2022 ஹோண்டா சிபி150எக்ஸ் பைக்கின் முதல் டிவிசி வீடியோ வெளியீடு!! இந்தியாவில் விற்பனையில் இல்லைங்க!

2022 ஹோண்டா சிபி150எக்ஸ் மோட்டார்சைக்கிளின் முதல் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி கமர்ஷியல் (TVC) வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 ஹோண்டா சிபி150எக்ஸ் பைக்கின் முதல் டிவிசி வீடியோ வெளியீடு!! இந்தியாவில் விற்பனையில் இல்லைங்க!

ஹோண்டாவின் பிரபலமான சிபிஎக்ஸ் மோட்டார்சைக்கிள்கள் வரிசையில் மிகவும் சிறிய அளவிலான என்ஜினை கொண்ட மாடலாக சிபி150எக்ஸ் இந்தோனிஷியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. எந்த அளவிற்கு என்றால், நமது இந்தியாவில் விற்பனையில் உள்ள சிபி200எக்ஸ் பைக்கை காட்டிலும் இதன் என்ஜின் குறைந்த சிசி கொண்டதாகும்.

2022 ஹோண்டா சிபி150எக்ஸ் பைக்கின் முதல் டிவிசி வீடியோ வெளியீடு!! இந்தியாவில் விற்பனையில் இல்லைங்க!

இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை ஏற்கனவே நமது செய்திதளத்தில் பார்த்துள்ளோம். 2021 கைகிண்டோ இந்தோனிஷியா சர்வதேச மோட்டார் கண்காட்சியில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட சிபி150எக்ஸ் பைக்கின் புதிய டிவிசி வீடியோ ஹோண்டா இந்தோனிஷியா யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே காணலாம்.

இதில் இந்த ஹோண்டா அட்வென்ச்சர் பைக்கின் ஹைலைட்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஹோண்டாவின் ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கான சிபி150எக்ஸ் மாடலும், இந்திய சிபி200எக்ஸ் பைக்கை போல் தொலைத்தூர பயணங்களுக்கான, அட்வென்ச்சர் பைக்குகளின் தோற்றத்தை கொண்ட மோட்டார்சைக்கிளாகும். அட்வென்ச்சர் பயணங்களுக்கு தேவையான சில தொழிற்நுட்பங்கள் சிபி150எக்ஸ்-இல் இல்லை என்றாலும், இது முழு-அட்வென்ச்சர் பைக்காகவே ஹோண்டாவால் விளம்பரப்படுத்தப் படுகிறது.

2022 ஹோண்டா சிபி150எக்ஸ் பைக்கின் முதல் டிவிசி வீடியோ வெளியீடு!! இந்தியாவில் விற்பனையில் இல்லைங்க!

பக்கா அட்வென்ச்சர் பைக்கிற்கே உண்டான முன்பக்கத்தை பெறும் இந்த ஹோண்டா பைக்கில் நீண்ட கவசங்கள் உடன் செதுக்கப்பட்டது போன்றதான தோற்றத்தில் பெட்ரோல் டேங்க் வழங்கப்படுகிறது. இந்த கவசங்கள் அழகிற்காக மட்டுமில்லாமல், மோதல்களின் போது பைக்கின் பெட்ரோல் டேங்கையும் பாதுகாக்கக்கூடியவை என ஹோண்டா தெரிவிக்கிறது.

2022 ஹோண்டா சிபி150எக்ஸ் பைக்கின் முதல் டிவிசி வீடியோ வெளியீடு!! இந்தியாவில் விற்பனையில் இல்லைங்க!

அத்துடன் பைக்கை பருமனான தோற்றத்தில் காட்டுவதற்காகவும், என்ஜின் அமைப்பு தரையுடனான மோதலை தவிர்க்கும் விதத்தில் பாதுக்காக்கும் தட்டு அடிப்பகுதியில் வழங்கப்படுகிறது. மேலும், மேம்பட்ட அட்வென்ச்சர் பயணங்களுக்காக பொருட்களை வைத்தும் செல்லும் பெட்டகம் (கூடுதல் ஆக்ஸஸரீயாக), நேரான ஒற்றை-துண்டு ஹேண்டில்பார் மற்றும் மத்தியில் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி உள்ளிட்டவற்றை சிபி150எக்ஸ் ஏற்கிறது.

2022 ஹோண்டா சிபி150எக்ஸ் பைக்கின் முதல் டிவிசி வீடியோ வெளியீடு!! இந்தியாவில் விற்பனையில் இல்லைங்க!

