ஒகினவா மின்சார ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக குறைப்பு... எவ்வளவு தெரியுமா?

மத்திய அரசு கொடுத்துள்ள புதிய சலுகை காரணமாக, ஒகினவா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

ஒகினவா மின்சார ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக குறைப்பு... எவ்வளவு தெரியுமா?

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அதிகரித்தது. இதனால், மின்சார இருசக்கர வாகனங்களின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. மேலும், அரசு அளித்துள்ள மானியச் சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதத்தில் முன்னணி மின்சார இருசக்கர வாகன நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்து வருகின்றன. அண்மையில் ஏத்தர் நிறுவனம் விலை குறைப்பை அறிவித்தது.

ஒகினவா மின்சார ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக குறைப்பு... எவ்வளவு தெரியுமா?

இதைத்தொடர்ந்து, ஒகினவா நிறுவனமும் தற்போது விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒகினவா மின்சார ஸ்கூட்டர்களின் விலை அதிகபட்சமாக ரூ.17,900 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஒகினவா மின்சார ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக குறைப்பு... எவ்வளவு தெரியுமா?

ஒகினவா ஸ்கூட்டர்களின் பழைய விலை மற்றும் விலை குறைப்புக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள புதிய விலை ஆகிய விபரங்களை அட்டவணையில் பார்க்கலாம்.

Model Earlier Now Reduction
iPraise+ ₹1,17,600 ₹99,708 ₹17,892
Praise Pro ₹84,795 ₹76,848 ₹7,947
Ridge+ ₹69,000 ₹61,791 ₹7,203
ஒகினவா மின்சார ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக குறைப்பு... எவ்வளவு தெரியுமா?

ஒகினவா ஐபிரெய்ஸ் ப்ளஸ் மின்சார ஸ்கூட்டர்தான் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருந்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் இந்த ஸ்கூட்டரின் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மானியம் அதிகரிக்கப்பட்டதையடுத்து, இதன் விலை ரூ.17,892 வரை குறைந்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் சில முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஒகினவா மின்சார ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக குறைப்பு... எவ்வளவு தெரியுமா?

ஒகினவா ஐபிரெய்ஸ் ப்ளஸ் ஸ்கூட்டரில் 1kW பிஎல்டிசி எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்ப்பட்டு இருக்கிறது. இதன் கழற்றி மாட்டும் வசதி கொண்ட லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் வரை செல்லும் வாய்ப்பை வழங்கும் எனஅறு தெரிவிக்கப்படுகிறது. பேட்டரியில் பூஜ்யத்திலிருந்து 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றுவதற்கு ஒரு மணிநேரமும், முழுமையாக சார்ஜ் ஏற்றுவதற்கு 3 மணிநேரமும் பிடிக்கும். மணிக்கு 58 கிமீ வேகம் வரை செல்லும்.

ஒகினவா மின்சார ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக குறைப்பு... எவ்வளவு தெரியுமா?

ஒகினவா ஐ பிரெய்ஸ் ப்ளஸ் ஸ்கூட்டரில் ஐஓடி தொழில்நுட்பம் மூலமாக அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன் செயலியுடன் இணைத்து நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும். மேலும், அவசர சமயத்திற்காக சில முக்கிய குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் மொபைல்போன் எண்களையும் பதிவு செய்து முடியும். ஜியோ ஃபென்சிங் வசதியும், ரிமோட் இம்மொபைலைசர் தொழில்நுட்பமும் உள்ளது.

ஒகினவா மின்சார ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக குறைப்பு... எவ்வளவு தெரியுமா?

அண்மையில் ஃபேம்-2 திட்டத்தில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியம் அதிகரிக்கப்பட்டது. அதாவது, பேட்டரியின் ஒரு kWh திறனுக்கு ரூ10,000 ஆக இருந்த மானியம், ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால், மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரியின் ஒவ்வொரு kWh திறனுக்கும் ரூ.5,000 வரை மானியம் கூடுதலாக கிடைக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஒகினவா மின்சார ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக குறைப்பு... எவ்வளவு தெரியுமா?

இதனையடுத்து, மின்சார இருசக்கர வாகனங்களின் விலையை அனைத்து நிறுவனங்களும் குறைத்து வருகின்றன. மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து, விற்பனை சூடுபிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Okinawa Autotech drops the prices of its electric scooters by up to Rs 17,900 after the FAME II Incentive revision. The brand's flagship Okinawa iPraise+ is now priced at Rs 99,708, ex-showroom.
Story first published: Wednesday, June 16, 2021, 16:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X