புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!
டிவிஎஸ் ஸ்டார்ட் சிட்டி ப்ளஸ் பைக்கின் புதிய மாடல் வருகையொட்டி, டீசர் வெளியிட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலில் ஒரு முக்கிய அம்சம் இடம்பெற்றுள்ளதும் டீசர் மூலமாக தெரியவந்துள்ளது.

பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் இருந்து வருகிறது. டிசைன், எஞ்சின், மைலேஜ், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை அளித்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்டார் சிட்டி பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.
புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் வருகையை வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கும் விதமாக, டீசரை டிவிஎஸ் மோட்டார் வெளியிட்டு இருக்கிறது. இதில், உங்களை ஆச்சர்யப்படுத்தப்போகிறோம். காத்திருங்கள் என்ற வாசகத்துடன் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் முன்புற பகுதி இடம்பெற்றிருக்கிறது.
இதில் கவனிக்கத்தக்க விஷயமாக, புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில் எல்இடி ஹெட்லைட் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் கருப்பு வண்ணத் தேர்வில் வரலாம் என்றும் தெரிகிறது. இது சிறப்பு பதிப்பு மாடலாக இடம்பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
தற்போதைய ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில் 109 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.08 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சினுடன் புதிய மாடல் வரும்.
இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் கொண்ட சஸ்பென்ஷனும் இடம்பெற்றிருக்கும். டிரம் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய மாடல் தொடர்பான விபரங்கள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதமாக இந்த புதிய மாடலை டிவிஎஸ் களமிறக்க உள்ளது.


Click it and Unblock the Notifications








