ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய ஆசையா? உங்க வீட்டுக்கே இலவசமா கொண்டு வந்து தராங்க!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்வதற்காக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பணி அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய ஆசையா? உங்க வீட்டுக்கே இலவசமா கொண்டு வந்து தராங்க!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது. சுதந்திர தினத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய ஆசையா? உங்க வீட்டுக்கே இலவசமா கொண்டு வந்து தராங்க!

499 ரூபாய் செலுத்தி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே சமயம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் டெஸ்ட் ரைடு செய்யலாம். விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்யலாம் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய ஆசையா? உங்க வீட்டுக்கே இலவசமா கொண்டு வந்து தராங்க!

ஓலா எலெக்ட்ரிக் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக டெஸ்ட் ரைடு செய்வதற்கு புக்கிங் செய்யலாம். உங்கள் வீட்டிற்கே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டு வரப்படும். மேலும் நகர பகுதிகளில் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை (Experience Centers) அமைக்கும் பணிகளிலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய ஆசையா? உங்க வீட்டுக்கே இலவசமா கொண்டு வந்து தராங்க!

சாத்தியமுள்ள வாடிக்கையாளர்கள் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பாக இங்கும் டெஸ்ட் ரைடு செய்யலாம். வரும் அக்டோபர் மாதத்திற்குள் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் அமைக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரண்டு மாடல்களையும் டெஸ்ட் ரைடு செய்வதற்கு உரிய ஓட்டுனர் உரிமம் அவசியம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய ஆசையா? உங்க வீட்டுக்கே இலவசமா கொண்டு வந்து தராங்க!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய வேண்டுமென்றால், நீங்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அத்துடன் இழு முழுக்க முழுக்க இலவசம். ஓலா எஸ்1 வேரியண்ட்டின் விலை 99,999 ரூபாய் ஆகவும், எஸ்1 ப்ரோ வேரியண்ட்டின் விலை 1.29 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய ஆசையா? உங்க வீட்டுக்கே இலவசமா கொண்டு வந்து தராங்க!

இது மாநில அரசுகள் வழங்கும் மானியத்திற்கு முந்தைய எக்ஸ் ஷோரூம் விலையாகும். மானியம் கிடைக்கும் மாநிலங்களில் விலை இன்னும் குறையும். இதன்படி இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில்தான் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் குறைவான விலையில் கிடைக்கிறது. இதேபோல் டெல்லி, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைவான விலையில் கிடைக்கிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய ஆசையா? உங்க வீட்டுக்கே இலவசமா கொண்டு வந்து தராங்க!

ஓலா எஸ்1 மாடலில், 5.5kW எலெக்ட்ரிக் மோட்டாரும், 2.98kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 121 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இது அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை இந்த மாடல் 3.6 வினாடிகளில் எட்டி விடும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய ஆசையா? உங்க வீட்டுக்கே இலவசமா கொண்டு வந்து தராங்க!

அதே சமயம் இந்த மாடலின் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிலோ மீட்டர் ஆகும். மறுபக்கம் எஸ்1 ப்ரோ வேரியண்ட்டிலும் 5.5kW எலெக்ட்ரிக் மோட்டார்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேரியண்ட்டில் பெரிய 3.97kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 181 கிலோ மீட்டர் பயணிக்க முடியும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய ஆசையா? உங்க வீட்டுக்கே இலவசமா கொண்டு வந்து தராங்க!

இதுவும் அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர் என்ற வேகத்தை எஸ்1 ப்ரோ வேரியண்ட் 3 வினாடிகளிலேயே எட்டி விடும். இந்த வேரியண்ட்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 115 கிலோ மீட்டர் ஆகும். அதற்கு ஏற்ப இந்த வேரியண்ட்டின் விலையும் அதிகம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய ஆசையா? உங்க வீட்டுக்கே இலவசமா கொண்டு வந்து தராங்க!

இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதை வைத்து பார்க்கையில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டெஸ்ட் ரைடு செய்வதற்கு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு வந்து தருவது என்பது நிச்சயமாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பணியாக இருக்க போகிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய ஆசையா? உங்க வீட்டுக்கே இலவசமா கொண்டு வந்து தராங்க!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் காரை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளது. ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாவிஷ் அகர்வால் சமூக வலை தளத்தில் இந்த தகவலை தற்போது உறுதி செய்துள்ளார்.

Most Read Articles

English summary
Ola electric scooter s1 s1 pro test rides from october check details here
Story first published: Tuesday, August 17, 2021, 23:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X