வேற லெவல்... புதிய அவதாரத்தில் வருகிறது Royal Enfield Classic 350... அறிமுக தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதிய தலைமுறை Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வேற லெவல்... புதிய அவதாரத்தில் வருகிறது Royal Enfield Classic 350... அறிமுக தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மோட்டார்சைக்கிள்களில் புதிய தலைமுறை Royal Enfield Classic 350 மிகவும் முக்கியமானது. இந்த மோட்டார்சைக்கிள் இன்னும் ஒரு சில நாட்களில் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

வேற லெவல்... புதிய அவதாரத்தில் வருகிறது Royal Enfield Classic 350... அறிமுக தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதிய தலைமுறை Classic 350 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் தேதியை Royal Enfield நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி புதிய தலைமுறை Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிள் வரும் செப்டம்பர் 1ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

வேற லெவல்... புதிய அவதாரத்தில் வருகிறது Royal Enfield Classic 350... அறிமுக தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள காரணத்தால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், ஆவல் அதிகரித்துள்ளது. Royal Enfield நிறுவனம் புதிய தலைமுறை Classic 350 மோட்டார்சைக்கிளை தொடர்ச்சியாக இந்தியாவில் சாலை சோதனையில் ஈடுபடுத்தி வந்தது. அதன் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகியுள்ளன.

வேற லெவல்... புதிய அவதாரத்தில் வருகிறது Royal Enfield Classic 350... அறிமுக தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதன் மூலம் புதிய தலைமுறை Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிள் பற்றிய பல்வேறு தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. முன்னதாக புதிய தலைமுறை Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என யூகங்கள் வெளியாகி வந்தன.

வேற லெவல்... புதிய அவதாரத்தில் வருகிறது Royal Enfield Classic 350... அறிமுக தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது அதிகாரப்பூர்வ தேதியை Royal Enfield நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய தலைமுறை Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிள், பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் புதிய மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. Royal Enfield Meteor 350 மோட்டார்சைக்கிளின் J-platform இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வேற லெவல்... புதிய அவதாரத்தில் வருகிறது Royal Enfield Classic 350... அறிமுக தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அத்துடன் புதிய சேஸிஸ், மீட்டர் கன்சோல் மற்றும் ஸ்விங்ஆர்ம் என புதிய தலைமுறை Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிள் புதிய அவதாரம் எடுத்துள்ளது. அதே சமயம் Royal Enfield Meteor 350 மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டுள்ள 349 சிசி, சிங்கிள்-சிலிண்டர், DOHC இன்ஜின்தான், புதிய தலைமுறை Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேற லெவல்... புதிய அவதாரத்தில் வருகிறது Royal Enfield Classic 350... அறிமுக தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆனால் இன்ஜின் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. அதே சமயம் டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட இன்ஜின் மற்றும் ஃப்ரேம் தவிர, இன்னும் பல்வேறு வசதிகள் புதிய தலைமுறை Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிளில் வழங்கப்படவுள்ளன.

வேற லெவல்... புதிய அவதாரத்தில் வருகிறது Royal Enfield Classic 350... அறிமுக தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதில், Tripper Turn-by-Turn Navigation முக்கியமானது. இந்த வசதி முதல் முறையாக Royal Enfield Meteor 350 மோட்டார்சைக்கிளில்தான் வழங்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து தனது மற்ற மோட்டார்சைக்கிள்களிலும் இந்த வசதியை வழங்கும் முயற்சிகளில் Royal Enfield நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

வேற லெவல்... புதிய அவதாரத்தில் வருகிறது Royal Enfield Classic 350... அறிமுக தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதன்படி புதிய தலைமுறை Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிளிலும், Tripper Navigation வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட அப்டேட்கள் காரணமாக தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், புதிய தலைமுறை Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிளின் விலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

வேற லெவல்... புதிய அவதாரத்தில் வருகிறது Royal Enfield Classic 350... அறிமுக தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆனால் அதிகாரப்பூர்வ விலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வரும் செப்டம்பர் 1ம் தேதிதான் வெளியிடப்படவுள்ளது. புதிய தலைமுறை Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிள், இந்திய சந்தையில், Jawa, Honda H'ness CB350 மற்றும் Benelli Imperiale 400 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு விற்பனையில் தொடர்ந்து சவால் அளிக்கும்.

வேற லெவல்... புதிய அவதாரத்தில் வருகிறது Royal Enfield Classic 350... அறிமுக தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதில், Honda H'ness CB350 இந்திய சந்தையில் தற்போது வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள், Royal Enfield Classic 350 அளவிற்கு விற்பனையாவதில்லை என்றாலும், Royal Enfield Classic 350 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அதனை Classic 350 மோட்டார்சைக்கிளின் புதிய தலைமுறை மாடல் மூலம் சமாளிப்பதற்கு Royal Enfield திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
New gen royal enfield classic 350 india launch date announced
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X