என்னென்ன வசதிகளுக்காக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்? முன்பதிவு செய்யும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!

இந்தியாவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் வாகனங்களில் ஸ்கூட்டர்கள் தான் எப்போதும் அதிகம். அதிலும் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் ப்ரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகைக்கு பிறகு களைக்கட்ட துவங்கியுள்ளது.

என்னென்ன வசதிகளுக்காக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்? முன்பதிவு செய்யும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!

இந்த பிரிவில் ஏத்தர் 450எக்ஸ், டிவிஎஸ் ஐக்யுப் மற்றும் பஜாஜ் சேத்தக் உள்ளிட்டவை பிரபலமான மாடல்களாக உள்ளன. இதனால் முன்பதிவுகளை குவித்துவரும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் விற்பனையில் போட்டி உண்டு.

என்னென்ன வசதிகளுக்காக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்? முன்பதிவு செய்யும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!

தமிழ்நாட்டில் வருடத்திற்கு 10 மில்லியன் இ-ஸ்கூட்டர்களை தயாரிக்கும் அளவிற்கு திறன் கொண்ட தொழிற்சாலையை உருவாக்கி வரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்த விற்பனை போட்டியினை எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளது என்பதினை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

என்னென்ன வசதிகளுக்காக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்? முன்பதிவு செய்யும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!

இருக்கைக்கு அடியில் மிக பெரிய சேமிப்பிடம் என்பதை ஹைலைட்டாக முன்வைத்தே ஓலாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டரில் பொருட்களை வைப்பதற்கான இடம் இரு முழு ஹெல்மெட்களை வைக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகளுக்காக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்? முன்பதிவு செய்யும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இருக்கைக்கு அடியில் பெரிய அளவில் இடவசதி கொடுப்பதில்லை என்கிற கருத்து உள்ளது. அதனை ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிவர்த்தி செய்துள்ளது. அடுத்தது, ஸ்கூட்டரை மொபைல் போன் செயலி மூலம் கட்டுப்படுத்துதல்.

என்னென்ன வசதிகளுக்காக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்? முன்பதிவு செய்யும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை லாக் செய்வதையும், அன்லாக் செய்வதையும் மொபைல் போன் மூலமாகவே மேற்கொள்ளலாம். இத்தகைய வசதி நிச்சயம் அடுத்த தலைமுறைக்கானது என்றுதான் சொல்ல வேண்டும்.

என்னென்ன வசதிகளுக்காக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்? முன்பதிவு செய்யும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!

மூன்றாவது சிறப்பம்சம், ஓலா சிஇஓ பாவிஷ் தங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் பிரிவிலேயே அதிக ரேஞ்சை கொண்ட மாடலாக இருக்கும் என கூறியிருந்தார். குறிப்பாக இதன் முக்கிய போட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக பார்க்கப்படுகின்ற ஏத்தர் 450எக்ஸ் மற்றும் டிவிஎஸ் ஐக்யுப்-ஐ காட்டிலும் அதிக ரேஞ்ச் உடன் இருக்கும் என கூறப்படுகிறது.

என்னென்ன வசதிகளுக்காக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்? முன்பதிவு செய்யும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!

ரேஞ்ச் என்பது 100%-இல் இருந்து 0% வரையிலான பேட்டரி சார்ஜில் அதிகப்பட்சாக பயணிக்கும் தொலைவாகும். முன்னதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 50 சதவீத சார்ஜை வெறும் 18 நிமிடங்களில் நிரப்பிவிடலாம் என்றும், இந்த சார்ஜிலேயே அதிகப்பட்சமாக 75 கிமீ தூரத்திற்கு பயணிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.

என்னென்ன வசதிகளுக்காக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்? முன்பதிவு செய்யும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!

இந்த வகையில் பார்த்தோமேயானால், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 150 கிமீ ஆகும். ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் ரேஞ்ச் 85கிமீ-இல் தான் உள்ளது. அதிலும் நமது தமிழ்நாட்டில் தயாராகும் டிவிஎஸ் ஐக்யூப்பின் ரேஞ்ச் மொத்தமே 75 கிமீ தான்.

என்னென்ன வசதிகளுக்காக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்? முன்பதிவு செய்யும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!

அத்துடன் எல்இடி விளக்கு, முன்பக்க டிஸ்க் ப்ரேக், விரைவாக சார்ஜிங் திறன் போன்ற வழக்கமான அம்சங்களையும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது. இதனால் விற்பனையில் ஜொலிக்க ஓலா வாகனத்திற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola electric scooter's key features, higher range than Ather 450X & TVS iQube.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X