தரையில் இருந்து 805மிமீ உயரத்தில் வழங்கப்படுகின்ற ஓட்டுனர் இருக்கையும் இந்த பைக்கின் எந்தவொரு சாலையிலும் இயங்கும் பண்பை மேம்படுத்துகிறது. இந்த ஹோண்டா அட்வென்ச்சர் பைக்கின் மற்ற ஸ்டைலிங் ஹைலைட்களாக, நீண்ட எதிர்காற்று தடுப்பு கண்ணாடி, மேல்நோக்கி தூக்கப்பட்ட பின் முனைப்பகுதி, ஒற்றை-துண்டாக இருக்கை அமைப்பு மற்றும் மேலாக வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

2022 ஹோண்டா சிபி150எக்ஸ் பைக்கின் முதல் டிவிசி வீடியோ வெளியீடு!! இந்தியாவில் விற்பனையில் இல்லைங்க!

இவற்றுடன் தங்க நிறத்தில் வழங்கப்படுகின்ற முன்பக்க ஃபோர்க்ஸ் சஸ்பென்ஷன் அமைப்பும் பைக்கின் ப்ரீமியம் தோற்றத்தில் காட்டுகிறது. இந்த டீசர் வீடியோவில் பைக்கின் 181மிமீ க்ரவுண்ட் க்ளியரென்ஸ் முக்கியமான ஹைலைட்டாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏனெனில் ஆஃப்-ரோடுகளுக்கும் எடுத்து செல்லலாம் என விளம்பரப்படுத்தும் போது அந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் அளவும் முக்கியமாக கவனிக்க வேண்டியவை ஆகும்.

2022 ஹோண்டா சிபி150எக்ஸ் பைக்கின் முதல் டிவிசி வீடியோ வெளியீடு!! இந்தியாவில் விற்பனையில் இல்லைங்க!

சிபி150எக்ஸ் பைக்கில் 149சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9000 ஆர்பிஎம்-இல் 16.5 பிஎச்பி மற்றும் 7000 ஆர்பிஎம்-இல் 13.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. டைமண்ட்-வகை சட்டகத்தில் உருவாக்கப்படுகின்ற இந்த 150சிசி அட்வென்ச்சர் பைக்கில் சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் 150மிமீ டிராவல் உடன் 37மிமீ ஷோவா யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்படுகின்றன.

2022 ஹோண்டா சிபி150எக்ஸ் பைக்கின் முதல் டிவிசி வீடியோ வெளியீடு!! இந்தியாவில் விற்பனையில் இல்லைங்க!

பிரேக்கிங் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன. ஆனால் ஏபிஎஸ் குறித்த எந்த விபரமும் சிபி150எக்ஸ் பைக்கை பற்றிய விபரங்களில் குறிப்பிடப்படவில்லை. இந்த பைக்கின் 17-இன்ச் பல-ஸ்போக் அலாய் சக்கரங்களில் சாதாரண சாலை சார்ந்த டயர்களே பொருத்தப்படுகின்றன. முழு எல்இடி விளக்குகளை பெறும் இந்த ஹோண்டா பைக்கில் முழு-டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்படுகிறது.

2022 ஹோண்டா சிபி150எக்ஸ் பைக்கின் முதல் டிவிசி வீடியோ வெளியீடு!! இந்தியாவில் விற்பனையில் இல்லைங்க!

மற்றப்படி இணைப்பு வசதிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இந்தோனிஷியாவில் ஹோண்டா சிபி150எக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை ஆர்பி 32 மில்லியன் என உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.67 லட்சமாகும். இது இந்தியாவில் விற்பனையில் உள்ள சிபி200எக்ஸ் பைக்கை காட்டிலும் ரூ.21,000 அதிகமாகும். இந்திய சந்தையில் சிபி150எக்ஸ் பைக் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவே.

2022 ஹோண்டா சிபி150எக்ஸ் பைக்கின் முதல் டிவிசி வீடியோ வெளியீடு!! இந்தியாவில் விற்பனையில் இல்லைங்க!

ஏனெனில் இந்தியாவில் சிபி200எக்ஸ் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. ஜப்பானிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா சமீபத்தில் புனேவில் நடந்து முடிந்த 2021 இந்தியா பைக் வாரம் கண்காட்சியில் அதன் புதிய மோட்டார்சைக்கிள்களாக பிஎஸ்6 சிபி300ஆர் மற்றும் சிபி350 முதலாம் ஆண்டுநிறைவு எடிசனை அறிமுகப்படுத்தி இருந்தது.

Most Read Articles
English summary
New tvc for cb150x has been released on social media by honda in indonesia
Story first published: Saturday, December 11, 2021, 23:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X