ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த நிறத்தில் வாங்க ஆசை? ரசிகர்களின் கருத்துகளை கேட்ட சிஇஓ!!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எந்தெந்த நிறங்களை கொடுக்கலாம் என ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் விருப்பத்தை கேட்டுள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த நிறத்தில் வாங்க ஆசை? ரசிகர்களின் கருத்துகளை கேட்ட சிஇஓ!!

மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த நிறத்தில் வாங்க ஆசை? ரசிகர்களின் கருத்துகளை கேட்ட சிஇஓ!!

வெறும் ரூ.499 என்ற முன் தொகையுடன் துவங்கப்பட்டுள்ள இந்த முன்பதிவுகள் முதல் 24 மணிநேரத்திற்குள்ளேயே 1 லட்சத்தை கடந்திருப்பது தான் தற்சமயம் இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த நிறத்தில் வாங்க ஆசை? ரசிகர்களின் கருத்துகளை கேட்ட சிஇஓ!!

இந்த நிலையில் தற்போது சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஓலாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு என்னென்ன நிறங்களை தேர்வுகளாக வழங்கலாம் என நெட்டிசன்களிடம் கருத்து கேட்டுள்ளார். இதற்காக சில நிறங்களையும் அவர் கொடுத்துள்ளார்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த நிறத்தில் வாங்க ஆசை? ரசிகர்களின் கருத்துகளை கேட்ட சிஇஓ!!

அதாவது நெட்டிசன்கள் எந்த நிறங்களில் ஓலா ஸ்கூட்டர்களை எதிர்பார்க்கின்றனர் என்பதை அந்த நிறங்களை தேர்வு செய்து தங்களது விருப்பங்களை சொல்லலாம். இதில் வெளிர் நிறங்களாக சிவப்பு, மஞ்சள், நீலம் உள்ளிட்டவை முதல் தேர்வாக உள்ளன.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த நிறத்தில் வாங்க ஆசை? ரசிகர்களின் கருத்துகளை கேட்ட சிஇஓ!!

இரண்டாவது தேர்வில் சில்வர், கோல்டு மற்றும் பிங்க் நிறங்கள் உள்ளன. இவை மெட்டாலிக் ஷேடில் வழங்கப்படுமாம். மூன்றாவது தேர்வில் கருப்பு, நீலம் மற்றும் க்ரே நிறங்கள் அடங்குகின்றன. இவை மேட் ஷேடில் கொடுக்கப்படுமாம். இந்த மூன்று தேர்வுகள் இல்லாமல் நான்காவதாக ஒரே தேர்வையும் பாவிஷ் அகர்வால் வழங்கியுள்ளார்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த நிறத்தில் வாங்க ஆசை? ரசிகர்களின் கருத்துகளை கேட்ட சிஇஓ!!

மேலுள்ள மூன்று நிறத்தேர்வுகளையும் விரும்புவோர் இந்த நான்காவது தேர்வை க்ளிக் செய்யலாமாம். மேலும் இந்த டுவிட்டர் பதிவின் மூலம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான நிறங்கள் இன்றோடு இறுதி செய்யப்படவுள்ளன எனவும் சிஇஓ தெரிவித்துள்ளார்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த நிறத்தில் வாங்க ஆசை? ரசிகர்களின் கருத்துகளை கேட்ட சிஇஓ!!

இந்த ட்விட்டை தொடர்ந்து, வெள்ளை நிறத்தில் ஒன்றை முயற்சி செய்துள்ளோம். உங்களது கருத்து என்ன? என கேட்டவாறு வெள்ளை நிறத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் படத்துடன் மற்றொரு பதிவையும் பாவிஷ் அகர்வால் பதிவிட்டுள்ளார்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த நிறத்தில் வாங்க ஆசை? ரசிகர்களின் கருத்துகளை கேட்ட சிஇஓ!!

உண்மை சொல்ல வேண்டுமென்றால், கருப்பு நிறம் போல் வெள்ளையும் ஓலா இ-ஸ்கூட்டருக்கு எடுப்பாக உள்ளது. இதேபோல் கடந்த வாரத்தில் ஓலா இ-ஸ்கூட்டருக்கு உங்களது நிறம் என்ன? என பாவிஷ் அகர்வால் நெட்டிசன்களிடம் கேட்டிருந்தார்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த நிறத்தில் வாங்க ஆசை? ரசிகர்களின் கருத்துகளை கேட்ட சிஇஓ!!

ஆனால் தற்போது போல் கருத்து கணிப்பு எதைவும் அப்போது வைக்கவில்லை. இருப்பினும் கருப்பு நிறத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும் என்பதை அப்போதே உறுதிப்படுத்தி இருந்தார்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த நிறத்தில் வாங்க ஆசை? ரசிகர்களின் கருத்துகளை கேட்ட சிஇஓ!!

கருப்பு நிறத்துடன் வேறென்ன நிறங்கள் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பொருத்தமாக இருக்கும் என அந்த டுவிட்டர் பதிவில் கேட்டிருந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். அதற்கு பலர் தங்களது கருத்துகளை தெரிவித்திருந்தனர். அதேபோல் இந்த கருத்து கணிப்பிற்கும் பலர் தங்களது பிடித்த நிறங்களை க்ளிக் செய்து வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Bhavish Aggarwal Ola Electric Color Option Polling Tweet.
Story first published: Monday, July 19, 2021, 22:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X