மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் ஜாவா!! பைக்குகளில் அலாய் சக்கரங்கள், முன்பக்க கண்ணாடி...

ஜாவா 42 பைக் ஒன்று அலாய் சக்கரங்களுடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் ஜாவா!! பைக்குகளில் அலாய் சக்கரங்கள், முன்பக்க கண்ணாடி...

ஆட்டோகார் இந்தியா செய்திதளம் மூலம் தற்போது நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களில் காட்சித்தருவது அப்டேட் செய்யப்பட்ட ஜாவா 42 பைக்காகும். தற்போதைய ஜாவா 42 பைக்குடன் ஒப்பிடுகையில் இந்த அப்டேட் வெர்சனில் கவனிக்கத்தக்க வகையிலான வேறுப்பாடுகளை நம்மால் அறிய முடிகிறது.

மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் ஜாவா!! பைக்குகளில் அலாய் சக்கரங்கள், முன்பக்க கண்ணாடி...

இதில் மிக முக்கியமான மாற்றம் எதுவென்று பார்த்தால், அலாய் சக்கரங்கள். தற்போதைய ஜாவா 42 பைக்கில் வயர்-ஸ்போக்டு சக்கரங்களே வழங்கப்படுகின்றன. இதனால் புதிய ஜாவா 42-வில் ட்யுப்லெஸ் டயர்களையும் எதிர்பார்க்கலாம்.

மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் ஜாவா!! பைக்குகளில் அலாய் சக்கரங்கள், முன்பக்க கண்ணாடி...

இவற்றுடன் பைக்கின் முன் மற்றும் பின்பக்க சஸ்பென்ஷன் அமைப்புகள் மற்றும் ஹெட்லைட்டை சுற்றிலும் வழங்கப்படும் ட்ரிம் மற்றும் எக்ஸாஸ்ட் குழாய் முழுவதும் தற்போதைய இளம் தலைமுறையினர் விருப்பத்தின்படி கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் ஜாவா!! பைக்குகளில் அலாய் சக்கரங்கள், முன்பக்க கண்ணாடி...

அதேபோல் இருக்கை தையல்களும் வித்தியாசப்படுகின்றன. இந்த குறிப்பிட்ட சோதனை மாதிரி இருக்கைக்கு பின்பக்கத்தில் அடியில் க்ராப் ரெயில் மற்றும் முன்பக்கத்தில் கண்ணாடி உள்ளிட்டவற்றை வழக்கத்திற்கு மாறாக கொண்டுள்ளது.

மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் ஜாவா!! பைக்குகளில் அலாய் சக்கரங்கள், முன்பக்க கண்ணாடி...

இவை எக்ஸ்ஷோரூம் விலைக்கே கொடுக்கப்படுமா அல்லது கூடுதல் ஆக்ஸஸரீகளாக வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. கூடுதல் ஆக்ஸஸரீகளாக என்றால் அதற்காக தனியாக பணம் செலுத்த வேண்டும். இந்த ஸ்பை படங்களில் பைக்கை சற்று உற்றுப்பார்த்தால், பின்பக்க சஸ்பென்ஷன் பின்பக்க மட் கார்டின் மீது பொருத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் ஜாவா!! பைக்குகளில் அலாய் சக்கரங்கள், முன்பக்க கண்ணாடி...

என்ஜின் அமைப்பில் எதாவது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பதை தெரியவில்லை. நமக்கு தெரிந்தவரை அதே பிஎஸ்6 293சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின்தான் அப்கிரேட் செய்யப்பட்ட ஜாவா 42 பைக்கிலும் பொருத்தப்பட வாய்ப்புள்ளது.

மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் ஜாவா!! பைக்குகளில் அலாய் சக்கரங்கள், முன்பக்க கண்ணாடி...

அதிகப்பட்சமாக 26.5 எச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. இந்த சோதனை மாதிரி கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் உள்ளது. இதனால் புதிய ஜாவா 42 பைக்கின் அறிமுகம் மிக விரைவில் இருக்கும்.

மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் ஜாவா!! பைக்குகளில் அலாய் சக்கரங்கள், முன்பக்க கண்ணாடி...

தற்சமயம் ஜாவா 42 சிங்கிள்-சேனல் (ரூ.1.65 லட்சம்) மற்றும் ட்யுல்-சேனல் (ரூ.1.74 லட்சம்) என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்றன. கருப்பு நிறத்தில் இந்த சோதனை மாதிரியில் காட்சி தருகின்ற அலாய் சக்கரங்கள் இந்த இரு வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுமா அல்லது ஏதாவது ஒன்றிற்கு மட்டும் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, January 18, 2021, 14:37 [IST]
English summary
Jawa Forty Two with alloy wheels, blacked-out theme seen testing
மேலும்... #ஜாவா #jawa motorcycles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+