சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15ம் தேதி (இன்று) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

ஓலா எஸ்1 (Ola S1) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதான் உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி ஆலையாக கருதப்படுகிறது.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

ஃப்யூச்சர்ஃபேக்டரி (Futurefactory) என அழைக்கப்படும் இந்த தொழிற்சாலையில் முதல் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் இன்று காலை அறிவித்தார். இதை தொடர்ந்து ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

நாங்கள் ஏற்கனவே கூறியபடி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ்1 என்ற பெயரில் அழைக்கப்படும். அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயர்ந்த வேரியண்ட் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) என்ற பெயரில் அழைக்கப்படும். மொத்தம் 10 வண்ண தேர்வுகளில் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

வழக்கமான வீட்டு சாக்கெட் மூலம் சார்ஜ் செய்தால், ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை நிரப்புவதற்கு 6 மணி நேரம் ஆகும். அதே சமயம் ஓலா ஃபாஸ்ட் சார்ஜர்கள் மூலம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். இது மிக சிறப்பான விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரிவர்ஸ் கியர் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்க்கிங் செய்வது மிகவும் எளிமையாக இருக்கும். அத்துடன் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் வசதியையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது. நாம் தேர்வு செய்யும் ரைடிங் மோடை பொறுத்து, ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெவ்வேறு வகையான சப்தங்களை உருவாக்கும்.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

அத்துடன் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது. பாடல்களை கேட்பதற்கு இதனை பயன்படுத்தலாம். அத்துடன் போன் கால்களை எடுப்பதற்கும் இந்த ஸ்பீக்கர் ரைடர்களை அனுமதிக்கிறது. மேலும் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரிய பூட் ஸ்பேஸ் உடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 2 ஹெல்மெட்களை வைக்கலாம்.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 99,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஓலா எஸ்1 ப்ரோ வேரியண்ட்டின் விலை 1,29,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் எந்த மாநிலத்தில் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குகிறீர்கள் என்பதை பொறுத்து விலை மாறுபடும். உங்கள் மாநிலத்தில் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு? என்பதை கீழே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

இவை மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசு வழங்கும் ஃபேம் இந்தியா-2 மானியங்களுக்கு பிறகான எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிலோ மீட்டர்கள் ஆகும். அதே சமயம் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 121 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும்.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டி விடும். அதே சமயம் ஓலா எஸ்1 ப்ரோ வேரியண்ட்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 115 கிலோ மீட்டர்கள். இந்த வேரியண்ட்டின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 181 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பான ரேஞ்ச் என்பதில் சந்தேகமில்லை.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

இந்த வேரியண்ட் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டி விடும். ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளன. நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் என மொத்தம் 3 ரைடிங் மோடுகள் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

இதில், நார்மல் மோடில் ஓரளவிற்கு செயல்திறனை எதிர்பார்க்கலாம். அதே சமயம் ஹைப்பர் மோடு மிகவும் வேகமானதாக இருக்கும். இவை இரண்டுக்கும் இடைப்பட்டதாக ஸ்போர்ட் மோடு இருக்கும். அதே சமயம் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 8.5 kW மோட்டாரும், 3.92 kWh பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் 750W போர்ட்டபிள் சார்ஜரை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வழங்கும்.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

இதை வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வீடு அல்லது வேறு ஏதேனும் ஒரு இடத்தில் பொருத்தி கொள்ளலாம். நாங்கள் ஏற்கனவே கூறியபடி இதன் மூலம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

அத்துடன் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த செக்மெண்ட்டிலேயே இதுதான் மிகவும் பிரகாசமான ஸ்க்ரீன் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏத்தர் 450எக்ஸ் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன், ஓலா எஸ்1 போட்டியிடும்.

சூப்பரான விலையில் விற்பனைக்கு வந்தது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இப்பவே வாங்கணும் போல இருக்கே!

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக உள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ள ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பினால், 499 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Ola electric scooter launched in india here are all the details
Story first published: Sunday, August 15, 2021, 15:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X