1 முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும்... விலை மிகவும் குறைவு... இப்படி ஒரு ஸ்கூட்டரைதான் தேடிகிட்டு இருந்தோம்!

மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1 முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும்... விலை மிகவும் குறைவு... இப்படி ஒரு ஸ்கூட்டரைதான் தேடிகிட்டு இருந்தோம்!

ஒகாயா குழுமம் (Okaya) தற்போது புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஃப்ரீடம் (Freedum) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இது ஒகாயா நிறுவனம் அறிமுகம் செய்யும் 3வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

1 முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும்... விலை மிகவும் குறைவு... இப்படி ஒரு ஸ்கூட்டரைதான் தேடிகிட்டு இருந்தோம்!

ஒகாயா நிறுவனம் ஏற்கனவே ஏவியான்ஐக்யூ சீரிஸ் (AvionIQ Series) மற்றும் கிளாசிக்ஐக்யூ சீரிஸ் (ClassicIQ Series) ஆகிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில் விற்பனைக்கு வந்துள்ள ஒகாயா ஃப்ரீடம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 69,900 ரூபாயில் (எக்ஸ் ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.

1 முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும்... விலை மிகவும் குறைவு... இப்படி ஒரு ஸ்கூட்டரைதான் தேடிகிட்டு இருந்தோம்!

லித்தியம் அயான் மற்றும் லீட்-ஆஸிட் பேட்டரி ஆப்ஷன்களுடன் ஒகாயா ஃப்ரீடம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும். ஹிமாச்சல பிரதேச மாநிலம் பாடி பகுதியில் அமைந்துள்ள தனது ஆலையில், ஃப்ரீடம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஒகாயா நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

1 முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும்... விலை மிகவும் குறைவு... இப்படி ஒரு ஸ்கூட்டரைதான் தேடிகிட்டு இருந்தோம்!

ஒகாயா ஃப்ரீடம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 250 வாட் பிஎல்டிசி ஹப் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிலோ மீட்டர்கள். இந்த வேகம் குறைவு என நீங்கள் நினைத்தால், அதிக வேகத்தில் செல்லக்கூடிய வேரியண்ட்டும் கிடைக்கிறது. இதன் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும்... விலை மிகவும் குறைவு... இப்படி ஒரு ஸ்கூட்டரைதான் தேடிகிட்டு இருந்தோம்!

250 கிலோ மீட்டர்கள் என்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ரேஞ்ச் (ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால் பயணிக்கும் தொலைவு) என்பதில் சந்தேகமில்லை. 48 volts 30 Ah லித்தியம் அயான் வெர்ஷனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும்... விலை மிகவும் குறைவு... இப்படி ஒரு ஸ்கூட்டரைதான் தேடிகிட்டு இருந்தோம்!

அதே நேரத்தில் விஆர்எல்ஏ லீட்-ஆஸிட் வெர்ஷனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 8 முதல் 10 மணி நேரம் வரை ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், டிஜிட்டல் கன்சோல், பகல் நேர விளக்குகள் உடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், ரிமோட் லாக்/அன்லாக், வீல் லாக், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், ரிவர்ஸ் மோடு என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

1 முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும்... விலை மிகவும் குறைவு... இப்படி ஒரு ஸ்கூட்டரைதான் தேடிகிட்டு இருந்தோம்!

ஒகாயா ஃப்ரீடம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் டெலஸ்கோபிக் சஸ்பென்ஸனும், பின் பகுதியில் சிங்கிள் ஷாக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஓரளவிற்கு குறைவான விலையில், நல்ல ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

1 முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும்... விலை மிகவும் குறைவு... இப்படி ஒரு ஸ்கூட்டரைதான் தேடிகிட்டு இருந்தோம்!

ஒகாயா ஃப்ரீடம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 4 வேரியண்ட்களில் கிடைக்கும். இதில் 2 வேரியண்ட்கள் குறைவான வேகத்தில் பயணிக்க கூடியவை. அதே சமயம் எஞ்சிய 2 வேரியண்ட்கள் அதிக வேகத்தில் பயணிக்க கூடியவை. எனவே வாடிக்கையாளர்கள் தங்களது தேவையை பொறுத்து, அதற்கு ஏற்ற வேரியண்ட்டை தேர்வு செய்யலாம்.

1 முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும்... விலை மிகவும் குறைவு... இப்படி ஒரு ஸ்கூட்டரைதான் தேடிகிட்டு இருந்தோம்!

நடப்பு நிதியாண்டில், 14 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வதற்கு முயற்சித்து கொண்டுள்ளதாக ஒகாயா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், அதிக வேகத்தில் பயணிக்க கூடிய மோட்டார்சைக்கிளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் ஒகாயா நிறுவனத்திற்கு 120 டீலர்ஷிப்கள் இருக்கின்றன. வரும் நாட்களில் மேலும் 800 டீலர்ஷிப்களை திறப்பதற்கு ஒகாயா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

1 முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும்... விலை மிகவும் குறைவு... இப்படி ஒரு ஸ்கூட்டரைதான் தேடிகிட்டு இருந்தோம்!

எனவே வரும் காலங்களில் ஒகாயா நிறுவனத்தின் டீலர்ஷிப்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் டீலர்ஷிப்கள் மிகவும் அதிக எண்ணிக்கையில் இருந்தால், ஒகாயா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை நன்றாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும்... விலை மிகவும் குறைவு... இப்படி ஒரு ஸ்கூட்டரைதான் தேடிகிட்டு இருந்தோம்!

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே தொடர்ந்து பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி வருகின்றன. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஓலா எஸ்1 மற்றும் சிம்பிள் ஒன் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

Most Read Articles

English summary
Okaya freedum electric scooter launched in india here are all the details
Story first published: Thursday, September 16, 2021, 23:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X