ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. எதிர்பார்க்கவே இல்ல... இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது என்பது பற்றிய தகவலை நிறுவனத்தின் சிஇஓ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!!

பிரபல கால் டாக்சி சேவை நிறுவனமான ஓலா மிக விரைவில் மின் வாகன விற்பனையை இந்தியாவில் தொடங்க இருக்கின்றது. இதற்காக உலகின் பிரமாண்டமான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை நிறுவனம் தமிழகத்தில் கட்டமைத்து வருகின்றது. ஓசூரிலேயே அந்த தொழிற்சாலை உருவாகி வருகின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!!

இங்கிருந்தே உலக நாடுகள் பலவற்றிற்கு மின் வாகனங்களை ஏற்றுமதி செய்ய ஓலா திட்டமிட்டுள்ளது. ஓலாவின் இத்திட்டம் மின் வாகன பிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த எதிர்பார்ப்பு இந்தியாவில் சற்று அதிகமாகவே தென்படுகின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!!

ஆமாங்க, இந்தியர்கள் மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான வரவேற்பு எதிர்பார்த்திராத வகையில் கூடுதலாக தென்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைத்திருக்கும் புக்கிங் எண்ணிக்கை இருக்கின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!!

இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஒரு லட்சம் புக்கிங், முன்பதிவு பணிகள் தொடங்கப்பட்ட ஒரே கிடைத்திருக்கின்றது. ரூ. 499 என்ற முன் தொகையில் முன் பதிவு பணிகள் தொடங்கின என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!!

நாட்டில் இத்தகைய வரவேற்பைப் பெறும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவேவாகும். இந்த மாதிரியான சூழ்நிலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவலை நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அக்கர்வால் வெளியிட்டுள்ளார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!!

வரும் ஆகஸ்டு 15ம் தேதி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இது அதிகாரப்பூர்வ தகவலாகும். இன்று அதி-காலையே இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை பவிஷ் உறுதி செய்தார். கடந்த சில தினங்களாகவே ஸ்கூட்டர் குறித்த சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்டு, இந்திய இளைஞர்களைக் கிரங்கடிக்க செய்யும் செயலில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!!

இந்த நிலையில், துள்ளியமான அறிமுகம்குறித்த தகவலை வெளியிட்டு மேலும் இந்திய இளைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றார் பவிஷ். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் டுவீட்டில், "ஸ்கூட்டரை முன்பதிவு செய்த அனைவருக்கும் நன்றிகள்!. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்டு 15ம் அன்று வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. அன்றைய தினம் மின் வாகனம் குறித்த அனைத்து தகவலும் வெளியிடப்படும்" என கூறியுள்ளார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 10 விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. மேலும், இதனை நேரடியாக வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது டீலர்கள் இன்றி நேரடியாக இருசக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!!

ஏற்கனவே கிடைத்திருக்கும் தகவலின்படி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழுமையான சார்ஜில் 150 கிமீ தூரம் பயணிக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!!

இணைப்பு வசதி, நேவிகேஷன் வசதி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் அதில் எதிர்பார்க்கப்படுகின்றன. இவையே இந்திய இளைஞர்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளன.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!!

தமிழகத்தில் உருவாகி வரும் ஓலா நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 10 மில்லியன் அலகு தயாரிப்பு எனும் திறனில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இதுபோன்ற பிரமாண்ட மின் வாகன உற்பத்தி ஆலை உலகில் வெறு எங்குமே இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வருமானால் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஏத்தர் 450 எக்ஸ், டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஒகினாவா மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் ஆகிய மின் வாகனங்களுக்கு கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. எதிர்பார்க்கவே இவ்ளோ சீக்கிரமே அறிமுகமாக போகுதா!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்த விலையுயர்வைச் சமாளிப்பதற்கான ஓர் மாற்று வழியாக மின் வாகனங்கள் உள்ளன. இவற்றிற்கான வரவேற்பும் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே பிரமாண்டமான திட்டத்துடன் ஓலா இந்தியாவில் களமிறங்கியிருக்கின்றது. ஆகையால், இது மின்வாகன பிரிவில் நல்ல வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Ola CEO Reveals Electric Scooter Launch Date. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X