புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு!

டாக்சி மார்க்கெட்டில் ஜாம்பவான் நிறுவனமாக உள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பிலும் இறங்கி உள்ளது. இதற்காக, ஓசூரில் உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையை அமைக்கும் பணிகளையும் துவங்கி இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய ஆலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கும் வாய்ப்புகள் எழுந்துள்ளன.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு!

இந்த சூழலில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சோதனை ஓட்டம் நடந்து வருவது குறித்த ஸ்பை படங்கள் வெளியாகின.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு!

இதனால், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் பணிகளையும், அதனை உற்பத்தி செய்வதற்கான ஆலையை அமைக்கும் பணிகளையும் துரிதப்படுத்தி உள்ளது ஓலா.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதேபோன்று, மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கும்.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு!

இதனால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே ஓலா நிறுவனம் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எடெர்கோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு!

இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வரும் ஆப்ஸ்கூட்டர் மாடலின் அடிப்படையிலேயே புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வர இருப்பதாக கருதப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழற்றி மாட்டும் வசதி கொண்ட 7.5 கிலோ எடையுடைய பேட்டரி தொகுப்பு உள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 2.3 மணிநேரம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு!

எடெர்கோ ஆப்ஸ்கூட்டர் அடிப்படையிலான மாடலாக இருந்தால் மிகச் சிறப்பான ரேஞ்ச் மற்றும் அதிகபட்ச ஸ்டோரேஜ் இடவசதியையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பண்டிகை காலத்தில் புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. விலையும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுவதால், போட்டியாளர்களைவிட சிறந்த தேர்வாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
English summary
OLA is gearing up to launch of it's first electric scooter in India very soon.
Story first published: Saturday, February 27, 2021, 12:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X