இந்திய நிறுவனம் உருவாக்கிய இ-சைக்கிள்... அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம்... என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா
இந்திய நிறுவனமான நெக்ஸூ அதன் புதுமுக இ-சைக்கிள் ஒன்றை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நெக்ஸூ மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் அதன் புதுமுக மின்சார வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ரோம்பஸ் ப்ளஸ், ஏ 3 ஸ்பீடு மின்சார வாகனங்களையே நிறுவனம் களமிறக்கியிருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் சைக்கிள் ஆகும். இந்த வாகனத்தை முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே வைத்து தயாரித்திருக்கின்றது நெக்ஸூ.

தினசரி பயன்பாட்டாளர்களைக் கவனத்தில் கொண்டே இந்த வாகனத்தை நிறுவனம் களமிறக்கியிருக்கின்றது. இதனை வர்த்தக ரீதியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நெக்ஸூ அறிவித்திருக்கின்றது. ஆகையால், இதனை எளிதில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

அந்தவகையில், டீலர்கள் வாயிலாக மட்டுமின்றி அமேசான் மற்றும் பேடிஎம் போன்ற ஆன்லைன் வர்த்தக ஆப்பின் வாயிலாகவும் விற்பனைக்குக் கிடைக்கும் வகையில் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கின்றது. எனவே, எந்த வித தடையுமின்றி இவ்வாகனத்தைப் பெற முடியும் என தெரிய வருகின்றது.

இந்த இ-சைக்கிளில் 36V, 250 வாட்ஸ் திறன் கொண்ட ஹப் பிஎல்டிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டாருக்கான மின்சாரத்தை 36வேல்ட் திறன் கொண்ட 5.2ஏஎச் லித்தியன் அயன் பேட்டரி வழங்கும். இந்த பேட்டரியை வெளியில் தெரியும்படி இல்லாமல் சைக்கிளின் ஃப்ரேமிற்குள்ளேயே இருக்கும்படி நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.

அவ்வாறு சார்ஜ் செய்தால் முழுமையாக 25 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேசமயம், ஈகோ பெடெலெக் மோடில் வைத்து இயக்கினால் சுமார் 35கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜ் திறனுடன் 18 மாதங்கள் வாரண்டியை மோட்டார் மற்றும் பேட்டரிகளுக்கு வழங்க திட்ட நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

நெக்ஸூ புனேவின் சக்கன் பகுதியில் தனது உற்பத்தி ஆலையைச் செயல்படுத்து வருகின்றது. இங்கிருந்தே வாகனங்களை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வாகனம் சிவப்பு, நீலம், கருப்பு மற்றும் வெள்ளி ஆகிய நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த மின்சார மிதிவண்டியின் விலை மற்றும் பிற வசதிகள் பற்றிய தகவலை இதுவரை நிறுவனம் அறிவிக்கவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்களை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








