உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்கள்!

நாளை விற்பனைக்கு வரவுள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்கள்!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நாளை (ஆகஸ்ட் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. சுதந்திர தினத்தில் விற்பனைக்கு வரும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்கள்!

வெறும் 499 ரூபாயை முன்பணமாக செலுத்தி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ள முடியும். முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்தில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புக்கிங் செய்து விட்டனர். அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகள் குவிந்துள்ளன.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்கள்!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியா முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன் வசதியையும் வழங்கவுள்ளது. எனவே சரியான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிச்சயமாக இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்கள்!

வேரியண்ட்கள்:

வாடிக்கையாளர்களின் தேவைகளை பொறுத்து, மொத்தம் 3 வேரியண்ட்களில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இதில் முதல் வேரியண்ட் பேஸிக் மாடலாக கருதப்படுகிறது. இதில், 2kW மோட்டார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பேஸிக் வேரியண்ட்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 45 கிலோ மீட்டராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்கள்!

இரண்டாவது மிட்-வேரியண்ட்டாக இருக்கும். இதில், 4kW மோட்டார் வழங்கப்பட்டிருக்கும் எனவும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிலோ மீட்டராக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கடைசி வேரியண்ட் டாப் வேரியண்ட்டாக இருக்கும். இதில், 7kW மோட்டார் வழங்கப்பட்டிருக்கும் எனவும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 95 கிலோ மீட்டர்களாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்கள்!

ரேஞ்ச்:

ஆரம்பத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 240 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என யூகங்கள் கிளம்பின. ஆனால் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 150 கிலோ மீட்டர் என ஓலா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இது நடைமுறை பயன்பாட்டில் கிடைக்கும் ரேஞ்ச் ஆகும்.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்கள்!

பொதுவாக நிறுவனங்கள் வாகனங்கள் இவ்வளவு மைலேஜ் தரும் என வாக்குறுதி அளிக்கும். எனினும் நடைமுறை பயன்பாட்டில் அந்தளவிற்கு மைலேஜ் கிடைக்காது. ஆனால் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இங்கே தெரிவித்திருப்பது நடைமுறை பயன்பாட்டில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்க கூடிய ரேஞ்ச் ஆகும். எனவே தினசரி பயன்பாட்டிற்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிச்சயம் ஏற்றதாக இருக்கும்.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்கள்!

பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு ஆகும் நேரம்:

சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் செய்தால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி பூஜ்ஜியத்தில் இருந்து முழுமையாக நிரம்புவதற்கு சுமார் இரண்டரை மணி நேரம் ஆகும். அதே சமயம் ஹைப்பர் சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் செய்தால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெறும் 18 நிமிடங்களில் 50 சதவீதம் வரை நிரம்பி விடும்.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்கள்!

அதே நேரத்தில் வீட்டில் இருக்கும் ரெகுலர் ப்ளக் மூலம் சார்ஜ் செய்தால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி முழுமையாக நிரம்புவதற்கு சுமார் ஐந்தரை மணி நேரம் வரை ஆகும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி முழுமையாக நிரம்பியவுடன், அதன் உரிமையாளருக்கு செயலியில் அறிவிப்பு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்கள்!

வண்ண தேர்வுகள்:

நாளை விற்பனைக்கு வரவுள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 10 வண்ண தேர்வுகளில் கிடைக்கும் என்பதை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. இந்த 10 வண்ண தேர்வுகளில் 8 வண்ண தேர்வுகளை ஓலா நிறுவனம் வெளியிட்டு விட்டது. ஆனால் இன்னும் இரண்டு வண்ண தேர்வுகளின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்கள்!

உற்பத்தி:

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் தொழிற்சாலையில்தான் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதுதான் உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி தொழிற்சாலையாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டிற்கும் பெருமை என்பதில் நமக்கு சந்தேகமில்லை.

உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகம்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல்கள்!

போட்டியாளர்கள்:

இந்திய சந்தையில் ஏத்தர் 450எக்ஸ், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உடன் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியிடும். இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில், விலை நிர்ணயம் சரியாக இருந்தால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரும் வரவேற்பை பெறும்.

Most Read Articles

English summary
Ola electric scooter to launch in india tomorrow check all details here
Story first published: Saturday, August 14, 2021, 15:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X