புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம்!
பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முக்கிய அம்சங்கள், விலை விபரத்தை தொடர்ந்து இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்திய சூப்பர் பைக் மார்க்கெட்டில் மிக முக்கிய தேர்வாக கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் பைக் இருந்து வருகிறது. வசீகரமான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த பைக் மேம்படுத்தப்பட்டு இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக் லைம் க்ரீன் மற்றும் ஃப்ளாட் எபோனி டைப்-2 என இரண்டு விதமான வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது.

புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் பைக்கில் அதிக ஏரோடைனமிக்ஸை வழங்கும் வகையிலான பாடி வழங்கப்பட்டுள்ளது. இதனால், வசீகரத்தை விட செயல்திறனில் அதிக கவனம் செலுத்தி வடிவமைத்துள்ளனர். மேலும், எல்இடி ஹெட்லைட்டுகள், டிஎஃப்டி வண்ணத் திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

இந்த பைக்கில் மிக முக்கிய மாற்றமாக இதன் சேஸீ மற்றும் எஞ்சினில் பல மாற்றங்களை செய்துள்ளனர். இதன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக இருப்பதுடன், அதிக செயல்திறனை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதன் 4 சிலிண்டர் 998சிசி லிக்யூடு எஞ்சின் அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ரேம் ஏர் இன்டேக் பயன்படுத்தினால், 210 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், வேர்ல்டு சூப்பர்பைக் சாம்பியன்ஷிஃப் போட்டிக்கான கவாஸாகியின் ரேஸ் பைக்கிலிருந்து பல முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. புகைப்போக்கி அமைப்பும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய உதிரிபாகங்களுடன் மாசு உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது.

புதிய கவாஸாகி இசட்எக்ஸ்10ஆர் பைக்கில் கவாஸாகியின் கார்னரிங் மேனேஜ்மென்ட் தொழில்நுட்பம், பாஷ் நிறுவனத்தின் இனர்ஷியல் மெசர்மென்ட் யூனிட், கவாஸாகி டிராக்ஷன் கன்ட்ரோல், கவாஸாகி லான்ச் கன்ட்ரோல், கவாஸாகி இன்டெலிஜென்ட் ஆன்ட்டி லாக் பிரேக் சிஸ்டம், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல், குயிக் ஷிஃப்ட்டர், ஓலின்ஸ் எலெக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளன.

சாலை நிலைகளுக்கு தக்கவாறு பயன்படுத்துவதற்காக 5 விதமான ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. அல்ட்ரா குயிக் கியர் ஷிஃப்ட் தொழில்நுட்ப வசதியும் இதன் மிக முக்கியமானதாக இருக்கிறது. ரேஸ் பைக்குகளில் இருக்கும் அதே அட்வான்ஸ்டு ஷோவா பேலன்ஸ் ஃப்ரீ முன்புற ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோன்று, அட்ஜெஸ்ட் வசதியுடன் ஷோவா சஸ்பென்ஷன் அமைப்பு பின்புறத்தில் உள்ளது.

இந்த பைக்கில் பிரெம்போ எம்50 பிரேக் காலிபர்கள் கொண்ட 330 மிமீ பிரெம்போ செமி ஃப்ளோட்டிங் வகை டிஸ்க்குகள் கொண்ட முன்புற பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் சிங்கிள் காலிபருடன் கூடிய 220 மிமி டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் சூப்பர் பைக் பாதுகாப்பிலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ரூ.14.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








