ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிலோ மீட்டர்கள் பயணிக்கும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. எனவே நிறைய பேர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதற்குதான் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், பல முன்னணி நிறுவனங்கள் தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து வருகின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

தற்போதைய நிலையில் ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் என நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த வரிசையில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது சிம்பிள் ஒன் (Simple One) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

பெங்களூர், சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில்தான் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதன்பின்னர் படிப்படியாக மற்ற நகரங்களிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். முதலில் மார்க்2 என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது சிம்பிள் ஒன் என மாற்றப்பட்டு விட்டது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான், சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கியமான போட்டியாளராக இருக்கும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 240 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இது ஈக்கோ மோடில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கும் ரேஞ்ச் ஆகும். இது மிகவும் சிறப்பான ரேஞ்ச் என்பதில் சந்தேகமே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும் வேறு எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விடவும் இந்த ரேஞ்ச் மிகவும் அதிகம் ஆகும். அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் ஆகும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3.6 வினாடிகளில் எட்டி விடும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.8 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. டச்ஸ்க்ரீன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் நேவிகேஷன் உள்பட பல்வேறு வசதிகளுடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

அதேபோல் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைனும் அசத்துகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் முக்கோண வடிவ ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முக்கோண வடிவ எல்இடி பகல் நேர விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு விதங்களிலும் அசத்தும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

எனினும் 1.1 லட்ச ரூபாய் முதல் 1.2 லட்ச ரூபாய் வரையிலான விலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் விலை மட்டுமே. முன்னதாக சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மலிவாகதான் இருக்கும் என சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தெரிவித்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

அத்துடன் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகள் கிடைக்கும்பட்சத்தில், சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை கணிசமாக குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இதேபோல் பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த சலுகைகள் கிடைக்கும்பட்சத்தில் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறைவாகதான் இருக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், வசதிகள், டிசைன் ஆகிய அம்சங்களை கணக்கில் கொள்ளும்போது, இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 15ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள மற்றொரு தயாரிப்பான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. புக்கிங் தொடங்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பலரும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். இதுதவிர வரும் காலங்களில் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், எலெக்ட்ரிக் பைக்குகளும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

எனவே எதிர்காலத்தில் இந்திய சந்தையில் நிறைய எலெக்ட்ரிக் டூவீலர்களை நாம் பார்க்க முடியும். எலெக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிமீ ஓடும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

ஹூண்டாய் நிறுவனமும் கூட சப்-4 மீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒன்றை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய சந்தையில் தற்போது அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக இருப்பது, டாடா நெக்ஸான் சப்-4 மீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Ola electric scooter rival simple one to launch on 15th august here are all the details
Story first published: Thursday, August 5, 2021, 13:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X