இளைஞரையும், விலையுயர்ந்த பைக்கையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டாரு... வீடியோ!

விலையுயர்ந்த பைக்கையும், அதன் உரிமையாளரையும் காவல்துறையினர் கொத்தாக தூக்கியிருக்கின்றனர். இதற்கு காரணம் இளைஞர் வெளியிட்ட வீடியோதான் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு தகவலையும் கீழே காணலாம்.

இளைஞரையும், விலையுயர்ந்த பைக்கையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டாரு... வீடியோ!

அண்மைக் காலங்களாக இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. விபத்துகளுக்கு வித்திடும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக விதிமீறல்கள் இருக்கின்றன. எனவேதான் இதனை முற்றிலும் ஒழித்துக்கட்டும் விதமாக மிகக் கடுமையான நடவடிக்கைகளை காவல்துறையினர் நாடு முழுவதிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞரையும், விலையுயர்ந்த பைக்கையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டாரு... வீடியோ!

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு இளைஞர் ஒருவர்மீது போலீஸார் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

இளைஞரையும், விலையுயர்ந்த பைக்கையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டாரு... வீடியோ!

தலைநகர் டெல்லியில் உள்ள கிரிஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பேந்நதிர சிங். இவர் தற்போது நொய்டாவில் வசதித்து வருகின்றார். இவரே தனது இருசக்கர வாகனத்தை பொதுவெளியில் வாகன ஸ்டண்ட் ஈடுபட்டவர் ஆவார். வாகனம் மீதும், வாகனங்களை இயக்குவதிலும் அதிகம் ஆர்வம் கொண்டவரே புஷ்பேந்திர சிங். இதுமட்டுமின்றி, வாகனம் சார்ந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தும் திறன் கொண்டவராகவும் இவர் இருக்கின்றார்.

இளைஞரையும், விலையுயர்ந்த பைக்கையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டாரு... வீடியோ!

அந்தவகையில், நொய்டாவின் முக்கியமான சாலைகளில் ஒன்றான செக்டார் 62 சாலையில் இவர் வீலிங் செய்து ஸ்டண்ட் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதனடிப்படையிலேயே காவல்துறையினர் புஷ்பேந்திர சிங்கை கைது செய்திருக்கின்றனர்.

இளைஞரையும், விலையுயர்ந்த பைக்கையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டாரு... வீடியோ!

பொதுவாக, வாகன ஸ்டண்டில் ஈடுபடுவதே குற்றம் என இந்திய போக்குவரத்து சட்டம் கூறுகின்றது. குறிப்பாக, பொது சாலையில் இது அறவே கூடாது என்பது முக்கிய விதியாகும். இவ்விரு விதிகளையும்தான் புஷ்பேந்திர சிங் உடைத்தெறிந்திருக்கின்றார். இதற்கான சன்மானமாக தற்போது வழக்கு பதிவு மற்றும் வாகன பறிமுதலை அவர் சந்தித்திருக்கின்றார்.

புஷ்பேந்திர சிங் பயன்படுத்தியது கேடிஎம் நிறுவனத்தின் விலையுயர்ந்த ட்யூக் பைக் என கூறப்படுகின்றது. ஸ்டண்டில் ஈடுபட்டதன் காரணத்தினால் இப்பைக்கையும் நொய்டா போலீஸார் தற்போது பறிமுதல் செய்திருக்கின்றனர். புஷ்பேந்திர சிங் போலீஸாரிடத்தில் சிக்குவதற்கு முக்கிய காரணம் அவர் வெளியிட்ட வீடியோதான்.

இளைஞரையும், விலையுயர்ந்த பைக்கையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டாரு... வீடியோ!

ஆமாங்க, தனது ஸ்டண்ட்குறித்த காட்சிகளை புஷ்பேந்திர சிங், அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதே போலீஸாரிடத்தில் அவர் சிக்க காரணமாக அமைந்துள்ளது. இந்த வீடியோ அவரது நண்பர்கள் மற்றும் பிற நெட்டிசன்கள் வாயிலாக அதிகம் பகிரப்பட்டுள்ளது. இந்தநிலையில், மாநில காவல்துறையினர்களின் கண்களில் அடிப்பட்டுள்ளது.

இளைஞரையும், விலையுயர்ந்த பைக்கையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டாரு... வீடியோ!

இதனைத் தொடர்ந்தே, பிற இளைஞர்கள் இதுமாதிரியான சாகச சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக, வைரலாகிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு இளைஞர்மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இளைஞரை போலீஸார் கைது செய்திருப்பதாக மட்டுமே தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.

இளைஞரையும், விலையுயர்ந்த பைக்கையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டாரு... வீடியோ!

கவனிக்க வேண்டயது.

பொதுசாலையில் இதுமாதிரியான ஸ்டண்டுகளில் ஈடுபடும்போதே போலீஸார் வாகன ஓட்டிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். அதேசமயம், அங்கீகரிக்கப்பட்ட ரேஸ் தளங்கள் மற்றும் பிற தனியார் பகுதிகளில் இதுமாதிரியான ஸ்டண்டுகளில் ஈடுபட தடையில்லை என்பது நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால், பொதுவெளியில் நமக்கும், பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்டண்ட் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Noida Police Arrested Youngman For Bike Stunting On Public Roads. Read In Tamil.
Story first published: Monday, April 12, 2021, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X