புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எந்த நிறம் கொடுக்கலாம்? இணையவாசிகளின் கருத்தை கேட்ட சிஇஓ!

ஓலா கேப்ஸின் ஒரு பகுதியாக விளங்கும் ஓலா எலக்ட்ரிக் பிராண்டில் இருந்து மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சில வாரங்களில் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளிவரவுள்ளது.

புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எந்த நிறம் கொடுக்கலாம்? இணையவாசிகளின் கருத்தை கேட்ட சிஇஓ!

இந்த நிலையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஒ பாவிஷ் அகர்வால் இந்த இ-ஸ்கூட்டர் குறித்த முக்கிய தகவல் ஒன்றை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எந்த நிறம் கொடுக்கலாம்? இணையவாசிகளின் கருத்தை கேட்ட சிஇஓ!

இந்திய சந்தையில் வேகமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை விரிவடைந்து வருகிறது. இதனை சரியாக பயன்படுத்தி கொண்டு சொந்தமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கவுள்ளதாக ஓலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எந்த நிறம் கொடுக்கலாம்? இணையவாசிகளின் கருத்தை கேட்ட சிஇஓ!

அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் வெளியாகி இருந்த ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன. அதற்கு பிறகு தற்போது இரண்டாவது முறையாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய அப்டேட் நிறுவனத்தின் சிஇஓ மூலம் வெளியாகியுள்ளன.

புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எந்த நிறம் கொடுக்கலாம்? இணையவாசிகளின் கருத்தை கேட்ட சிஇஓ!

இந்த டுவிட்டர் பதிவில் அகர்வால், ஓலா ஸ்கூட்டருக்கு ஏற்கனவே கருப்பு நிறத்தை தேர்வு செய்துள்ளோம். இதனுடன் வேறெந்த நிறம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எந்த நிறம் கொடுக்கலாம்? இணையவாசிகளின் கருத்தை கேட்ட சிஇஓ!

நெதர்லாந்தை சேர்ந்த எடர்கோ பிவி நிறுவனத்தை ஓலா க்ரூப் கடந்த 2020 மே மாதத்தில் விலைக்கு வாங்கியது. இதன் காரணமாகவே ஓலாவின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எடர்கோ ஆப்ஸ்கூட்டரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எந்த நிறம் கொடுக்கலாம்? இணையவாசிகளின் கருத்தை கேட்ட சிஇஓ!

இந்தியாவில் இந்த ஓலா இ-ஸ்கூட்டரின் முதல் தொகுப்பு நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது தொகுப்பில் இருந்து வேண்டுமானால், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு அதன் புதிய தொழிற்சாலையை பயன்படுத்தலாம்.

புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எந்த நிறம் கொடுக்கலாம்? இணையவாசிகளின் கருத்தை கேட்ட சிஇஓ!

இந்த புதிய தொழிற்சாலைக்காக தயாரிப்பு நிறுவனம் சுமார் ரூ.2,400 கோடியை முதலீடு செய்துள்ளது. வருடத்திற்கு 2 மில்லியன் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு திறன் உடன் கட்டமைக்கப்பட்டு வரும் இந்த ஓலா தொழிற்சாலை கிட்டத்தட்ட 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola CEO Bhavish Aggarwal asks colour options for electric scooter hints to launch soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X