்டிமீடியோ சிஸ்டமும் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati has announced that the new Monster bike production begins and it will make its Indian arrival later this year.
Story first published: Saturday, March 6, 2021, 11:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X