இன்று தொடங்குகிறது ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள்... இதுக்குதாங்க ரொம்ப நாளா காத்திருக்கோம்!

இதோ இப்போ தொடங்கிவிடும்... அப்போ தொடங்கிவிடும்... என எதிர்பார்க்கப்பட்டு வந்த ஓலா மின்சார ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் இன்று தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இன்று தொடங்குகிறது ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள்... இதுக்குதாங்க ரொம்ப நாளா காத்திருக்கோம்!

ஓலா நிறுவனம் அதன் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகளை இன்று தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் தற்போது சமூக வலை தளம் வாயிலாக வெளியாகியிருக்கின்றன.

இன்று தொடங்குகிறது ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள்... இதுக்குதாங்க ரொம்ப நாளா காத்திருக்கோம்!

மிக சமீபத்தில் ஓலா நிறுவனத்தின் சிஇஓ ஓர் வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டெலிவரிக்காக கன்டெய்னர் லாரிகளில் ஏற்றி அனுப்பவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள் இன்று (நவம்பர் 15) தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று தொடங்குகிறது ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள்... இதுக்குதாங்க ரொம்ப நாளா காத்திருக்கோம்!

ஏற்கனவே மின்சார ஸ்கூட்டர்களின் முதல் பேட்ஜ் வெளியேற்றப்பட்டுவிட்டதால் மிக விரைவில் அதன் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. ஓலா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனையாளர்கள் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்காது என்பது கவனிக்கத்தகுந்தது.

இன்று தொடங்குகிறது ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள்... இதுக்குதாங்க ரொம்ப நாளா காத்திருக்கோம்!

ஆகையால், புக் செய்த இ-ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று டெலிவரி கொடுக்கப்பட இருக்கின்றது. டெலிவரி பணிகள் கடந்த 25 அக்டோபர் அன்றே தொடங்க இருந்தது. ஆனால், அதில் கால தாமதம் ஏற்பட்டு 10 நவம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இன்று தொடங்குகிறது ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள்... இதுக்குதாங்க ரொம்ப நாளா காத்திருக்கோம்!

இதிலும், தாமதம் ஏற்பட்டு இன்றைய தினத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. டிமாண்டை போக்கும் பொருட்டு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முழு வீச்சில் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது.

10 லட்சம் வரை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு புக்கிங் கிடைத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அமோக வரவேற்பிற்கான நன்றியை நிறுவனத்தின் சிஇஓ ஏற்கனவே சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்திருக்கின்றார். ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 99,999க்கும், ஓலா எஸ்1 ப்ரோ ரூ. 1,29,999க்கும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

இன்று தொடங்குகிறது ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள்... இதுக்குதாங்க ரொம்ப நாளா காத்திருக்கோம்!

ஃபேம் 2 திட்டத்தின்கீழ் கிடைக்கக் கூடிய எக்ஸ்-ஷோரூம் மதிப்பே இதுவாகும். ஓலா நிறுவனம் மின்சார ஸ்கூட்டரின் பக்கம் மக்களைக் கவரும் விதமாக டெஸ்ட் டிரைவ் வழங்கும் பணிகளை தொடங்கியிருக்கின்றது. சென்னை, ஹைதராபாத், கொச்சி, மும்பை, புனே, பெங்களூரு, டெல்லி, அஹமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் மின்சார ஸ்கூட்டர்களை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இன்று தொடங்குகிறது ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள்... இதுக்குதாங்க ரொம்ப நாளா காத்திருக்கோம்!

தமிழகத்தில் உள்ள உற்பத்தி ஆலைகளில் தயாரிக்கப்படும் ஓலா மின்சார ஸ்கூட்டர்களுக்கு நெதர்லாந்து எம்பஸிடம் இருந்து ஆர்டர் கிடைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. சில கஸ்டமைஸுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola electric starts deliveries of s1 and s1 pro electric scooters from today
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X