ஓலா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு!!

ஓலா மின்சார ஸ்கூட்டர் எந்த மாதத்தில் அறிமுகமாக இருக்கின்றது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஓலா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு!!

பிரபல கால் டாக்சி சேவை நிறுவனமான ஓலா விரைவில் மின் வாகன விற்பனையில் களமிறங்க இருக்கின்றது. இதற்கான முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், உலகின் மாபெரும் மின் வாகன உற்பத்தி ஆலையை நமது தமிழகத்தின் ஒசூரில் உருவாக்கி வருகின்றது.

ஓலா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு!!

ஜூன் மாதத்திற்குள் இந்த ஆலை உற்பத்தி பணிக்கு தயாராகி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, வருகின்ற ஜூலை மாதம் ஓலாவின் முதல் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

ஓலா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு!!

ஓலா நிறுவனம் மிக சமீபத்தில் நாடு முழவதும் உள்ள 400 நகரங்களில் ஒரு லட்சம் வரையிலான ஹைபர் சார்ஜர் நிலையங்களை அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு மின் வாகன பயன்பாட்டாளர்களையும், ஆர்வலர்களையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

ஓலா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு!!

இந்த நிலையிலேயே தனது முதல் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் பற்றிய தகவலை நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுமார், 2,400 கோடி முதலீட்டில் ஓலா நிறுவனம் மின் வாகன உற்பத்தியில் களமிறங்கியிருக்கின்றது. இது ஓசூரில் அமைத்து வரும் மின் வாகன உற்பத்தி ஆலையானது ஆண்டு ஒன்றிற்கு 2 மில்லியன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு பிரமாண்ட தொழிற்சாலையாக உருவாகி வருகின்றது.

ஓலா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு!!

இங்கேயே நிறுவனத்தின் உலகிற்கான (இந்தியாவிற்கான) முதல் மின்சார ஸ்கூட்டர் தயாராக உள்ளது. மிக சமீபத்தில் தனது முதல் மின்சார ஸ்கூட்டரின் சார்ஜ் திறன் பற்றிய தகவலை ஓலா வெளியிட்டது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மின்சார ஸ்கூட்டர் வெறும் 18 நிமிட சார்ஜில் 75 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனுடன் விற்பனைக்கு வர இருக்கின்றதாம்.

ஓலா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு!!

18 நிமிடம் சார்ஜ் செய்தாலே 50 சதவீதம் வரை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டார் பெற்று விடும் என்ற ஆச்சரிய தகவலையும் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. ஆனால், இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை ஓலா வெளியிடவில்லை.

ஓலா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு!!

நாடு முழுவதும் அமைக்க இருப்பதாக ஓலா அறிவித்திருக்கும் ஹைபர் மின்வாகன சார்ஜிங் மையங்கள் முக்கியமான பொது இடங்களிலேயே முதலில் அமைய இருக்கின்றது. குறிப்பாக மால், ஐடி கம்பெனி, காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட இடங்களிலேயே அது முதலில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது.

ஓலா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது?.. நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வெளியாகியாச்சு!!

இந்த சார்ஜிங் மையங்களை எளிதில் கண்டறிவதற்காக பிரத்யேக செல்போன் ஆப்பினை ஓலா வழங்க இருக்கின்றது. இந்த ஆப்பின் வாயிலாக சார்ஜிங் மையம் இருக்கும் இடம், ரூட் மற்றும் பிற முக்கிய தகவல்களை வழங்க உதவும்.

Most Read Articles
English summary
Ola Planning Launch Its Electric Scooter In July. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X