ஆக்டிவாவை காலி செய்ய அதிரடி... புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்... என்ன விலையில் வரப்போகிறது தெரியுமா?

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆக்டிவாவை காலி செய்ய அதிரடி... புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்... என்ன விலையில் வரப்போகிறது தெரியுமா?

இந்திய சந்தையில் தனது புதிய 125 சிசி ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டிவிஎஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய 125 சிசி ஸ்கூட்டர் அக்டோபர் 7 (நாளை) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஸ்கூட்டரின் பெயரை டிவிஎஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

ஆக்டிவாவை காலி செய்ய அதிரடி... புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்... என்ன விலையில் வரப்போகிறது தெரியுமா?

எனினும் இது டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டராக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஸ்கூட்டரின் டீசரை டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த டீசர் புகைப்படத்தில் எல்இடி பகல் நேர விளக்குகளை காண முடிந்தது. இது ஸ்கூட்டரின் முன் பக்க அப்ரான் மீது பொருத்தப்படலாம்.

ஆக்டிவாவை காலி செய்ய அதிரடி... புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்... என்ன விலையில் வரப்போகிறது தெரியுமா?

அதே நேரத்தில் இந்த புதிய ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்களையும் டிவிஎஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனினும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள அதே இன்ஜின், புதிய ஸ்கூட்டரிலும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

ஆக்டிவாவை காலி செய்ய அதிரடி... புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்... என்ன விலையில் வரப்போகிறது தெரியுமா?

இந்தியாவில் தற்போது 125 சிசி டூவீலர் செக்மெண்ட் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே புதிய 125 சிசி ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதன் மூலம் இந்த செக்மெண்ட்டில் தன்னை வலுவாக நிலை நிறுத்தி கொள்வதற்கு டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் ரைடர் 125 என்ற புதிய பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது 125 சிசி பைக் ஆகும்.

ஆக்டிவாவை காலி செய்ய அதிரடி... புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்... என்ன விலையில் வரப்போகிறது தெரியுமா?

இந்த புத்தம் புதிய பைக் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 125 சிசி செக்மெண்ட்டில் சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதை இந்த தொடர்ச்சியான அறிமுகங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பது ஜூபிடர் 125 ஸ்கூட்டர் என்றுதான் ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் அடித்து கூறுகின்றன.

ஆக்டிவாவை காலி செய்ய அதிரடி... புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்... என்ன விலையில் வரப்போகிறது தெரியுமா?

இது டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டராக இருக்கும்பட்சத்தில், போட்டியாளர்களை வலுவாக எதிர்கொள்ளும் வகையில், டிவிஎஸ் நிறுவனம் பல்வேறு வசதிகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்டிவாவை காலி செய்ய அதிரடி... புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்... என்ன விலையில் வரப்போகிறது தெரியுமா?

ஆனால் இந்த புதிய ஸ்கூட்டரை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை டிவிஎஸ் நிறுவனம் மறைத்தே வைத்துள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன், ஹோண்டா ஆக்டிவா 125 மற்றும் சுஸுகி ஆக்ஸெஸ் 125 உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் உடன், புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் நேரடியாக போட்டியிடும்.

ஆக்டிவாவை காலி செய்ய அதிரடி... புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்... என்ன விலையில் வரப்போகிறது தெரியுமா?

இந்திய சந்தையில் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் விலை 75 ஆயிரம் ரூபாய் முதல் 81 ஆயிரம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதிகாரப்பூர்வ விலையை தெரிந்து கொள்வதற்கு நாம் நாளை வரை காத்திருக்க வேண்டும்.

ஆக்டிவாவை காலி செய்ய அதிரடி... புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்... என்ன விலையில் வரப்போகிறது தெரியுமா?

இந்தியாவில் விரைவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. பண்டிகை காலம் என்றால், புதிய வாகனங்களை வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்குவது சகஜம்தான். இதனை குறி வைத்து தொடர்ச்சியாக 125 சிசி செக்மெண்ட்டில் புதிய இரு சக்கர வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.

ஆக்டிவாவை காலி செய்ய அதிரடி... புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்... என்ன விலையில் வரப்போகிறது தெரியுமா?

எனவே வரும் மாதங்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் இரு சக்கர வாகன விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டிவிஎஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய தயாரிப்புகளான ரைடர் 125 சிசி பைக் மற்றும் ஜூபிடர் 125 சிசி ஸ்கூட்டர் ஆகிய இரண்டும் கணிசமான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என தெரிகிறது.

ஆக்டிவாவை காலி செய்ய அதிரடி... புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர் நாளை அறிமுகம்... என்ன விலையில் வரப்போகிறது தெரியுமா?

இது இந்த இரண்டு தயாரிப்புகளின் போட்டியாளர்கள் மத்தியில் இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் விலை சவாலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே பாணியிலான விலை நிர்ணயத்தை ஜூபிடர் 125 ஸ்கூட்டருக்கும் டிவிஎஸ் நிறுவனம் நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
New tvs 125cc scooter launch in india tomorrow
Story first published: Wednesday, October 6, 2021, 18:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X