அனல் பறக்கும் வேகத்தில் சென்ற Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இவ்ளோ வேகத்துல போக முடியுமா! மிரள வைக்கும் வீடியோ!

Ola ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சாலையை அதிர வைக்கும் வகையில் அதி வேகத்தில் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அனல் பறக்கும் வேகத்தில் சென்ற Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இவ்ளோ வேகத்துல போக முடியுமா! மிரள வைக்கும் வீடியோ!

Ola நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்டு 15ம் தேதி அன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் நாட்டில் அறிமுகம் செய்தது, Ola. இருவிதமான வேரியண்டுகளில் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

அனல் பறக்கும் வேகத்தில் சென்ற Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இவ்ளோ வேகத்துல போக முடியுமா! மிரள வைக்கும் வீடியோ!

S1 மற்றும் S1 Pro ஆகிய இரு வேரியண்டுகளில் அவை கிடைக்கும். இதில், Ola-வின் S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உச்சபட்ச வேகம் என்ன என்பது பற்றிய தகவலே தற்போது வெளி வந்திருக்கின்றது. Ola நிறுவனம் கூறியதன்படி, S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உச்சபட்சமாக மணிக்கு 115 கிமீ வேகத்தில் செல்லும் என கூறப்பட்டது.

அனல் பறக்கும் வேகத்தில் சென்ற Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இவ்ளோ வேகத்துல போக முடியுமா! மிரள வைக்கும் வீடியோ!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளி வந்திருக்கும் வீடியோ அமைந்துள்ளது. ஆம், Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதன் உச்சபட்ச வேகமான மணிக்கு 115 கிமீ வேகத்தில் சாலையில் சீறி செல்லும் காட்சிகளே தற்போது வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த வீடியோவை ஓலா நிறுவனமே அதன் அதிகாரப்பூர்வ யுட்யூப் சோனலில் வெளியிட்டிருக்கின்றது.

அனல் பறக்கும் வேகத்தில் சென்ற Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இவ்ளோ வேகத்துல போக முடியுமா! மிரள வைக்கும் வீடியோ!

கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாகவே Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உச்சபட்ச வேகமான மணிக்கு 115 கிமீ எனும் வேகத்தை எட்டுவதை நம்மால் காண முடிகின்றது. Ola நிறுவனம் S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மூன்று விதமான ரைடிங் மோட்களை வழங்குகின்றது. வழக்கமானது, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைபர் ஆகிய மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அனல் பறக்கும் வேகத்தில் சென்ற Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இவ்ளோ வேகத்துல போக முடியுமா! மிரள வைக்கும் வீடியோ!

இதில், ஹைபர் மோட் வாயிலாகவே பரிசோதனைக்கு உட்படுத்தியபோதே S1 Pro 115 கிமீ வேகத்தை எட்டியது. குறிப்பாக, அது 3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை எட்டியதாகவும், ஐந்து செகண்டுகளுக்குள் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டியதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனல் பறக்கும் வேகத்தில் சென்ற Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இவ்ளோ வேகத்துல போக முடியுமா! மிரள வைக்கும் வீடியோ!

ஆனால், Ola-வின் S1 ஆனது S1 Pro மாடலைக் காட்டிலும் குறைந்த வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக காட்சியளிக்கின்றது. இது அதிகபட்சமாகவே மணிக்கு 90 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லக் கூடியது. இது 3.6 செகண்டுகளுக்குள் பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது குறிப்பிடத்தகுந்தது.

அனல் பறக்கும் வேகத்தில் சென்ற Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இவ்ளோ வேகத்துல போக முடியுமா! மிரள வைக்கும் வீடியோ!

இதேபோன்று இவையிரண்டும் ரேஞ்ஜ் வெளியேற்றத்திலும் (பயண தூரம்) மாறுபட்டவையாக காட்சியளிக்கின்றது. Ola S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 121 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேசமயம், Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 181 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

அனல் பறக்கும் வேகத்தில் சென்ற Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இவ்ளோ வேகத்துல போக முடியுமா! மிரள வைக்கும் வீடியோ!

இத்தகைய அதிகபட்ச பயண தூர திறன்களுடனே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் 8.5 kW திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. அதேசமயம், பேட்டரிகள் மாறுபட்ட திறன்களில் இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

அனல் பறக்கும் வேகத்தில் சென்ற Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இவ்ளோ வேகத்துல போக முடியுமா! மிரள வைக்கும் வீடியோ!

அதாவது, Ola S1 தேர்வில் 2.98 kWh பேட்டரியும், S1 Pro தேர்வில் 3.97 kWh பேட்டரியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக இரண்டும் மாறுபட்ட ரேஞ்ஜைக் கொண்டிருக்கின்றன. இந்த பேட்டரிகளை ஹைப்பர்சார்ஜர் நிலையங்கள் வாயிலாக சார்ஜ் செய்தால் வெறும் 18 நிமிடங்களிலேயேய 75கிமீ தூரத்திற்கு பயணிப்பதற்கான மின்சார திறனை ஏற்றிக் கொள்ள முடியும்.

அனல் பறக்கும் வேகத்தில் சென்ற Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இவ்ளோ வேகத்துல போக முடியுமா! மிரள வைக்கும் வீடியோ!

அதேசமயம், வழக்கமான சார்ஜ் மையங்களில் வைத்து சார்ஜ் செய்தால் முழுமையான சார்ஜை அடையவே ஆறு மணி நேரம் முதல் 6.30 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். நாடு முழுவதிலும் உள்ள 400க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சார்ஜிங் மையங்களை உருவாக்க இருப்பதாக Ola தெரிவித்துள்ளது.

அனல் பறக்கும் வேகத்தில் சென்ற Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இவ்ளோ வேகத்துல போக முடியுமா! மிரள வைக்கும் வீடியோ!

Ola நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இன்னும் பல முக்கிய வசதிகளை வழங்கியிருக்கின்றது. க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் செய்யும் வசதி உள்ளிட்டவற்றை நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இதுமாதிரியான வசதிகளை பிற எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அனல் பறக்கும் வேகத்தில் சென்ற Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இவ்ளோ வேகத்துல போக முடியுமா! மிரள வைக்கும் வீடியோ!

தொடர்ந்து, 7 இன்சிலான தொடுதல் வசதிக் கொண்ட திரை (இது பல்வேறு தகவல்களை மற்றும் தொழில்நுட்ப வசதிகளைப் பெற உதவும்), 4ஜி இணைப்பு, ப்ளூடூத் இணைப்பு மற்றும் Wifi இணைப்பு ஆகிய வசதிகள் Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ளன.

அனல் பறக்கும் வேகத்தில் சென்ற Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இவ்ளோ வேகத்துல போக முடியுமா! மிரள வைக்கும் வீடியோ!

இதேபோன்று பாதுகாப்பு வசதிகளும் Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் குறைச்சலின்றி காணப்படுகின்றது. அந்தவகையில், முன் மற்றும் பின் பக்க வீல்களில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்காக மோனோ-ஷாக் சஸ்பென்ஷன்கள் முன் மற்றும் பின் பக்க வீல்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, ஜியோ ஃபென்சிங், திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம் ஆகியவையும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ளன. Ola நிறுவனம் S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 99,999 என்ற விலையையும், S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 1,29,999 என்ற விலையையும் நிர்ணயித்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ஏற்கனவே ரூ. 499 என்ற குறைந்த முன் தொகையில் புக்கிங் நடை பெற்று வருகின்றது. இவற்றை வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து நிறுவனம் டெலிவரி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola revealed s1 pro electric scooter top speed details
Story first published: Friday, August 20, 2021, 10:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X