ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி எப்போது தொடங்குகிறது தெரியுமா? உற்சாகத்தில் வாடிக்கையாளர்கள்!
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

ஓலா எஸ்1 (Ola S1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ (S1 Pro) என மொத்தம் 2 வேரியண்ட்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும். ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் இதன் டெலிவரி பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் டெலிவரி எப்போது தொடங்கப்படும்? என ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த கேள்விக்கு தற்போது அதிகாரப்பூர்வமான பதில் கிடைத்துள்ளதால், வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆம், ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் வரும் டிசம்பர் 15ம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் இதனை தெரிவித்துள்ளார்.

சமூக வலை தளம் மூலமாக இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாவிஷ் அகவர்வால் சமூக வலை தளத்தில் கூறியிருப்பதாவது: ஸ்கூட்டர்கள் தயாராகி கொண்டுள்ளன. உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதியில் இருந்து டெலிவரி தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறோம்.

பொறுமையாக காத்திருந்தமைக்காக நன்றி! பாவிஷ் அகர்வால் சமூக வலை தளத்தில் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால் கடந்த அக்டோபர் மாதமே ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பல்வேறு சவால்கள் இருந்த காரணத்தால், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் டெலிவரி பணிகளை ஒத்தி வைத்தது.

ஒரு வழியாக டெலிவரி பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இது முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முதல் பர்சேஸ் விண்டோ திறக்கப்பட்டபோது, 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்தது.

இதற்கிடையே இரண்டாவது பர்சேஸ் விண்டோ கடந்த நவம்பர் 1ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் டெலிவரி தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இது டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் இதனையும் கூட ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சமீபத்தில் ஒத்தி வைக்கப்பட்டு விட்டது.

இதன்படி அடுத்த பர்சேஸ் விண்டோ 2022ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் திறக்கப்படவுள்ளது. அதுவும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதியில்தான் அடுத்த பர்சேஸ் விண்டோ திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகவும் வாடிக்கையாளர்கள் பலர் தற்போது ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








