இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகும் புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின்!! இந்திய வெப்சைட்டிற்கு வந்தது...!

புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கின் பெயர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகும் புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின்!! இந்திய வெப்சைட்டிற்கு வந்தது...!

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் அதன் புதிய ஸ்பீடு ட்வின் பைக்கை உலகளவில் வெளியிட்டு இருந்தது. அதனை தொடரந்து தற்போது இந்த மோட்டார்சைக்கிளின் பெயர் ட்ரையம்ப்பின் இந்திய இணையத்தள பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகும் புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின்!! இந்திய வெப்சைட்டிற்கு வந்தது...!

இதில் இருந்து இந்த ட்ரையம்ப் பைக்கின் அறிமுகம் மிக விரைவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எக்ஸ்ஷோரூம் விலையை தவிர்த்து பைக்கை பற்றிய விபரங்கள் அனைத்தும் வெப்சைட்டில் பதிவிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகும் புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின்!! இந்திய வெப்சைட்டிற்கு வந்தது...!

ஒற்றை வேரியண்ட்டில், ஜெட் கருப்பு சிவப்பு ஹூப்பர் மற்றும் மேட் ஸ்ட்ரோம் க்ரே என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த ட்ரையம்ப் மோட்டார்சைக்கிளின் விலை தேர்ந்தெடுக்கும் பெயிண்ட்டை பொறுத்து நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகும் புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின்!! இந்திய வெப்சைட்டிற்கு வந்தது...!

புதிய ஸ்பீடு ட்வின் பைக்கில் 1,200சிசி, இணையான-இரட்டை, லிக்யுடு-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-இல் 98.6 பிஎச்பி மற்றும் 4,250 ஆர்பிஎம்-இல் 112 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகும் புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின்!! இந்திய வெப்சைட்டிற்கு வந்தது...!

இந்த ஸ்பீடு ட்வின் கிளாசிக் மோட்டார்சைக்கிள் சமீபத்திய அப்டேட்டாக கூடுதல் ப்ரீமியம் தரத்திலான 43மிமீ மார்சோசி தலைக்கீழான ஃபோர்க்குகளையும், ப்ரெம்போ எம்50 காலிபர்களையும் சஸ்பென்ஷன் அமைப்புகளாக பெற்றுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகும் புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின்!! இந்திய வெப்சைட்டிற்கு வந்தது...!

மேலும் கிராஃபிக்ஸையும் புதியதாக ஏற்றுள்ளது. இவற்றுடன் 12-ஸ்போக் அலாய் சக்கரங்கள் மற்றும் ஏபிஎஸ், ஸ்விட்ச் செய்யக்கூடிய ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்கிய எலக்ட்ரானிக்ஸ் தொகுப்பு மற்றும் எல்இடி டிஆர்எல்-களையும் இந்த ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகும் புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின்!! இந்திய வெப்சைட்டிற்கு வந்தது...!

பயண அனுபவத்தை மேம்படுத்த சாலை, மழை மற்றும் ஆஃப்-ரோடு என வெவ்வேறு விதமான ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கிற்கான இந்திய எக்ஸ்ஷோரூம் விலை நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.

இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகும் புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின்!! இந்திய வெப்சைட்டிற்கு வந்தது...!

இதனால் எப்படியிருந்தாலும் இதன் விலை அறிவிக்கப்படுவதற்கு சில காலம் ஆகலாம். இதன் முந்தைய பிஎஸ்4 வெர்சன் ரூ.9.46 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
New Triumph Speed Twin listed on Indian website.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X