எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்யும் பணிகளை தொடங்கியது ஓலா... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்யும் பணிகளை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்யும் பணிகளை தொடங்கியது ஓலா... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்யும் பணிகளை தற்போது தொடங்கியுள்ளது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்யும் பணிகளை தொடங்கியது ஓலா... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் முழுவதுமாக உருமறைப்பு செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்க கூடியது என சமீபத்தில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்யும் பணிகளை தொடங்கியது ஓலா... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 100 கிலோ மீட்டர் ரேஞ்ச் என்பது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சவாலான விலையை நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்யும் பணிகளை தொடங்கியது ஓலா... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

தமிழகத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் ஆலையை அமைப்பதற்காக, 2,400 கோடி ரூபாயை முதலீடு செய்வதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்யும் பணிகளை தொடங்கியது ஓலா... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப் மற்றும் ஏத்தர் 450எக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் போட்டியிடும். அனேகமாக நடப்பு 2021ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்யும் பணிகளை தொடங்கியது ஓலா... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 45 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெவ்வேறு அளவுடைய பேட்டரிகளுடன் பல்வேறு வேரியண்ட்களில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரலாம் எனவும் கூறப்படுகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்யும் பணிகளை தொடங்கியது ஓலா... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ற வேரியண்ட்டை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரீமியம் மாடலாக நிலைநிறுத்தப்படலாம். எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லைட், அலாய் வீல்கள், முன் பகுதியில் டிஸ்க் பிரேக், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதிகளுடன் கலர் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சோதனை செய்யும் பணிகளை தொடங்கியது ஓலா... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்று வருகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எனவே முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது, பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, January 29, 2021, 21:02 [IST]
English summary
Ola Electric Begins Testing Of Electric Scooter - Here Are All Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+